MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நடிகர் சூரியை அரசியல் கொத்து பரோட்டா போடும் திமுக உ.பிஎஸ்..! விஜய்க்கு எதிராக குரளி வித்தை..!

நடிகர் சூரியை அரசியல் கொத்து பரோட்டா போடும் திமுக உ.பிஎஸ்..! விஜய்க்கு எதிராக குரளி வித்தை..!

த்ரிஷா தனது பிறந்த நாளின்போது நாயுடன் தனியாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதனை ஏஐ மூலம் சித்தரித்து வதந்தி கிளப்பினர். திமுகவுக்கும், தவெகவுக்குமான சோசியல் மீடியா வார் எல்லையை மீறிச் செல்கிறது.

2 Min read
Thiraviya raj
Published : Oct 24 2025, 11:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : x

நடிகர் சூரி, தவெக தலைவர் விஜய் வீட்டிற்குள் முடங்கி இருப்பதாக விமர்சித்து பதிவிட்டதாக பரவிய பொய் செய்திக்கு அளித்துள்ள சூரியின் பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ‘‘பேரழிவோ, பெருந்துயரமோ, ஒரு அரசியல் கட்சி அன்றாடம் மக்களுடன் நிற்க வேண்டும். ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்சி அதன் அலுவலகத்திற்கு பூட்டு போட்டு விட்டது, அதன் தலைவரோ பனையூரில் பதுங்கிக் கொண்டார்" என சூரி சொன்னதாக பொய் செய்தி பரவியது.

முதலில் இதை பலரும் உண்மை என்றே நினைத்து பதிலடி கொடுத்து வந்தனர். தவெகவை சேர்ந்த சிலரோ, சூரி இப்படிச் சொன்னாரா? இல்லையா? என்பதை ஆராயாமல் அவரைக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். அதேபோல் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த சிலரும் அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் விஜய்க்கு எதிராக சூரி தைரியமான விமர்சனத்தை முன் வைத்துவிட்டார் என்று ஃபயர் விடத் தொடங்கி விட்டனர்.

23
Image Credit : X

இந்தப்பதிவை பார்த்து பதறிப்போன சூரி தனது எக்ஸ் பக்கத்தில் தான் பேசியதாக பரவிய பொய் செய்தித் துணுக்கை பகிர்ந்து, "தம்பி, தவறான தகவலை பரப்புவது எப்போதும் சமூகத்திற்கு தீங்கையே தரும். ஆகையால் நம்முடைய ஒவ்வொரு செயலிலும் நிதானமும் முதிர்ச்சியும் காட்டுவோம். இந்த சமூகம் நல்ல மாற்றங்களை பெற தகுதியானது. அதனால் நன்மையும் அன்பும் பரப்புவதில் உங்கள் சிறந்ததைச் செய்யுங்கள். எனக்கும் பல வேலைகள் உள்ளன. உங்களுக்கும் செய்ய வேண்டியவை இருக்கின்றன. ஆகையால் இப்போது நம்முடைய பணிகளில் முழு கவனம் செலுத்துவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

தம்பி, தவறான தகவலைப் பரப்புவது எப்போதும் சமூகத்துக்கு தீங்கையே தரும்.
ஆகையால் நம்முடைய ஒவ்வொரு செயலிலும் நிதானமும் முதிர்ச்சியும் காட்டுவோம்.👍
இந்த சமூகம் நல்ல மாற்றங்களைப் பெற தகுதியானது,
அதனால் நன்மையும் அன்பும் பரப்புவதில் உங்கள் சிறந்ததைச் செய்யுங்கள்.🤝

எனக்கும் பல வேலைகள்… pic.twitter.com/uDLLhk76wK

— Actor Soori (@sooriofficial) October 23, 2025

அதேபோல் இந்த தீபாவளியை நடிகர் சூரி தனது உறவினர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடியதை வீடியோவாக பதிவிட்டிருந்தார். அதற்கு பல ரசிகர்கள் இணையவாசிகள் லைக்குகளை அள்ளி வீசினர். வெகு சிலர் இந்த கொண்டாட்டம் நன்றாக இருப்பதாக எல்லாம் கமெண்ட் தெரிவித்தார்கள். அதில் ஒரு இணையவாசி, ‘‘திண்ணைல கிடந்தவனுக்கு திட்டுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை" என்று மோசமாக கமெண்ட் போட்டார். அதற்கு சூரி தனது ஸ்டைலில், “ திண்ணையில் இல்லை நண்பா, பல நாட்களும் இரவுகளும் ரோட்டில்தான் இருந்தவன் நான்... அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும்” என்று பதிவிட்டிருந்தார்.

Related Articles

Related image1
மொத்தமாய் ஆளத்துடிக்கும் லாட்டரி மார்ட்டின் குடும்பம்..! மருமகனுக்கு தமிழ்நாடு.. மகனுக்கு பாண்டிச்சேரி... மனைவிக்கு..?
33
Image Credit : Asianet News

விஜயை திமுகவினர் சமூகவலைதளங்களில் போலி பதிவுகள் மூலம் திட்டமிட்டே வதந்திகளை பரப்பி வருகின்றனர். த்ரிஷா தனது பிறந்த நாளின்போது நாயுடன் தனியாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதனை ஏஐ மூலம் சித்தரித்து தீபாவளியன்று விஜய், த்ரிஷாவுடன் இருப்பதை போன்ற படத்தை பகிர்ந்து த்ரிஷாவுடன் தீபாவளி கொண்டாடிய விஜய் என பகிர்ந்து வதந்தி கிளப்பினர். திமுகவுக்கும், தவெகவுக்குமான சோசியல் மீடியா வார் எல்லையை மீறிச் செல்கிறது.

About the Author

TR
Thiraviya raj
விஜய் (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved