தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்ததற்கு திமுக அரசே காரணம் என பாஜக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், தமிழக காங்கிரஸ் கட்சி 2026 தேர்தலில் நடுரோட்டில் நிற்கும்.
வேலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை: தமிழகத்தில் கஞ்சா பழக்கம் அதிகமாக உள்ளது நம் அனைவருக்கும் தெரியும். இதற்கு மத்திய அரசு தான் காரணம் என்ற பழியை மத்திய அரசின் மீது போட பார்க்கிறார்கள். இது திமுகவிற்கு கைவந்த கலை. குறிப்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு கைவந்த கலை. வரும் ஆறு மாத காலமாக இதை கையில் எடுப்பார்கள் அவருக்கு அரசியல் அமைப்பு சட்டத்தைப் பற்றி பாடம் எடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு
மத்திய அரசுக்கும் தமிழகத்தில் உள்ள காவல்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழகத்தில் கஞ்சா ஒழிப்பது முதலமைச்சரின் பொறுப்பு. இதற்கு முன்பு வேறு வேறு ஆட்சி காலத்தில் திறமையாக காவல்துறையினர் வேலை செய்தனர். தற்போது திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் கஞ்சா, வன்முறை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களை குறிவைத்து தாக்கக்கூடிய கஞ்சா எங்கிருந்து வந்தது. பல இடங்களில் கஞ்சா பரிசோதனை கூடமே உள்ளது. ஆன்லைனில் கூட கஞ்சா கிடைக்கிறது. முதல்வர் இவ்வளவு பேசுவதற்கு தமிழகத்தை நிர்வாகம் செய்ய முடியவில்லை. காவல்துறையை நிர்வாகம் செய்ய முடியவில்லை எனக் கூறிவிடலாமே.
மாநில அரசின் வேலை என்ன மத்திய அரசின் வேலை என முழுவதுமாக மக்கள் தெரிந்தவர்கள். கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் முதலமைச்சராக நான் தோற்று விட்டேன் என அவர் கூறட்டும். இதற்கு நாங்கள் பதில் கூறுகிறோம் என்றார். தோற்று விட்டு பழியை மத்திய அரசு இது போடுவதை எந்த காலத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஜின்ஜாங் போடும் காங்கிரஸ்
தமிழக காங்கிரசை பொருத்தவரைக்கும் டெல்லிக்கும் தமிழகத்திற்கு ஜின்ஜாங் போடுவது தான் தற்போது தொழிலாக உள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்காக பேசுகிற காங்கிரஸ் யாரும் இல்லை. காங்கிரஸ் கட்சி விஜயோடு சென்று விட்டால் ப.சிதம்பரம் அவர்கள் புதிய கட்சி ஆரம்பித்து திமுகவுடன் கூட்டணி வைப்பார் என பத்திரிகைகள் செய்தி வெளியாகியுள்ளது. நல்லவர்கள் எல்லாம் தமிழ் மாநில காங்கிரஸில் உள்ளனர். காங்கிரஸ் என்பது அழிந்து கொண்டிருக்கும் ஒரு கட்சி அதற்கு தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் தலைவரே சான்று அவர் எப்படி இருக்கிறார்கள் என்று நீங்கள் பாருங்கள்.
நடுரோட்டில் நிர்ப்பார்கள்
காங்கிரஸ் கட்சியினர் 2026 சட்டமன்ற தேர்தலில் எங்கும் செல்லாமல் நடுரோட்டில் நிர்ப்பார்கள். அதற்காக எல்லா வேலைகளையும் ஆரம்பித்து விட்டார்கள். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினரை சமாதானம் செய்ய அடிக்கடிக்கு வருகிறார்கள். இதற்காகவே அவர்களுக்கு கஜானா காலியாக விடும் போல் உள்ளது. இந்தியாவில் எப்படி காங்கிரஸ் என்கின்ற கட்சி இல்லையோ அதுபோல தமிழகத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து எறும்பின் அளவில் உள்ளது என்றார்.


