MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • எமோஜி டைப் செஞ்சா போதும்... ஸ்டிக்கர் ஆட்டோமேட்டிக்கா வரும்! வாட்ஸ்அப்பின் வேற லெவல் 'ட்ரீட்'!

எமோஜி டைப் செஞ்சா போதும்... ஸ்டிக்கர் ஆட்டோமேட்டிக்கா வரும்! வாட்ஸ்அப்பின் வேற லெவல் 'ட்ரீட்'!

WhatsApp ஐபோன் பயனர்களுக்கு வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய 'ஸ்டிக்கர் சஜஷன்' அம்சம். எமோஜியை டைப் செய்தாலே ஸ்டிக்கர்கள் வரும்! எப்படி பயன்படுத்துவது என அறியுங்கள்.

2 Min read
Author : Suresh Manthiram
Published : Mar 10 2026, 10:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
WhatsApp ஐபோன் பயனர்களை குஷிப்படுத்திய வாட்ஸ்அப்: வந்துவிட்டது 'ஸ்டிக்கர் சஜஷன்' (Sticker Suggestion) அம்சம்!
Image Credit : Gemini

WhatsApp ஐபோன் பயனர்களை குஷிப்படுத்திய வாட்ஸ்அப்: வந்துவிட்டது 'ஸ்டிக்கர் சஜஷன்' (Sticker Suggestion) அம்சம்!

தற்போதைய காலகட்டத்தில் நண்பர்களுடனான சாட்டிங்கில் (Chatting) வார்த்தைகளை விட ஸ்டிக்கர்கள் தான் அதிக உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன. ஆனால், பொருத்தமான ஒரு ஸ்டிக்கரை அனுப்புவதற்குள் பல பக்கங்களைத் தேடிச் சலிப்படைய வேண்டியிருக்கும். இந்தத் தொல்லையைத் தீர்க்கும் வகையில், ஐபோன் (iPhone) பயனர்களுக்காக ஒரு சூப்பரான புதிய அம்சத்தை மெட்டா (Meta) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் 'ஆட்டோமேட்டிக் ஸ்டிக்கர் சஜஷன்' (Automatic Sticker Suggestions).

25
இந்த அம்சம் எப்படி வேலை செய்யும்?
Image Credit : Getty

இந்த அம்சம் எப்படி வேலை செய்யும்?

இதுவரை ஒரு குறிப்பிட்ட ஸ்டிக்கரை அனுப்ப வேண்டுமென்றால், ஸ்டிக்கர் கேலரிக்குள் சென்று தேட வேண்டும். ஆனால் புதிய அப்டேட்டின்படி, நீங்கள் சாட் செய்யும் போது குறிப்பிட்ட எமோஜியை (Emoji) டைப் செய்தாலே, அதற்கேற்ற ஸ்டிக்கர்களை வாட்ஸ்அப் தானாகவே கீபோர்டின் மேல் பரிந்துரைக்கும். உதாரணமாக, நீங்கள் 'Heart' எமோஜியை டைப் செய்தால், இதயம் தொடர்பான பல ஸ்டிக்கர்கள் திரையில் தோன்றும். அதிலிருந்து உங்களுக்குப் பிடித்ததை நேரடியாகத் தேர்ந்தெடுத்து அனுப்பிக்கொள்ளலாம்.

இதன் மூலம் ஸ்டிக்கர்களைத் தேடி அலையும் நேரம் மிச்சமாவதோடு, சாட்டிங் அனுபவமும் இன்னும் சுவாரஸ்யமாக மாறும். WABetaInfo தளத்தின் மூலம் முதலில் கசிந்த இந்தத் தகவல், தற்போது அதிகாரப்பூர்வமாக iOS பயனர்களுக்கு வெளிவந்துள்ளது.

Related Articles

Related image1
ஆண்ட்ராய்டுக்கு ஓகே.. ஐபோனுக்கு செக்! திடீரென முடங்கிய WhatsApp Web - கடுப்பில் யூசர்கள்!
Related image2
WhatsApp பயன்படுத்துறீங்களா..? இதை செய்யலேனா 6 மணி நேரத்தில் லாக்அவுட்..! மத்திய அரசு அதிரடி
35
இதைப் பயன்படுத்துவது எப்படி?
Image Credit : Getty

இதைப் பயன்படுத்துவது எப்படி?

1. இந்த வசதியைப் பெற, முதலில் உங்களது ஐபோனில் ஆப்பிள் ஆப் ஸ்டோருக்குச் (Apple App Store) சென்று, வாட்ஸ்அப் செயலியை சமீபத்திய வெர்ஷனுக்கு (Version 26.8.76) அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.

2. அப்டேட் செய்த பிறகு, ஏதேனும் ஒரு சாட்டைத் திறந்து ஒரு எமோஜியை டைப் செய்யுங்கள்.

3. உடனே வாட்ஸ்அப் நீங்கள் டைப் செய்த எமோஜிக்குத் தொடர்புடைய ஸ்டிக்கர்களைப் பரிந்துரைக்கும். அதிலிருந்து உங்களுக்கு விருப்பமானதை ஒரு கிளிக் மூலம் சென்ட் செய்யலாம்.

45
கவனத்தில் கொள்ள வேண்டியவை
Image Credit : Getty

கவனத்தில் கொள்ள வேண்டியவை

இந்த அம்சம் சரியாக வேலை செய்ய, நீங்கள் ஏற்கனவே அந்த ஸ்டிக்கர் பேக்குகளை (Sticker Packs) டவுன்லோட் செய்து உங்கள் வாட்ஸ்அப் லைப்ரரியில் வைத்திருக்க வேண்டும். தேவைப்பட்டால் ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து புதிய ஸ்டிக்கர் பேக்குகளையும் நீங்கள் பதிவிறக்கம் செய்து வாட்ஸ்அப்பில் இணைத்துக்கொள்ளலாம்.

55
ஐபோன்
Image Credit : Getty

ஐபோன்

தற்போது ஐபோன் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த அம்சம், விரைவில் ஆண்ட்ராய்டு (Android) பயனர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி சாட்டிங்கில் ஸ்டிக்கர் மழை பொழியத் தயாராகுங்கள்!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
அடடே.. இது செம ஆஃபரா இருக்கே! 164 நாட்களுக்கு அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் டேட்டா அள்ளிக்கொடுக்கும் BSNL!
Recommended image2
சுட்டெரிக்கும் வெயிலிலும் ஸ்கிரீன் பளபளக்கும்! வேற லெவல் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஐபோன் 18 ப்ரோ!
Recommended image3
புது மவுஸ் வாங்கப் போறீங்களா? கேமிங் முதல் ஆபிஸ் வரை... 2026-ன் டாப் 10 பிராண்டுகள் இதோ!
Related Stories
Recommended image1
ஆண்ட்ராய்டுக்கு ஓகே.. ஐபோனுக்கு செக்! திடீரென முடங்கிய WhatsApp Web - கடுப்பில் யூசர்கள்!
Recommended image2
WhatsApp பயன்படுத்துறீங்களா..? இதை செய்யலேனா 6 மணி நேரத்தில் லாக்அவுட்..! மத்திய அரசு அதிரடி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved