இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், முதல்வர் ஸ்டாலின், மழைக்கு வாய்ப்பு, தவெக தலைவர் விஜய், தங்கம் வெள்ளி விலை, சினிமா, ஜோதிடம், இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:40 AM (IST) Jan 03
கள்ளக்குறிச்சி அருகே காணாமல் போனதாக தேடப்பட்ட நந்தினி என்ற பெண், அவரது மாமியாராலேயே தலை துண்டித்து கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மகனின் இரண்டாவது திருமணத்தால் ஆத்திரத்தில் இருந்த மாமியார் திட்டமிட்டு கொலை செய்துள்ளார்.
11:38 AM (IST) Jan 03
கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 173 திரைப்படத்தின் இயக்குநர் யார் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.
11:12 AM (IST) Jan 03
எட்டு வடிவில் நடைபயிற்சி செய்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
11:03 AM (IST) Jan 03
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கடைத் திறப்பு விழாவுக்கு சப்போர்டாக இருந்த கலெக்டர் மதிவதினியை மீண்டும் சந்தித்து பேசி உள்ளார் ஜனனி. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
10:56 AM (IST) Jan 03
சென்னையில் 14 வயது சிறுவனுக்கு செல்போன் ஆசை காட்டி, இரண்டு இளைஞர்கள் கடந்த நான்கு மாதங்களாக ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். சிறுவனின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்ட பெற்றோர் விசாரித்தபோது உண்மை தெரியவந்தது.
10:02 AM (IST) Jan 03
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதில் ‘டிக்கெட் டூ ஃபினாலி’ டாஸ்க்கின் போது, நடந்த ஒரு சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
09:54 AM (IST) Jan 03
09:43 AM (IST) Jan 03
சென்னையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.வெள்ளி விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், பொங்கல் பண்டிகைக்கு முன் நகை வாங்க இது ஒரு நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சி இல்லத்தரசிகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
09:02 AM (IST) Jan 03
தமிழக அரசு, பெண்கள் தொழில்முனைவோராக உயர, மூலிகை அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பு குறித்த மூன்று நாள் பயிற்சியை வழங்குகிறது. சென்னையில் நடைபெறும் இந்த பயிற்சியில், தயாரிப்பு முறைகள், அரசு மானியத்துடன் கடன் பெறும் வழிகள் கற்றுத்தரப்படும்.
08:57 AM (IST) Jan 03
சிறகடிக்க ஆசை சீரியலில் காணாமல் போன அண்ணாமலை வீட்டுக்கு திரும்பி வந்த நிலையில், பைனான்சியரும் திடீர் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
08:42 AM (IST) Jan 03
இலங்கையையொட்டி தென் மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று தென்தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
07:56 AM (IST) Jan 03
Tirunelveli Power Cut: திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சுரண்டை, பணகுடி, சிந்தாமணி, ஆலங்குளம், மற்றும் வீரவனநல்லூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இன்று மின் தடை செய்யப்படுகிறது.