பராசக்தி ஆடியோ லாஞ்ச் ஹைலைட்ஸ்... ரவி மோகன் முதல் ஸ்ரீலீலா வரை பிரபலங்கள் பேசியதென்ன?
சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் என்ன பேசினார்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Parasakthi Audio Launch Highlights
அதர்வா பேசியதாவது : எஸ்.கே ஸ்கிரீன்ல மட்டுமில்லை, இப்போ அதை தாண்டியும் எனக்கு ஒரு பிரதர் தான். எல்லோருக்குமே குறைந்த காலம் அல்லது நீண்ட கால குறிக்கோள் இருக்கும், ஆனா அதை ஒரு சிலர் தான் அடைவாங்க. எஸ்.கே தன்னோட குறிக்கோளை அடையுற வரைக்கும் அதுக்காக கடுமையா உழைக்கிற ஒருத்தர். அவருக்கு ஷூட்டிங் எல்லோருக்கும் பரிமாறுற பழக்கம் உண்டு. ஆனா அப்போ அவர் மட்டும் சாப்பிடவே மாட்டார். அவ்ளோ கட்டுக்கோப்பான டயட் பாலோவ் பன்றார்.
இது உங்களுக்கு 25வது படம், அடுத்து 50வது, 100வது படம் பண்ணுறப்போ சந்தோசப்படுற முதல் ஆளா நான் இருப்பேன். இது ஜிவியோட நூறாவது படம். அந்த பயணம் ரொம்ப ஈஸியானது அல்ல. லவ்வுக்கு ஒரு பாட்டு, பிரேக்கப்புக்கு ஒரு பாட்டு-ன்னு இது மாதிரி எல்லா மோட்-க்கும் செம்மையா பாட்டு போட்டுருக்கீங்க என கூறினார்.
ரவி மோகன்
ரவி மோகன் பேசியதாவது : நான் படம் பாத்துட்டேன், ஹீரோவா நடிக்கிற படங்கள் பத்தி பெருசா சொல்ல மாட்டேன். இது SK வோட 25வது படம். பராசக்தி ஒரு தங்கம் அதுக்கு பின்னாடி பலரோட உழைப்பு இருக்கு. இந்த வெற்றிக்கு SK முழு தகுதியான ஆள். அவருக்கு பின்னாடி சப்போர்ட்க்கு யாரும் இல்லை அவரோட ரசிகர்கள் தான் பலம். அவரை இன்னும் உயரத்துல கொண்டு போய் வைங்க என தெரிவித்தார்.
சுதா கொங்கரா
சுதா கொங்கரா பேசியதாவது : திருச்சில இருந்து ஒரு தியேட்டர் ஓனர் கால் பண்ணார். அவர் கேட்டாரு " உங்க படத்து கேஸ் எல்லாம் முடிஞ்சுருச்சா, படம் ரிலீஸ் ஆகுதான்னு". நான் சொன்னேன் படம் கண்டிப்பா வருது சார், நான் சுயநலமா சொல்றேன் பொங்கலுக்கு ரெண்டு படம் வருது, ரெண்டு படமும் தியேட்டர்ல ஓடனும் சார், நீங்க தான் அதைச் சாத்தியம் ஆக்கனும். மணி சாருக்கு நான் எப்பவுமே கடமைப்பட்டுருக்கேன். அவர் எனக்கு ஒரு முக்கியமான பாடத்தை சொல்லிருக்கார். யாராச்சும் முடியாதுன்னு ஒன்னு சொன்னா, அதை தான் நாம கண்டிப்பா செய்யனும் என கூறினார்.
ஜிவி பிரகாஷ்
ஜிவி பிரகாஷ் பேசியதாவது : “20 வருஷத்துல 100 வது படம். இந்த பாதையில இருக்க எல்லோருக்கும் நன்றி. முதல் படம் ஷங்கர் சார் தயாரிப்பு, 50 வது படம் விஜய் சார், 100வது படம் SK சார். என்னோட சிஸ்டர் சுதா கொங்கரா கூட 100வது படத்துல பண்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு. சூரரைப்போற்றுக்கு அப்புறம் அவங்களுக்கு பராசக்தி அவங்களுக்கு ரொம்ப ஸ்பெஷலா இருக்கும். இந்த படத்தோட முழு வீரியம் டிரைலர் வரும்போது தெரியும். அதை நாங்க பதுக்கி வச்சுருக்கோம். அது ரிலீஸ் ஆகுறப்போ வெடிக்கும்” என பேசி உள்ளார்
ஸ்ரீலீலா
ஸ்ரீலீலா பேசியதாவது : “பராசக்தியோட பெரிய சக்தி SK சார். இந்த படத்துக்கு முன்னாடி தெலுங்கு பட ஷூட்டிங்ல இருக்கும்போது உங்க படங்கள் ரிலீஸ் ஆகுறப்போ நீங்க ரொம்ப ஸ்வீட்னு சொல்வாங்க. ஆனா அது நார்மல் ஸ்வீட் அல்ல. நீங்க ஒரு பாயாசம். பொள்ளாச்சில உங்க பேன்ஸ் கூட நீங்க போட்டோ எடுக்கும்போது சலிக்காம, tired ஆகாம கடைசி வரைக்கும் எடுத்தீங்க. அதுதான் உங்கள் சுவீட்னெஸ். டான்ஸ் எல்லாம் செம்மையா வந்திருக்கு.
