- Home
- உடல்நலம்
- Gut Health Mistakes : என்றும் ஆரோக்கியம்! குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த '6' விஷயங்களை கைவிட்டா போதும்
Gut Health Mistakes : என்றும் ஆரோக்கியம்! குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த '6' விஷயங்களை கைவிட்டா போதும்
நாம் தினமும் செய்யும் சில பழக்கங்கள் குடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். அவற்றின் பட்டியல் இதோ!

Unhealthy Digestion Habits
குடல் உணவை உடைத்து, உண்ணும் உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுகிறது. ஆரோக்கியமான குடல் நோயெதிர்ப்பு, மன ஆரோக்கியம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. நீங்கள் சாப்பிடுவது குடல் நுண்ணுயிரிகளை நேரடியாக பாதிக்கிறது.
உணவு மட்டுமல்ல, வேறு சில பழக்கங்களும் குடலைப் பாதிக்கலாம்
ஜங்க் ஃபுட் அல்லது வெளி உணவுகளை சாப்பிடுவதால் மட்டுமே வயிற்றில் பிரச்சனைகள் ஏற்படும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் வீட்டில் சமைத்த உணவை சாப்பிடுபவர்களுக்கு கூட வாயு அல்லது அசௌகரியம் ஏற்படுகிறது.
குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் பழக்கவழக்கங்கள்
என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் போலவே, எப்படி, எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். உணவு ஆரோக்கியமாகத் தோன்றினாலும், சில தினசரி பழக்கங்கள் குடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். அவை என்னென்ன என்பதை குறித்து இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிகளவில் பச்சையாக சாலட் சாப்பிடுவது
இரவில் அதிகளவு பச்சையாக சாலட் சாப்பிடுவது குடலை பாதிக்கும். சாலட்கள் ஆரோக்கியமானவை, ஆனால் இரவில் அதிகமாக சாப்பிடுவது குடலுக்கு நல்லதல்ல. பச்சை காய்கறிகளை அதிகமாக சாப்பிடுவது வீக்கம் மற்றும் வாயுவை ஏற்படுத்தும்.
பருப்பு, பயறு வகைகளை ஊறவைத்த பிறகு சாப்பிடுவதை தவிர்க்கவும்
பருப்பு, பயறு வகைகளை ஊறவைத்த பிறகு சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் அவை அமிலத்தன்மை மற்றும் வாயுவை உண்டாக்கும்.
உணவின் போது தண்ணீர் குடிப்பது
உணவின் போது தண்ணீர் குடிப்பதும் குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். இது செரிமான நொதிகளை நீர்த்து, வாயுவை உண்டாக்கும். உணவுக்கு 20 நிமிடங்களுக்கு முன் அல்லது சாப்பிட்டு 30-40 நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்கவும்.
சிறுதானியங்களை அதிகமாக சாப்பிடுவது
சோளம், கம்பு, ராகி போன்ற சிறுதானியங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் அதிகமாக சாப்பிடுவது வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். இந்த தானியங்கள் செரிமானத்தை மெதுவாக்குகின்றன. வாரத்திற்கு மூன்று முறை சாப்பிட்டால் போதும்.
தயிர் அல்லது மோர் அதிகமாக சாப்பிடுவது
தயிர் அல்லது மோர் அதிகமாக சாப்பிடுவதும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. தயிரில் புரோபயாடிக்குகள் அதிகம். ஆனால் குடலில் ஏற்கனவே அழற்சி இருந்தால், அதை அதிகமாக சாப்பிடுவது அமிலத்தன்மையை அதிகரிக்கும்.
வெறும் வயிற்றில் பழங்கள் அல்லது ஓட்ஸ் சாப்பிடுவது
வெறும் வயிற்றில் பழங்கள் அல்லது ஓட்ஸ் சாப்பிடுவது ஆரோக்கியமாகத் தோன்றினாலும், அது செரிமானத்தைப் பாதிக்கலாம். விதைகள், நட்ஸ், தயிர் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது.

