- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Winter Hair Packs : குளிர்காலத்தில் 'முடி' வறண்டு போறத தடுக்க 'இப்படி' ஒரு வழியா? சூப்பர் 'ஹேர்பேக்' உங்களுக்காக!
Winter Hair Packs : குளிர்காலத்தில் 'முடி' வறண்டு போறத தடுக்க 'இப்படி' ஒரு வழியா? சூப்பர் 'ஹேர்பேக்' உங்களுக்காக!
குளிர்க்காலத்தில் உங்கள் தலைமுடி வறட்சியைப் போக்கும் சில ஹேர் பேக்குகள் குறித்து இங்கு காணலாம்.

Winter Hair Packs
குளிர்காலத்தில் குளிர்ந்த காற்று காரணமாக சரும மட்டுமல்ல தலைமுடியும் வறட்சியாகும். இந்த சூழ்நிலையில், தலைமுடியை சரியாக பராமரிக்காவிட்டால் தேங்காய் நார் போல முடி மாறிவிடும். இதை தடுக்க ஹேர் பேக்குகள் போடுவது தான் சரியான வழி. ஆம், குளிர்காலத்தில் முடி வறட்சியை போக்கும் சில ஹேர் பேக்குகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி நன்மையை பெறுங்கள்.
ஆலிவ் ஆயில் மற்றும் முட்டை :
இந்த ஹேர் பேக்கிற்கு ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து நன்கு அடித்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு ஆயில் ஆயில் சேர்த்து கலக்கவும். தலைமுடி ஈரமாக இருக்கும் போது இந்த கலவையை தலையில் தடவி 20 நிமிடங்கள் ஊறவைத்து விட்டு பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர் :
இந்த ஹேர் பேக்கிற்கு ஒரு கிண்ணத்தில் தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து அதை தலைமுடியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து விட்டு அரை மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். பிறகு ஹெர்பல் ஷாம்பு பயன்படுத்தி சூடான நீரில் குளிக்கவும்.
பாதாம் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் :
ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல்லை எடுத்து அதனுடன் சிறிதளவு பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து அதை உச்சந்தலை முதல் நுனி வரை தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு ஹெர்பல் ஷாம்பு பயன்படுத்தி குளிர்ந்து நீரில் குளிக்கவும்.
தயிர் மற்றும் வெந்தயம் :
ஒரு கிண்ணத்தில் சிறிதளவு வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலை அந்த வெந்தயத்தை அரைத்து அந்த பேஸ்டுடன் சிறிதளவு தயிர் கலந்து அதை தலைமுடியில் தடவி சுமார் 15 நிமிடங்கள் ஊற வைத்துவிட்டு பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி சூடான நீரில் தலைக்கு குளிக்கவும்.
தேன், தேங்காய் எண்ணெய் மற்றும் வாழைப்பழம் :
இந்த ஹேர் பேக்கிற்கு ஒரு கிண்ணத்தில் நன்கு பழுத்த வாழைப்பழத்தை மசித்து கொள்ளுங்கள். அதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து அதை தலைமுடியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்துவிட்டு பிறகு ஹெர்பல் ஷாம்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

