MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • எஸ்.பி.வேலுமணி விரித்த வலை... கோட்டை விட்ட அதிமுக..! அதிருப்தியில் அமித் ஷா..!

எஸ்.பி.வேலுமணி விரித்த வலை... கோட்டை விட்ட அதிமுக..! அதிருப்தியில் அமித் ஷா..!

தமிழகத்தில் ஓ.பி.எஸ், தேமுதிக, ஜான் பாண்டியன், டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் வலுவான சமூக அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு பிரம்மாண்ட கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவுக்கு டெல்லி கொடுத்த 'அசைண்மெண்ட்'.

2 Min read
Author : Thiraviya raj
Published : Mar 11 2026, 03:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
கை கொடுத்த கொங்கு மண்டலம்
Image Credit : Asianet News

கை கொடுத்த கொங்கு மண்டலம்

தமிழகத்தில் 2026 தேர்தல் களம் வெறும் வாக்குப்பதிவிற்கானது மட்டுமல்ல, அது வியூகங்களின் யுத்தமாகவும் மாறியிருக்கிறது. பீகாரைப் போல தமிழகத்திலும் ஒரு மெகா என்.டி.ஏ கூட்டணியை அமைத்து, திமுக அரசை வீழ்த்த வேண்டும் என்பதே பாஜக டெல்லி தலைமையின் மாஸ்டர் பிளான். ஆனால், அதிமுக தலைமையின் மெத்தனப் போக்கால் அந்தக் கணக்குகள் தடம் புரண்டுள்ளது, அமித் ஷாவை உச்சகட்ட கோபத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.

2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் அதிமுக சரிவைச் சந்தித்தபோது, அக்கட்சியைக் கைதூக்கி விட்டது கொங்கு மண்டலம் தான். 44 இடங்களில் அதிமுக வென்றதற்குச் சாணக்கியராகச் செயல்பட்டவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி. திராவிட ஆளுமைகளான கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத சூழலிலும், கொங்கு கோட்டையைத் தன் கட்டுக்கோப்பான நிர்வாகத்தால் கட்டிக் காத்தவர் அவர். அனைவரையும் அனுசரித்துச் செல்லும் இவரின் அணுகுமுறை தான் இன்றும் கொங்குப் பகுதியில் அதிமுகவின் உயிர்நாடியாக இருக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
கோவை ஆபரேஷன் - கைநழுவிய வாய்ப்பு
Image Credit : x

கோவை ஆபரேஷன் - கைநழுவிய வாய்ப்பு

அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிக இணையப்போகிறது என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், ஈஷா யோகா மையத்தின் மகா சிவராத்திரி விழா ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. அங்கு எஸ்.பி. வேலுமணியுடன் பிரேமலதா விஜயகாந்த் ஒரே மேடையில் காணப்பட்டது, 'கோவை ஆபரேஷன்' கச்சிதமாக முடிந்துவிட்டது என்றே அனைவரையும் நம்ப வைத்தது. தேமுதிகவை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்குள் கொண்டு வருவதற்கான அத்தனை அடித்தளங்களையும் வேலுமணி அமைத்திருந்தார்.

ஆனால், தொகுதிப் பங்கீடு மற்றும் எதிர்கால அங்கீகாரம் தொடர்பான இறுதி முடிவுகளை எடுப்பதில் அதிமுக தலைமை காட்டிய தயக்கம், திமுகவுக்குப் பொன்னான வாய்ப்பாக அமைந்தது. நள்ளிரவில் அரங்கேறிய ரகசியப் பேச்சுவார்த்தைகள் மூலம், திமுக ஒரு அதிரடி 'அட்டாக்' கொடுத்து தேமுதிகவைத் தன் பக்கம் இழுத்துவிட்டது.

33
அமித் ஷாவின் கோபமும்... அதிமுகவின் தோல்வியும்!
Image Credit : x

அமித் ஷாவின் கோபமும்... அதிமுகவின் தோல்வியும்!

தமிழகத்தில் ஓ.பி.எஸ், தேமுதிக, ஜான் பாண்டியன், டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் வலுவான சமூக அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு பிரம்மாண்ட கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவுக்கு டெல்லி கொடுத்த 'அசைண்மெண்ட்'. ஆனால், இந்தச் சிறிய அமைப்புகளை ஒருங்கிணைப்பதிலும், அவர்களின் கோரிக்கைகளைச் சரிவரக் கையாளுவதிலும் எடப்பாடி பழனிசாமி கோட்டை விட்டுவிட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

"கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை எஸ்.பி. வேலுமணியிடமே முழுமையாக விட்டிருந்தால், அவர் தேமுதிக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் இழுத்து வந்திருப்பார். ஆனால், ஈகோ, அதிகாரப் போட்டியால் அதிமுக தலைமை அதற்கு வழிவிடவில்லை" என்பதுதான் தற்போதைய டெல்லி பாஜகவின் குற்றச்சாட்டு.

About the Author

TR
Thiraviya raj
எஸ். பி. வேலுமணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
DMK NDA Alliance : பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
Recommended image2
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!
Recommended image3
TN Politics: தவெக அமைச்சரவையில் விசிக! அப்படியே யூ டர்ன் அடித்த திருமாவளவன்! சுக்குநூறாக உடைந்த திமுக கூட்டணி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved