- Home
- Politics
- இரண்டாக உடையும் காங்கிரஸ்..! ப.சிதம்பரம் கட்சிக்கு 10 சீட்..! பலிக்குமா மு.க.ஸ்டாலினின் ராஜதந்திரம் ..?
இரண்டாக உடையும் காங்கிரஸ்..! ப.சிதம்பரம் கட்சிக்கு 10 சீட்..! பலிக்குமா மு.க.ஸ்டாலினின் ராஜதந்திரம் ..?
2027 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் ராஜ்யசபா பதவி வேண்டும். அதற்கு திமுகவின் ஆதரவு தேவை என்பதில் அவர் கவனமாகவே இருந்து வருகிறார். இதனால் தான் ப.சிதம்பரமும், மு.க.ஸ்டாலினும் தனித்தனியாக சந்தித்தும் பேசி இருக்கிறார்கள்.

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்து விட்டதால் அரசியல் கட்சிகள் அனைத்தும் இறுதி கட்ட முடிவை எட்ட திட்டம் வகுத்து வருகின்றனர். இதில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி மோதல் போக்கை ஆரம்பித்துள்ளதால் தற்போது காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைய இருக்கிறது. திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதன் பின்னணியில மிகப்பெரிய திட்டத்தையும் தீட்டி இருக்கிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் அணி என்ன முடிவு எடுக்கப் போகிறது? என்ன செய்யப் போகிறார் மு.க.ஸ்டாலின்? இந்த திட்டம் வெற்றி பெறுமா? என்கிற எதிர்பார்ர்பு நிலவுகிறது.
திமுக கூட்டணியில் பல தேர்தல்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி, தற்போது தங்கள் கட்சிக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கி தரவேண்டும். அமைச்சரவையில் பங்கு தர வேண்டும் என கேட்டு வுகிறது. இதன் உச்சகட்டமாக தற்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி திரைமறைவில் தவெக கூட்டணியில் இணைவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி காங்கிரசுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம் தமிழ்நாட்டில் பாஜகவை விட காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி மிகக் குறைவாகவே இருக்கிறது என்று கணித்திருக்கும் திமுக தரப்பு.
வழக்கம்போல 25 தொகுதிகளை மட்டுமே ஒதுங்கி தர முடியும். ஆட்சி அமைப்பதில் பங்கு தர முடியாது என உறுதியாக தெரிவித்து இருக்கிறது திமுக. இதற்கு சமாதிக்காவிட்டால் கூட்டணியில் இருந்து தாராளமாக விளகிக் கொள்ளலாம் என பின்னணிகளைக் கூறி எச்சரிக்கை விடுவிக்கப்பட்டு இருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு குழுவினர் தமிழக வெற்றிக்கழகத்துடன் திரைமறைவு பேச்சுவார்த்தையும் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் இரண்டு வாரங்களில் இந்த பேச்சுவார்த்தை முடிவு பெற்று காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக்கழகத்துடன் இணையும் சூழல் ஏற்பட இருக்கிறது என்கிறார்கள்.
இந்நிலையில் மீண்டும் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாகவே இருக்கிறார். இதற்காக தொடர்ந்து ராஜதந்திரமாக அவர் பல திட்டங்களையும் வகுத்து செயல்பட்டு வருகிறார். அதன் ஒரு கட்டமாகவேகாங்கிரஸ் கட்சி தற்பொழுது இரண்டாக உடைய காத்திருக்கிறது. இதில் செல்வப்பெருந்தகை தலைமையிலான தமிழக காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக் கழகத்துடன் இணையும். ஆனால், தமிழக காங்கிரஸ் ஜனநாயக கட்சி என்ற புதிய கட்சி உதயமாக இருக்கிறது. இந்த கட்சியை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தொடங்குகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தற்பொழுது ராஜயசபா எம்பியாகவும் இருந்டு வருகிறார். வரும் 2027 வரை அவரது பதவிக்காலம் இருக்கிறது.
அவர் திமுக பக்கம் ஆதரவாக இருந்து வருகிறார். 2027 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் ராஜ்யசபா பதவி வேண்டும். அதற்கு திமுகவின் ஆதரவு தேவை என்பதில் அவர் கவனமாகவே இருந்து வருகிறார். இதனால் தான் ப.சிதம்பரமும், மு.க.ஸ்டாலினும் தனித்தனியாக சந்தித்தும் பேசி இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் ஏற்கனவே ஒரு காலகட்டத்தில் தமிழக காங்கிரஸ் ஜனநாயக கட்சி என்ற கட்சியை ப.சிதம்பரம் தொடங்கி இருந்தார். தற்போது அந்த கட்சியை மீண்டும் புதுப்பிக்கத் திட்டமிட்டும் இருக்கிறார். எனவே ப.சிதம்பரம் தலைமையில மற்றொரு காங்கிரஸ் கட்சி உதயமாக இருக்கிறது. இந்த கட்சி திமுகவுடன் கூட்டணி வைக்க முடிவும் செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே செல்வப்பெருந்தகை மீதான அதிருப்தியில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் இருப்பதால் முக்கிய காங்கிரஸ் நிர்வாகங்கள் ப.சிதம்பரத்துடன் இணைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ப.சிதம்பரம் தலைமையிலான தமிழக காங்கிரஸ் ஜனநாயக கட்சி உதயமாகும் பட்சத்தில் அந்த கட்சிக்கு பத்து தொகுதிகளை ஒதுக்கி தர திமுக திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் இரண்டு வாரங்களில் காங்கிரஸ் கட்சியின் இறுதி கட்ட முடிவுகள் என்ன என்பது தெரிந்து விடும் என்கிறார்கள் கதர் கட்சி வட்டாரத்தினர்.
