- Home
- Lifestyle
- Gut Health : இளநீரையே மிஞ்சும் 'பானம்' பத்தி தெரியுமா? இதை தினமும் குடித்தால் எக்கச்சக்க நன்மை இருக்கு!
Gut Health : இளநீரையே மிஞ்சும் 'பானம்' பத்தி தெரியுமா? இதை தினமும் குடித்தால் எக்கச்சக்க நன்மை இருக்கு!
இளநீரைவிட ஊட்டம் அதிகம் கொண்ட உடலுக்கு பல்வேறு நன்மைகள் செய்யக் கூடிய ஒரு பானம் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

மனிதனுடைய குடல் ஆரோக்கியம் என்பது வெறும் செரிமானம் அல்ல. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துடனும் தொடர்புடையது. குடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நம் செரிமான மண்டலத்தில் இருக்கும் பாக்டீரியாக்களின் சமநிலை மிகவும் முக்கியமானது. இதுவே செரிமானம், ஊட்டச்சத்து உறிஞ்சுதல், கழிவுகளை வெளியேற்றுதல் ஆகிய முக்கிய செயல்பாடுகளுக்கு உதவுகிறது.
ஒருவருக்கு குடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தால் அவருடைய நோய் எதிர்ப்பு சக்தி, மனநிலை, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். இதற்கு மோர் அருந்துவது நல்ல பயன்தரும். தினமும் குழந்தைகளுக்கு மோர் கொடுப்பது நல்லது. மோர் இளநீரை விட பலமடங்கு உடலுக்கு நன்மை செய்யக் கூடியது. எந்த பக்கவிளைவுகளும் இல்லை. இந்தப் பதிவில் மோரின் நன்மைகள் மற்றும் சுவையான மோர் ரெசிபியும் காணலாம்.
பால் மோராக மாற்றப்படும் நொதித்தல் நிகழ்வு வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உதவுகிறது.மோரில் உள்ள லாக்டோ பேசில்லஸ் பாக்டீரியா குடல் ஆரோக்கியத்திற்கு ஆதரவளிக்கும். பால் குடிப்பதை விட மோர் அருந்துவது பல வகைகளில் சிறந்தது.
மோரில் உப்பிட்டு அருந்துவதால் உடலுக்கு எலக்ரோலைட்ஸ் போல செயல்படும். நீரிழப்பு பிரச்சனைக்கு சிறந்தது. செரிமானத்திற்கு உதவும். உடலுக்கு சிறந்த நச்சுநீக்கியாக செயல்படுகிறது. சிறுநீரக ஆரோக்கியத்திற்கும் நல்லது. மனநிலையை மேம்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், சத்துக்கள் இதில் உள்ளன. இரத்தசோகை உள்ளவர்களுக்கு ஏற்ற பானம்.
எடையை குறைக்க நினைப்பவர்கள் பால், தயிர் ஆகியவற்றை தவிர்த்து மோர் குடிக்கலாம். உடலில் உள்ள கொழுப்பு அளவை குறைக்க உதவுவதால் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. தினமும் மோர் அருந்துவது சரும நீரேற்றத்திற்கு உதவுவதால் பளபளப்பாக காணப்படுவீர்கள். நாள்தோறும் மோர் அருந்தினால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மோரை ருசியாக தயார் செய்து அருந்த இங்கு எளிய ரெசிபியை காணலாம்.
மோர் ரெசிபி :
ஒரு கப் தயிர், தோல் சீவிய சிறு துண்டு இஞ்சி, காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய், புளிப்பு சுவை பிடித்தம் இருப்பவர்கள் மாங்காய் துண்டுகள் போட்டுக் கொள்ளுங்கள். இதனுடன் கொத்தமல்லி தளை, கருவேப்பிலை, உப்பு ஆகியவை போட்டு மிக்சியில் அரைத்து கொள்ளுங்கள். இந்தக் கலவையில் தேவையான அளவு தண்ணீர்விட்டு அடித்து கொள்ளுங்கள். இதை வடிகட்டி அருந்தலாம். சுவை அபாரமாக இருக்கும்.