இந்திய கேப்டன் சுப்மன் கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மெகா சாதனையை எட்ட உள்ளார். அது என்ன? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
இந்தியாவின் புதிய ஒருநாள் போட்டி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மன் கில், மற்றொரு மைல்கல்லை எட்டும் நிலையில் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணியை அவர் வழிநடத்த உள்ளார். இந்த தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை பெர்த்தில் தொடங்குகிறது. சுப்மன் கில்ல் ஒருநாள் போட்டிகளில் 3,000 ரன்களை நிறைவு செய்ய இன்னும் 225 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும்.
சுப்மன் கில்லின் அசத்தல் ஆட்டம்
கில் இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். அதில் 33 ரன்கள் எடுத்துள்ளார். இருப்பினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக அவர் நல்ல ரெக்கார்டை வைத்துள்ளார். அவர்களுக்கு எதிராக விளையாடிய எட்டு ஒருநாள் போட்டிகளில், 35 சராசரியுடன் 280 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு அரைசதம் மற்றும் ஒரு சதம் அடங்கும்.
ஆஸ்திரேலிய தொடரில் சாதிப்பாரா?
ரோஹித் சர்மாவுக்குப் பிறகு ஒருநாள் கேப்டனாக கில்லுக்கு இது முதல் தொடராகும். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடர் ஞாயிற்றுக்கிழமை 50 ஓவர் போட்டிகளுடன் தொடங்குகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகள் அக்டோபர் 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறும். ஐந்து டி20 போட்டிகள் அக்டோபர் 29 முதல் நவம்பர் 8 வரை நடைபெறும்.
இந்திய அணி வீரர்கள் லிஸ்ட்
வரவிருக்கும் இந்தத் தொடர், கில்லின் கேப்டன்சி பயணத்தில் ஒரு முக்கிய கட்டமாக அமையும். இந்தியாவின் புதிய ஒருநாள் கேப்டனாக தனது முத்திரையை பதிப்பதோடு, பேட்டிங்கிலும் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர அவர் முயற்சிப்பார்.
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய ஒருநாள் அணி: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்சர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
