போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிரான தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி, அமெரிக்கா கரீபியனுக்கு சுமார் 4,500 வீரர்களை தடாலடியாக அனுப்பியுள்ளது. கரீபியன் கடற்கரையில் வெனிசுலாவில் இருந்து புறப்படும் பல படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியுள்ளது.

டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தல்களுக்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். வெனிசுலாவின் முக்கிய வான் பாதுகாப்பு தளங்கள் 5,000க்கும் மேற்பட்ட போர் விமானங்களை அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் தயாராக உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். வெனிசுலா அதிபரின் இந்த ஆத்திரமூட்டும் பதிலடியை தொடர்ந்து, கரீபியனில் போர் தவிர்க்க முடியாததாகக் கருதப்படுகிறது. போதைப்பொருட்களுக்கு எதிரான போராட்டத்தில் வெனிசுலாவில் இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து டொனால்ட் டிரம்ப் பரிசீலித்து வருவதாகக் கருதப்படும் நேரத்தில் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் இந்தப்பேச்சு பரபரப்பை கிளப்பியுள்ளது.

போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிரான தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி, அமெரிக்கா கரீபியனுக்கு சுமார் 4,500 வீரர்களை தடாலடியாக அனுப்பியுள்ளது. கரீபியன் கடற்கரையில் வெனிசுலாவில் இருந்து புறப்படும் பல படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களை வெனிசுலா நிரபராதிகள் என்று கூறுகிறது. அதே நேரத்தில் டிரம்ப் நிர்வாகம் அவர்களை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்று முத்திரை குத்தியுள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்காவின் இரண்டு முக்கிய கட்சிகளும் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளன. இதனிடையே, வெனிசுலா பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பட்ரினோ தலைநகர் கராகஸில் லாஞ்சர்களைக் காட்டி எச்சரிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

வெனிசுலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து கேட்டபோது, ​‘‘தாக்குதல்கள் உயிர்களைக் காப்பாற்ற தொடர வாய்ப்புள்ளது’’ என்று ​டொனால்ட் டிரம்ப் என்று கூறினார். வெனிசுலாவில் இரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சிஐஏ-க்கு அங்கீகாரம் அளித்துள்ளதாக டிரம்ப் கடந்த வாரம் வெளிப்படுத்தினார். தரைவழி நடவடிக்கைகளை உள்ளடக்கிய இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார். இரண்டு காரணங்களுக்காக வெனிசுலாவுக்கு எதிரான நடவடிக்கையை அங்கீகரித்ததாக அவர் கூறினார்.பைடன் நிர்வாகத்தின் கீழ் திறந்த எல்லைகள் கொள்கைகளை வெனிசுலா மிக மோசமான முறையில் மீறுகிறது என்று அவர் கூறினார்.

வெனிசுலாவிலிருந்து ஏராளமான போதைப்பொருட்கள் நம் நாட்டிற்கு வருகின்றன. குறிப்பாக கார்டெல் டி லாஸ் சோலாஸுடன் இணைக்கப்பட்ட முகாம்கள் மற்றும் விமான ஓடுபாதைகளுக்கு எதிராக, தரைவழி நடவடிக்கை எடுப்பது குறித்து இப்போது பரிசீலித்து வருவதாக டிரம்ப் கூறினார்.

‘‘நாட்டைப் பாதுகாக்க மில்லியன் கணக்கான போராளிகள் குழு உறுப்பினர்கள் தயாராக இருப்பதாகவும், வெனிசுலா நாட்டைப் பாதுகாப்பதில் சுமார் 8 மில்லியன் மக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ கூறியுள்ளார். ஆனாலும், வல்லுநர்கள் அஅவரது பேச்சை நிராகரிக்கின்றனர். அமெரிக்காவின் நடவடிக்கையை வெனிசுலாவின் இறையாண்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் சதி என்று ஜனாதிபதி மதுரோ விவரித்தார். தனது அரசாங்கத்தை கவிழ்க்க வெனிசுலாவைத் தாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அவர் கூறுகிறார். ஆனாலும், தற்போது ​​அதிபர் மதுரோவை நேரடியாகத் தாக்கி அவரை ஒழிக்க அமெரிக்கா நோக்கமாகக் கொண்டிருக்கிறதா? என்பது குறித்து டிரம்ப்பிடமிருந்து எந்த அறிகுறியும் இல்லை.