- Home
- உலகம்
- கை விளங்குடன் இருக்கும் மதுரோ.. வெனிசுலா இனி எங்க கண்ட்ரோலில்..! வெளிப்படையாக அறிவித்த டிரம்ப்
கை விளங்குடன் இருக்கும் மதுரோ.. வெனிசுலா இனி எங்க கண்ட்ரோலில்..! வெளிப்படையாக அறிவித்த டிரம்ப்
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கை விளங்குடன் நாடு கடத்தப்படும் புகைப்படத்தை வெளியிட்ட அமெரக்கா அதிபர் டிரம்ப், வெனிசுலாவை இனி அமெரிக்காவே வழிநடத்தும் என வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

மதுரோவின் புகைப்படத்தை வெளியிட்ட டிரம்ப்
போதைப் பொருள் கடத்தலி்ல் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பால் குற்றம் சாட்டப்பட்டு வந்த வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அவரது மனைவியுடன் சேர்த்து அமெரிக்க ராணுவம் நாடு கடத்திவிட்டதாக பகிரங்கமாக அறிவித்து உலக அரங்கில் பரபரப்பைக் கிளப்பினார். ஆனால் டிரம்பின் அறிவிப்பு தொடர்பாக வெனிசுலா எந்தவித கருத்தும் தெரிவிக்காத நிலையில் அதன் உண்மைத்தன்மை கேள்விக் குறியாக இருந்து வந்தது. இந்நிலையில் அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் மீடியா பக்கத்தில் மதுரோவின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அவர் பகிர்ந்துள்ளப் படத்தில் அதிபர் மதுரோ கண்கள் கட்டப்பட்ட நிலையில், கை விளங்குடன் இருப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. மேலும் மதுரோ அமெரிக்காவின் USS Iwo Jima என்ற போர் கப்பலில் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்படுவதாகக் குறிப்பிட்டு தனது கருத்தின் உண்மைத்தன்மையை நிரூபித்துள்ளார்.
Nicolas Maduro on board the USS Iwo Jima. pic.twitter.com/omF2UpDJhA
— The White House (@WhiteHouse) January 3, 2026
அமெரிக்க ராணுவத்தை புகழ்ந்து தள்ளிய டிரம்ப்
இதனைத் தொடர்ந்து அதிபரின் நாடு கடத்தல் தொடர்பாக டிரம்ப் நீண்ட பத்திரிகையாளர் சந்திப்பை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “கராகஸின் மையப்பகுதியில் உள்ள பெரிதும் பலப்படுத்தப்பட்ட இராணுவக் கோட்டையில் நடைபெற்ற இந்த தாக்குதல் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் மக்கள் இதுவரைக் கண்டிராத ஒன்று. வெனிசுலாவில் நடத்தப்பட்டுள்ளது அற்புதமான மற்றும் துள்ளியமான தாக்குதல். சர்வதிகாரி மதுரோவை நீதியின் முன் நிறுத்துவதே இதன் முழு நோக்கம்.
உலகின் எந்த நாடும் அமெரிக்கா அடைந்ததை அடைய முடியாது. வெளிப்படையாக சொல்லவேண்டுமானால் மிகவும் குறுகிய காலத்தில் வெனிசுலா இராணுவத்தின் அனைத்து துறைகளும் நிர்கதியாக்கப்பட்டன. இந்த நடவடிக்கையில் அமெரிக்காவின் ஒரு வீரர் கூட கொல்லப்படவில்லை.
அமெரிக்காவின் கண்ட்ரோலில் வெனிசுலா
மதுரோ கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் பாதுகாப்பான மாற்றம் ஏற்படும் வரை வெனிசுலாவை அமெரிக்காவே வழிநடத்தும். இந்த விவகாரத்தில் வேறு நாடுகள் உள்நுழைவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
மதுரோ நீதியின் முன் நிறுத்தப்படுவார்..
மதுரோ அதிகாரத்தில் நீடித்து, அமெரிக்காவிற்கு எதிராக வன்முறை, பயங்கரவாதம் மற்றும் நாசவேலை பிரச்சாரத்தை இடைவிடாமல் நடத்தி, நமது மக்களை மட்டுமல்ல, முழு தேசத்தின் ஸ்திரத்தன்மையையும் அச்சுறுத்தி உள்ளார். மதுரோ செய்த ஒவ்வொரு குற்றத்திற்கும் அமெரிக்காவிடம் ஆதாரம் உள்ளது. அவரும், அவரது மனைவியும் அமெரிக்க மண்ணில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். மதுரோவின் குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டால் மூச்சு முட்டும்.
எண்ணெய் வணிகம் தான் முதல் டார்கெட்..
நாட்டின் மிகப்பெரிய இயற்கை வளம் எண்ணெய் வணிகம் தான். ஆனால் இதனை அவர்கள் சரியாகக் கையாளாததால் அது மிகப்பெரிய இழப்பைச் சந்தித்துள்ளது. இனி அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெளிப்படையாக ஆதிக்கம் செலுத்தும். பில்லியன் கணக்கான டாலர்களை செலவழித்து மோசமான நிலையில் உள்ள எண்ணெய் வணிகத்தை சரி செய்து நாட்டிற்கு வருமானம் ஈட்டும் துறையாக மாற்றுவோம்.
மதுரோவின் கதி தான் உங்களுக்கும்..
அமெரிக்கா ராணுவம் வெனுசுலாவில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தும் என்று அதிரடியாக அறிவித்துள்ள டிரம்ப், அமெரிக்கர்களுக்கோ, அமெரிக்கா ராணுவத்தினருக்கு எதிராகவோ நாட்டின் எதிர்க்கட்சிகளோ, ராணுவமோ ஈடுபடும் பட்சத்தில் மதுரோவுக்கு ஏற்பட்ட அதே நிலை தான் உங்களுக்கும் ஏற்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

