MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 'என்னது முறைச்சா அடிப்பீங்களா?'.. திருமாவளவனுக்கு 'குட்டு' வைத்த நீதிமன்றம்! பரபரப்பு உத்தரவு!

'என்னது முறைச்சா அடிப்பீங்களா?'.. திருமாவளவனுக்கு 'குட்டு' வைத்த நீதிமன்றம்! பரபரப்பு உத்தரவு!

வழக்கறிஞர் ஸ்கூட்டர் மீது கார் மோதிய விவகாரத்தில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. காவல்துறை இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளது.

2 Min read
Author : Rayar r
Published : Oct 17 2025, 07:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வழக்கறிஞர் மீது மோதிய திருமாவளவன் கார்
Image Credit : Asianet News

வழக்கறிஞர் மீது மோதிய திருமாவளவன் கார்

சென்னை உயர்நீதிமன்றம் அருகே விசிக தலைவர் தொல்.திருமாவளவன் சென்ற கார், முன்னாள் சென்ற ஒரு ஸ்கூட்டர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதை அந்த ஸ்கூட்டரை ஓட்டி வந்த வழக்கறிஞர் தட்டிக்கேட்டபோது, திருமாவுடன் வந்தவ‌ர்கள் வழக்கறிஞரை சரமாரியாக தாக்கினார்கள். இது தொடர்பான வீடியோ வைரலாகி பலரும் திருமாவளவனை விமர்சித்தனர்.

24
திருமாவளவன் சர்ச்சை பேச்சு
Image Credit : F/Thirumavalavan

திருமாவளவன் சர்ச்சை பேச்சு

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்துக்கு விளக்கம் கொடுத்த திருமாவளவன், அந்த நபர் வேண்டுமென்றே காருக்கு முன்னாள் ஸ்கூட்டரை நிறுத்தி வம்பிழுத்ததாகவும் விசிகவினர் அவரை தாக்கவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த சம்பவத்தில் பின்னணியில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் சதி உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் ''அந்த நபர் முறைத்து பார்த்ததால் தான் இந்த அடி. அதுவும் சரியா கூட அடிக்கல'' என்று திருமாவளவன் பேசியது கடும் விமர்சனத்துக்கு வழிவகுத்தது.

Related Articles

Related image1
ஸ்கூட்டர் மீது மோதிய திருமாவளவன் கார்! தட்டிக்கேட்ட வழக்கறிஞரை அடித்து துவைத்த விசிகவினர்!
Related image2
திருமா முன்னிலையில் வழக்கறிஞர் மீது தாக்குதல்.. RSS, பாஜக.வின் திட்டமிட்ட சதி - திருமாவளவன் குற்றச்சாட்டு
34
காவல்துறை வழக்குப்பதிவு
Image Credit : Asianet News

காவல்துறை வழக்குப்பதிவு

இதன்பிறகு இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு குழு ஒன்றை அமைத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது 3 பிரிவுகளிலும், விசிகவினர் மீது 2 பிரிவுகளிலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி வழக்கறிஞர் கே.பாலு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

காவல் துறை என்ன செய்தது?

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி செந்தில் குமார், ''உயர்நீதிமன்றம் முன்பு தாக்குதல் சம்பவம் நடந்தும் காவல்துறை வழக்குப்பதிவு மட்டுமே செய்துள்ளது. அதுவும் ஒரு தரப்பினர் தாக்கப்பட்டதில் எப்படி இரண்டு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது? வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட முழு சம்பவமும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இருந்த காவல்துறையினர் என்ன செய்து கொண்டிருந்தனர்?

44
திருமாவளவனுக்கு கண்டனம்
Image Credit : F/Thirumavalavan

திருமாவளவனுக்கு கண்டனம்

மேலும் சம்பவத்தை கட்டுப்படுத்த வேண்டிய அங்கிருந்த தலைவர் (திருமாவளவன்) அதை தடுக்காமல் பிரச்சனையை தூண்டும் வகையில் செயல்பட்டது போல் தெரிகிறது. இந்த விவாகரம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறை விசாரணை நடத்த வேண்டும். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தொல். திருமாவளவன்
தமிழ்நாடு
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கிரிக்கெட்டில் CSK-வையும்; தேர்தலில் TVK-வையும் யாராலும் தொட முடியாது - தவெக தலைவர் விஜய் பேச்சு
Recommended image2
அடுத்த ஜென்மத்தில்.! முதல்வருக்கு திடீரென நன்றி சொன்ன தவெக தலைவர் விஜய்.!
Recommended image3
Now Playing
தஞ்சை தவெக கூட்டம் | திருச்சி விமான நிலையம் வந்தார் தவெக தலைவர் விஜய் !
Related Stories
Recommended image1
ஸ்கூட்டர் மீது மோதிய திருமாவளவன் கார்! தட்டிக்கேட்ட வழக்கறிஞரை அடித்து துவைத்த விசிகவினர்!
Recommended image2
திருமா முன்னிலையில் வழக்கறிஞர் மீது தாக்குதல்.. RSS, பாஜக.வின் திட்டமிட்ட சதி - திருமாவளவன் குற்றச்சாட்டு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved