12,200mAh பேட்டரி.. 2.8K டிஸ்ப்ளே + 5G அம்சங்களுடன் வரும் ரியல்மி பேட் 3.. வேற லெவல்!
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி பேட் 3 5ஜி டேப்லெட்டை ஜனவரி 2026-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த டேப்லெட் ஸ்டைலஸ் ஆதரவு, புதிய AI அம்சங்கள், 2.8K டிஸ்ப்ளே மற்றும் 12,200mAh பேட்டரி போன்ற மேம்பட்ட அம்சங்களுடன் வருகிறது.

ரியல்மி பேட் 3 5ஜி
இந்திய டேப்லெட் சந்தையில் தனது பிடியை வலுப்படுத்த ரியல்மி நிறுவனம் புதிய 5G டேப்லெட்டை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ரியல்மி Pad 3 5G என பெயரிடப்பட்டுள்ள இந்த டேப்லெட், அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ரியல்மி 16 Pro சீரியஸுடன் இந்த டேப்லெட்டும் அறிமுகமாக இருப்பதால், டெக் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ரியல்மி Pad 3 5G டேப்லெட் 2026 ஜனவரி 6 அன்று இந்திய சந்தையில் அறிமுகமாகும். இந்த தகவலை ரியல்மி தனது அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது. இந்த டேப்லெட்டில் ஸ்டைலஸ் சப்போர்ட் மற்றும் புதிய தலைமுறை AI அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. டிசைன் விஷயத்தில், பின்புறத்தில் டூயல் கேமரா செட்அப், LED ஃபிளாஷ் மற்றும் நடுப்பகுதியில் ரியல்மி லோகோ இடம்பெறும். இந்த டேப்லெட் கருப்பு மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கும்.
ரியல்மி பேட் 3 அம்சங்கள்
ஸ்பெசிபிகேஷன்களைப் பார்க்கும்போது, ரியல்மி Pad 3 5G-யில் 2.8K Book View டிஸ்ப்ளே வழங்கப்படும். பேட்டரி விஷயத்தில், 12,20mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி இதில் இடம் பெறுகிறது. இதனால் நீண்ட நேரம் வேலை செய்வதற்கு ஆன்லைன் வகுப்புகள், வீடியோ பார்க்கவும், இது பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிப்ஸ்டர் முகுல் சர்மா வெளியிட்ட தகவலின்படி, இந்த டேப்லெட்டில் MediaTek Dimensity 7300 MAX புரசசர் பயன்படுத்தப்படலாம். இயங்குதளம் ஆக Android 16 அடிப்படையிலான ரியல்மி UI 7.0 என வழங்கப்படும். மேலும், 6.6mm மெல்லிய வடிவம், 120Hz ரிஃப்ரெஷ் ரேட் மற்றும் 296 ppi பிக்சல் டென்சிட்டி போன்ற அம்சங்களும் இருக்கலாம். இது 2023-ல் வெளியான ரியல்மி Pad 2-க்கு மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

