தீபாவளியை முன்னிட்டு ஜெய்ப்பூரில் 'ஸ்வர்ண பிரசாதம்' என்ற தங்கம் மற்றும் வெள்ளி முலாம் பூசப்பட்ட இனிப்பு கிலோ ரூ.1.11 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. 'தியோஹார்' என்ற நிறுவனத்தால் தங்க சாம்பலைப் பயன்படுத்தி இந்த இனிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையின்போது மக்கள் தங்கள் வீடுகளுக்கும், அன்பானவர்களுக்குப் பரிசளிக்கவும் அதிக அளவில் இனிப்புகளை வாங்குவது வழக்கம். பண்டிகை காலத்தில் இனிப்புகளின் விலை சற்று உயர்வது ஆச்சரியமல்ல என்றாலும், ஜெய்ப்பூரில் உள்ள ஒரு இனிப்புக் கடை ஒரு கிலோ ரூ.1.10 லட்சம் விலையில் ஒரு ஸ்வீட் விற்பனைக்கு உள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி முலாம் பூசப்பட்ட இனிப்பை அறிமுகப்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திள்ளது. இந்த விலை உயர்ந்த இனிப்புக்கு 'ஸ்வர்ண பிரசாதம்' (Swarna Prasadam) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஸ்வர்ண பிரசாதம்
'தியோஹார்' (Tyohaar) என்ற பலகார தயாரிப்பு நிறுவனம் இந்த 'ஸ்வர்ண பிரசாதம்' ஸ்வீட்டை உருவாக்கியுள்ளது. இது, அவர்களின் புதிய 'கோல்ட் சீரிஸ்' (Gold Series) வரிசையில் புதிய ஸ்வீட்டாக அறிமுகமாகியுள்ளது. "இந்த இனிப்பு பிரமாதமான சுவையுடன் ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்," என்று உரிமையாளர் அஞ்சலி ஜெயின் கூறுகிறார்.
இந்த புதிய இனிப்பு வகைகளில் தங்கம் மற்றும் வெள்ளி முலாம் பூசப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்படும் தங்கச் சாம்பல் (Gold Ash) வெறும் காட்சிப் பொருள் அல்ல என்றும், இது ஆயுர்வேதத்தில் இருந்து பெற்றது என்றும், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என்றும் நம்பப்படுவதாக ஜெயின் கூறுகிறார்.
ஒரு பீஸ் ரூ.1,950!
இந்த ஸ்வர்ண பிரசாதம் மட்டுமின்றி, மற்ற தங்க இனிப்புகளின் விலையும் அதிகமாகவே உள்ளது. உதாரணத்திற்கு, 'ஸ்வர்ண் பஸ்ம் பாரத்' இனிப்பு ஒரு கிலோ ₹85,000க்கு விற்கப்படுகிறது. ஒரே ஒரு பீஸ் மட்டும் ரூ.1,950 க்கு விற்கப்படுகிறது. இதேபோல சாந்தி பஸ்ம் பாரத் ஒரு பீஸ் விலை ரூ.1,150 க்கு விற்கப்படுகிறது.
