ஒன்பிளஸ் ஓரமா போங்க.. 7000mAh பேட்டரி, 200MP கேமரா.. ரியல்மி 16 ப்ரோ விலை லீக்!
Realme 16 Pro ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் விலை விவரங்கள் கசிந்துள்ளன. ஜனவரி 6 அறிமுகமாகவுள்ள நிலையில் இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை இங்கே காணுங்கள். ரியல்மி 16 ப்ரோ விலை லீக்!

Realme 16 Pro ஜனவரி 6-ல் காத்திருக்கும் சர்ப்ரைஸ்
ரியல்மி நிறுவனம் தனது பலம் வாய்ந்த 'ரியல்மி 16 ப்ரோ' (Realme 16 Pro) சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் ஜனவரி 6-ம் தேதி அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த போன்களின் விலை விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. வெளியான தகவல்களின்படி, இம்முறை ரியல்மி 16 ப்ரோ 5ஜி, ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி மற்றும் டாப்-எண்ட் மாடலான ரியல்மி 16 ப்ரோ மேக்ஸ் என மூன்று வேரியண்டுகள் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை மற்றும் ஸ்டோரேஜ் விவரங்கள்
பிரபல டிப்ஸ்டரான பராஸ் குக்லானி (Paras Guglani) வெளியிட்டுள்ள தகவலின்படி, 'ரியல்மி 16 ப்ரோ 5ஜி' மாடலின் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.31,999-க்கு அறிமுகமாகலாம். இதன் 8GB + 256GB வேரியண்ட் ரூ.33,999 எனவும், 12GB + 256GB வேரியண்ட் ரூ.36,999 எனவும் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. நடுத்தர பட்ஜெட்டில் அதிக வசதிகளை எதிர்பார்ப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமையும்.
ப்ரோ பிளஸ் மற்றும் மேக்ஸ் விலை நிலவரம்
சற்று கூடுதல் வசதிகள் கொண்ட 'ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி' (Realme 16 Pro+ 5G) மாடலை எடுத்துக்கொண்டால், இதன் விலை ரூ.39,999-ல் (8GB + 128GB) தொடங்கும் என்று தெரிகிறது. இதன் 8GB + 256GB மாடல் ரூ.41,999 எனவும், டாப் வேரியண்டான 12GB + 256GB மாடல் ரூ.44,999 எனவும் இருக்கலாம். மேலும், மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரீமியம் மாடலான 'ப்ரோ மேக்ஸ்' (Pro Max) விலை ரூ.45,000 முதல் ரூ.50,000 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
விற்பனை எப்போது?
ரியல்மி நிறுவனம் ஜனவரி 6-ம் தேதி வெளியீட்டு தேதியை உறுதி செய்திருந்தாலும், அதிகாரப்பூர்வ விலையை இன்னும் அறிவிக்கவில்லை. அறிமுகமான உடனேயே பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ரியல்மியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விற்பனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
மிரள வைக்கும் சிறப்பம்சங்கள்
இந்த புதிய சீரிஸின் மிக முக்கிய சிறப்பம்சமே அதன் பேட்டரி மற்றும் கேமராதான். இரண்டு போன்களிலுமே பிரம்மாண்டமான 7,000mAh பேட்டரி இடம்பெறும் என்று கூறப்படுகிறது. அதேபோல், புகைப்படம் எடுப்பதற்கு 200 மெகாபிக்சல் மெயின் கேமரா கொடுக்கப்படலாம். செயல்திறனைப் பொறுத்தவரை, ப்ரோ பிளஸ் மாடல் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Snapdragon 7 Gen 4) சிப்செட்டுடனும், சாதாரண ப்ரோ மாடல் மீடியாடெக் டைமன்சிட்டி 7300-மேக்ஸ் (MediaTek Dimensity 7300-Max) சிப்செட்டுடனும் வரலாம். இந்தியாவில் இது ஒன்பிளஸ் நார்ட் 5 மற்றும் ஐக்யூ நியோ 10 ஆகிய போன்களுக்குக் கடும் போட்டியாக அமையும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