ஆனா எனக்கு மெலோடி தான் ரொம்ப பிடிக்கும். ரத்னமாலா மாதிரி ஒரு கிளாசிக் மெலோடி பாட்டு எனக்கு குடுத்ததுக்கு ரொம்ப நன்றி ஜிவி சார். இந்த மாதிரி ஒரு ரோல்-க்கு தான் ரொம்ப நாளா வெயிட் பண்ணிட்டு இருந்தேன். ஆரம்பத்துல எல்லாமே பாட்டுக்கான இருந்தது ஆனா இப்போ இந்த படத்துல எனக்கு முக்கியமான ரோல் கிடைச்சுருக்கு. சுதா மேம் ஒவ்வொரு சீனும் ரொம்ப டீடெயிலா குடுத்துருக்காங்க. செட்ல என்ன அம்மா மாதிரி பாத்துக்கிட்டாங்க” என கூறினார்
அருண் விஷ்வா
அருண் விஷ்வா பேசியதாவது : ஒரு சிலருக்கு தான் நண்பர்களே இன்ஸ்பிரேஷனா இருப்பாங்க. எனக்கு அப்படி ஒரு நண்பன் SK. அதுக்கு உதாரணம் இந்த படம் தான். இது அப்படி ஒரு ஸ்டோரி & அவ்ளோ போராட்டம், உயிர் தியாகம் எல்லாம் நடந்துருக்கு. So இதுனால அவருக்கு கிடைக்கிற சம்பளம் &பிசினஸ் எல்லாம் தாண்டி கதைக்காக தான் இதை பன்றார்.
1952ல வந்த பராசக்தி தமிழக அரசியல்ல மிகப்பெரிய குரலா ஒலிச்சது. அதே மாதிரி அதை விட இந்த படம் பவர்புல்லா ஒரு கருத்தை உருவாக்கும். ஏன்னா இந்த தலைமுறை நம்ம மாநிலத்துக்காக, மொழிக்காக நடந்த மிகப்பெரிய போராட்டங்களை கண்டிப்பா தெரிஞ்சுக்கனும் என பேசினார்.
தமிழரசன் பச்சமுத்து
லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து பேசியதாவது : எனக்கு சிவகார்த்திகேயன 8 வருஷமா தெரியும். அவர் தயாரிச்ச கனா படத்துல தான் நான் முதல்லஅசிஸ்டன்ட் டைரக்டரா வேலை பாத்தேன். அவர் படத்துல எப்பவும் அவர தாண்டி படத்துல கதை இருக்கும்.. அதுக்கு முதல் உதாரணம் கனா படம். கனா படம் கதையை கேட்டுட்டு பர்ஸ்ட் ஹால்ப் சூப்பரா இருக்கு ஆனா செகண்ட் ஆப் எனக்கு புடிக்கலன்னு சொல்லிட்டாரு. ஏன்னா செகண்ட் ஆப் நீ ஏன் படமா மாத்திட்ட, கதைல சத்யராஜும் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் மெயினா இருக்கனும்னு சொல்லி என்கிட்ட கதையை திருத்த சொன்னாரு.
அவருக்காக நாங்க ரெடி பண்ணி இருந்த கதைல இன்ட்ரவெல் செம்ம மாஸா வச்சிருந்தோம் செகண்ட் ஆப்ல அவருக்கு நிறைய மாஸ் சீன்ஸ் வச்சுருந்தோம். கிட்டதட்ட 8 தடவ நாங்க கரெக்ட் பண்ணி கடைசியா ஒர்க் ஆனது தான் தியேட்டர்ல நீங்க பாத்தது. அவர் நினைச்சிருந்தா அதை அவர் படமா மாத்தி இருக்கலாம். ஆனா கதைக்கும் முக்கியத்துவம் கொடுக்கணும்னு இருந்தால தான் அது கடைசி வரைக்கும் டைரக்டர் படமா இருந்துச்சு. ரவிமோகன் சார் நீங்க மட்டும் தான் இன்னும் முதல் பட இயக்குனர்கள்ட கதை கேக்குறீங்க அந்த வகையில நீங்க சூப்பர் சார் என தெரிவித்தார்.
மணிரத்னம்
மணிரத்னம் பேசியதாவது : “SK தன்னோட படங்களை தேர்வு செய்வதில் ரொம்ப கவனமாகவும், தெளிவாவும் இருக்கார். அவரோட எல்லா படங்களையும் தொடர்ந்து கவனிச்சுட்டு வர்றேன். ஜெயம் ரவி எங்களோட பொன்னியின் செல்வன். மல்டி ஸ்டார் படத்துல அவரை பாக்கிறது ரொம்ப சந்தோசம். இந்த மாதிரி எல்லோரும் நடிச்சா நிறைய வித்தியாசமான கதைகள் பண்ணலாம்” என கூறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

