கருப்பு உளுந்து அல்லது வெள்ளை உளுந்து இவை இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை வழங்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக இட்லி தோசை மாவு தயாரிப்பதற்கு வெள்ளை உளுந்து தான் அதிகமாக பயன்படுத்துவார்கள். ஆனால், வெள்ளை உளுந்தை(white gram) விட கருப்பு உளுந்து (black gram) தான் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் என்று பலருக்கும் தெரிவதில்லை. அது ஏன் என்று இப்போது இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாங்க..
கருப்பு உளுந்தின் நன்மைகள் :
1. பெண்களின் ஆரோக்கியத்திற்கு..
பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பு உளுந்தில் செய்த களி, கூழ் போன்ற உணவுகளை செய்து கொடுத்தால் பி.சி.ஓ.டி போன்ற ஹார்மோன் பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
2. இதய ஆரோக்கியத்திற்கு..
இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவை சீராக உங்களது அன்றாட உணவில் வெள்ளை உளுந்துக்கு பதிலாக இனி கருப்பு உளுந்தை சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் கருப்பு உளுந்தில் பொட்டாசியம், மெக்னீசியம் நிறைந்துள்ளதால் அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
3. எலும்பு மற்றும் தசைகளை வலிமையாக்கும்..
கருப்பு உளுந்தில் பாஸ்பரஸ், கல்சியம் நிறைந்துள்ளன. அவை எலும்புகளின் ஆரோக்கியத்தை வலிமைப்படுத்த பெரிதும் உதவுகிறது. மேலும் நரம்பு தளர்ச்சி, தசை பலவீனம் போன்ற பிரச்சனைகளு கருப்பு உளுந்து அருமருந்தாகும். இது தவிர மலச்சிக்கல், மூலவியாதி பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்க இது உதவுகிறது.
4. கல்லீரல் ஆரோக்கியத்திற்கு...
கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி அதை சீராக செயல்பட கருப்பு உளுந்து உதவி செய்கிறது. ஆகவே உங்களது கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பதற்கு கருப்பும் உளுந்தை உங்களது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
5. சரும ஆரோக்கியத்திற்கு..
கருப்பு உளுந்து சருமத்தை அழகாக மாற்றும். அதாவது இது உடலுக்குள் சென்று ஆன்ட்டி ஏஜிங் கூறுகளாக செயல்படும். இதனால் சருமம் பளபளக்கும். இது தவிர, முடி உதிர்வால் அவதிப்படுபவர்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும்.
6. கர்ப்பிணி பெண்களுக்கு..
கர்ப்பிணிகளுக்கு தேவையான இரும்புச்சத்து மற்றும் போலிக் ஆசிட் கருப்பு உளுந்தில் காணப்படுகின்றன. எனவே கர்ப்பிணிகள் தங்களது உணவில் கட்டாயம் கருப்பு உள்ளது சேர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றன.
கருப்பு உளுந்தை பயன்படுத்தும் வழிகள் :
- இட்லி, தோசை மாவு தயாரிப்பதற்கு வெள்ளை உளுந்து பயன்படுத்துவதற்கு பதிலாக கருப்பு உளுந்து பயன்படுத்தலாம்.
- கருப்பு உளுந்து கஞ்சியை காலை உணவாக சாப்பிடலாம்.
- கருப்பு உளுந்தில் லட்டு செய்து சாப்பிடலாம்.
வெள்ளை உளுந்து நன்மைகள் :
- வெள்ளை உளுந்தில் நார்ச்சத்து இருக்கிறது. இருந்தாலும், கருப்பு உளுந்தில் தோல் இருப்பதால் அதில் தான் நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன.
- வெள்ளை உளுந்தில் புரதம் உள்ளன. ஆனால் கருப்பு உளுந்தில் தான் அதிகமாக புரதம் உள்ளது.
இறுதியாக..
உங்களுக்கு தினசரி உணவில் கருப்பு உளுந்தை சேர்த்துக் கொண்டால் பலவித ஆரோக்கிய நன்மைகளை பெறுவீர்கள்.


