- Home
- Cinema
- தொலைக்காட்சி
- பாரு - கம்ருதீன் கேம் ஓவர்... ரெட் கார்டு கொடுத்த விஜய் சேதுபதி - பிக் பாஸ் ரசிகர்கள் செம ஹாப்பி..!
பாரு - கம்ருதீன் கேம் ஓவர்... ரெட் கார்டு கொடுத்த விஜய் சேதுபதி - பிக் பாஸ் ரசிகர்கள் செம ஹாப்பி..!
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் முதன்முறையாக ரெட் கார்டு கொடுத்து ஒரே நேரத்தில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். விஜய் சேதுபதியின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

Red Card For Parvathy and Kamrudin
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே எந்தவித விறுவிறுப்பும் இன்றி மந்தமாக சென்றுகொண்டிருந்த நிலையில், தற்போது இந்த சீசன் முடியும் தருவாயில் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்த சீசனில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் வெற்றி பெருபவர்கள் நேரடியாக பைனலுக்குள் நுழையும் வாய்ப்பை பெற முடியும். இந்த டிக்கெட் டூ பினாலேவின் கடைசி டாஸ்க்காக கார் டாஸ்க் வைக்கப்பட்டது. ஒரே காருக்குள் 9 பேரும் ஏறிக் கொள்ள வேண்டும். அதில் இறுதி வரை யார் தாக்குப்பிடிக்குறார்களோ அவர்களே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
சாண்ட்ரா உடன் மோதல்
இந்த டாஸ்க் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே, பார்வதியும் கம்ருதீனும் போட்டியாளர்களை ஒவ்வொருவராக வம்பிழுக்க தொடங்கினர். அதில் மற்றவர்கள் அமைதியாக இருந்தாலும், சாண்ட்ரா இவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது கம்ருதீனை அவர் காமருதீன் என திட்டினார். அதேபோல் பார்வதியையும் பொறுக்கி பார்வதி என சொன்னதோடு, நீங்கள் இருவரும் பாத்ரூமில் என்னென்ன செஞ்சீங்கனு எனக்கு தெரியும் என்றெல்லாம் சொல்ல, கம்ருதீன் மற்றும் பார்வதி இருவரும் சேர்ந்துகொண்டு சாண்ட்ராவை மிகவும் கொச்சையாக விமர்சிக்க தொடங்கினார்கள்.
சாண்ட்ராவை வெளியே தள்ளிய பார்வதி
ஒருகட்டத்தில் சாண்ட்ரா அமைதியான பின்னர், அவரை எப்படியாவது வெளியே தள்ளிவிட வேண்டும் என முடிவெடுத்த பார்வதி, கார் கதவை திறக்க முயல, சாண்ட்ரா தடுத்துவிட்டார். பின்னர் கம்ருதீன் உதவியுடன் கார் கதவை திறந்து, சாண்ட்ராவை தன் காலால் மிதித்து இருவரும் வெளியே தள்ளிவிட்டனர். இதனால் தலைகுப்புற விழுந்த சாண்ட்ராவுக்கு அந்த பதற்றத்தில் வலிப்பு வந்துவிட்டது. இதையடுத்து வினோத், சபரி, விக்ரம் ஆகியோர் டாஸ்க் போனாலும் பரவாயில்லை என இறங்கி வந்து சாண்ட்ராவை மருத்துவர்களிடம் அழைத்து சென்றனர். இதனால் பிக் பாஸ் வீடே பரபரப்பானது.
ரெட் கார்டு கொடுத்த விஜய் சேதுபதி
இப்படி ஒரு மனிதாபிமானற்ற செயலை செய்தபின்னரும் தாங்கள் செய்தது தான் சரி என்றும் பாரு - கம்ருதீன் இருவருமே பேசிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், இன்று நடைபெற்ற வீக் எண்ட் எபிசோடில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, முதல் வேளையாக பார்வதி, கம்ருதீன் இருவரையும் வறுத்தெடுத்திருக்கிறார்.
தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் பேசிய விஜய் சேதுபதி, கம்ருதீன் உனக்கு பலமுறை சொல்லி இருக்கிறேன். இப்படி பேசுறீங்களே அது பார்ப்பவர்களுக்கு நெருடலாக இருக்காதா... உங்க அக்கா இதை பார்த்து தம்பி நீ நல்லா பண்ணுனப்பானா சொல்லுவாங்க. பாரு வீட்டுக்கு போன உடனே பாராட்டு விழா தான் நடத்தனும். ஒரு பொண்ணை எட்டி உதைச்சதை நான் பார்த்து ரசிச்சேன் என அவங்க அம்மா பாராட்டுவாங்க என சொல்லி நீங்க 2 பேரும் கிளம்புங்க என ரெட் கார்டை எடுத்து நீட்டி உள்ளார் விஜய் சேதுபதி. இதைப்பார்த்த ரசிகர்கள், இதைத் தான் எதிர்பார்த்தோம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
#Day90#Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9#OnnumePuriyala#BiggBossSeason9Tamil#BiggBoss9#BiggBossSeason9#VijaySethupathi#BiggBossTamil#BB9#BiggBossSeason9#VijayTV#VijayTelevisionpic.twitter.com/pQfMdynnI0— Vijay Television (@vijaytelevision) January 3, 2026

