- Home
- பொழுதுபோக்கு
- Bigg Boss
- பொறுக்கி பார்வதிக்கு ரெட் கார்டு கொடுங்க... கொந்தளிக்கும் நெட்டிசன்கள்; ஆக்ஷன் எடுப்பாரா விஜய் சேதுபதி?
பொறுக்கி பார்வதிக்கு ரெட் கார்டு கொடுங்க... கொந்தளிக்கும் நெட்டிசன்கள்; ஆக்ஷன் எடுப்பாரா விஜய் சேதுபதி?
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள பார்வதி, சாண்ட்ராவை எட்டி உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாருவை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வலியுறுத்தி வருகின்றனர்.

VJ Parvathy in Trouble
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் 24 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில், இதுவரை 15 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது விஜே பார்வதி, கானா வினோத், திவ்யா கணேஷ், கம்ரூதின், விக்கல்ஸ் விக்ரம், சாண்ட்ரா, சுபிக்ஷா, சபரி, அரோரா ஆகிய ஒன்பது பேர் மட்டுமே போட்டியில் நீடித்து வருகின்றனர். டைட்டிலை கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில் அனைவரும் தீவிரமாக விளையாடி வருகின்றனர்.
சாண்ட்ரா உடன் சண்டை
இந்நிலையில், விஜே பார்வதி – சாண்ட்ரா இடையே நடந்த ஒரு சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. டாஸ்க் ஒன்றின் போது, காரிலிருந்து சாண்ட்ராவை எட்டி உதைத்ததாக கூறப்படும் நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி, பார்வதிக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்துள்ளது. இந்த சீசனில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களில் ஒருவராக விஜே பார்வதி திகழ்கிறார். முதல் நாளில் இருந்தே சண்டையிடுவதை மட்டுமே முழு நேர வேலையாக செய்து வருகிறார் பார்வதி.
டாக்ஸிக் காதல்
இடையில் கம்ருதின் மீது காதல் வயப்பட்டதால், சில எபிசோடுகள் ரொமாண்டிக் டிராக் ஓடியது. பின்னர் இந்த காதலும் ஒரு கட்டத்தில் கசந்துபோக, இருவரும் கடுமையாக மோதிக்கொண்டனர். சண்டைபோட்டு இனி இவர்கள் பேசவே மாட்டார்கள் என எண்ணும்போது சகஜமாக கட்டிப்பிடித்து மீண்டும் ரொமான்ஸ் செய்ய ஆரம்பிக்கிறார்கள். இதனால் உள்ளே இருக்கும் சக போட்டியாளர்களுக்கே இது ஒரு டாக்ஸிக் காதல் ஜோடி என்பது அப்பட்டமாக தெரிகிறது.
பாருவின் அட்ராசிட்டி
இந்த சீசனில் பார்வதிக்கு சப்போர்டாக இருந்தவர்கள் வெகு சிலரே, அதில் ஒருவர் தான் சாண்ட்ரா. அவரையே, டிக்கெட் டூ பினாலே டாஸ்கின் போது பார்வதி எட்டி உதைத்து காரில் இருந்து வெளியே தள்ளியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. பார்வதி வெளியே தள்ளிவிட்டதும் சாண்ட்ராவுக்கு வலிப்பு வந்து அவர் மருத்துவர்கள் கண்காணிப்புக்காக அழைத்து செல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்த பின்னரும், தான் செய்தது தான் கரெக்ட் என சொல்லி சக போட்டியாளர்களிடம் சண்டை போட்டுள்ளார் பார்வதி.
#Sandra மிக மோசமான ஆள்தான். #VJPaaru & #Kamrudin-க்கு equalஆன toxicity நிறைந்த ஆள்தான். No doubt
ஆனால் இன்று சாண்ட்ராவுக்கு நடந்தது மிகக்கொடுமை. Inhuman
இந்த சைக்கோத்தனத்தை உரம்போட்டு வளர்த்தது #VijaySethupathi
இந்த #BiggBossTamil9 கேவலத்தின் உச்சம்!
pic.twitter.com/68dDQDi8cH— Surya Born To Win (@Surya_BornToWin) January 2, 2026
ரெட் கார்டு கொடுக்கப்படுமா?
பார்வதியின் இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம், தெரிவித்து வருவதோடு, அந்த பொறுக்கி பார்வதியை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புங்க என விஜய் சேதுபதிக்கும் வலியுறுத்தி வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி பார்வதிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. அதுமட்டும் நடந்தால் பிக் பாஸ் வரலாற்றில் ரெட் கார்டு வாங்கிக் கொண்டு வெளியேறும் முதல் பெண் போட்டியாளராக பார்வதி இருப்பார்.
இவையெல்லாம் விஜய் சேதுபதி கையில் தான் இருக்கிறது. அவர் இதற்கு முன்னர் மைக் போடாமல் பார்வதியும் கம்ருதினும் ரூல்ஸை மீறிய போது, அவர்களை பேச விடாமல் ஒரு ஓரமாக சைலண்டாக உட்கார வைத்து எஸ்கேப் ஆக்கியது போல், இந்த முறையும் செய்துவிடாதீர்கள் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
Next Evicted contestants re entry irukum... Ellarum vanthu porukki #VJParvathy aka peedai
And#Kamrudin aka Kaamarudhin
Moonji la Kaari thuppa poranga 💦#BiggBossTamil9— Laugh Out Tamil (@LaughOutTamil) January 2, 2026

