உடம்பெல்லாம் வலியோட சத்தே இல்லாம இருக்கீங்களா? உளுந்து கஞ்சி செஞ்சு சாப்பிடுங்க!
முன்பெல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி சத்தான ஆகாரங்களை செய்து கொடுப்பர். இதனால் வளரும்போதே குழந்தைகள் பலம் கொண்டவர்களாக இருப்பர். இப்போது துரித உணவுகளின் மோகத்தால் அந்த பழக்கம் குறைந்துள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் ஆரோக்கியம் பெற சில உணவுகளை தவிர்க்காமல் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் உளுந்தங்கஞ்சி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதை வாரம் இருமுறை அல்லது தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது மூட்டு, இடுப்பு, கால் வலி உள்ளிட்ட பல பிரச்சனைகள் தீரும். மாதவிடாய் கால சிரமங்கள் குறையும். மெலிந்த உடல்வாகு உடையவர்கள் தொடர்ந்து இதை அருந்தி வந்தால் எடை அதிகரிக்கும். சிறுநீர் தொடர்பான நோய்கள் பறந்து போகும். இதில் தோல் அகற்றப்படாத உளுந்து சேர்த்து கொள்வதால் எலும்புகள் பலப்படும்.
இதையும் படிங்க; New year 2023: வெறும் 25 நிமிடங்களில் கேரட் கேக் ஆரோக்கியமான புத்தாண்டு ரெசிபிகள் இதோ!
உளுந்து கஞ்சி செய்முறை
- இதற்கு 100கி கருப்பு உளுந்து, கால் கப் அரிசி, வெல்லம் அல்லது கருப்பட்டி, உப்பு தேவையான அளவு, துருவிய தேங்காய், ஏலக்காய் தூள் ஆகியவை தேவை.
- முதலில் கருப்பு உளுந்தை வாணலியில் போட்டி சிவக்கும் வரை வறுக்க வேண்டும். அதை தனியாக எடுத்து வைத்துவிட்டு அதே வாணலியில் பச்சரிசி அல்லது புழுங்கலரிசியை பொரிந்து வரும் வரை வறுக்கவும். வறுத்த உளுந்து, அரிசி ஆகியவை சூடு ஆறிய பிறகு நன்கு பொடியாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- ஒரு கப் தண்ணீரில் தேவையான அளவு வெல்லம் சேர்த்து நன்கு கரையும் வரை கொதிக்கவிடவும். பாகு பதத்திற்கு செய்ய வேண்டிய அவசியமில்லை. வெல்லம் கரைந்தால் போதும்.
- குழந்தைகள் விரும்பி உண்பதற்காக முந்திரி பருப்பு, காய்ந்த திராட்சை, துருவிய தேங்காய் ஆகியவற்றை நெய்யில் வறுத்து கஞ்சியில் சேர்த்து கொள்ளுங்கள். கட்டாயமில்லை.
- அரைத்த மாவினை தேவையான அளவு எடுத்து அதனுடன் தண்ணீர் சேர்த்து கலக்கி கொள்ளுங்கள். கட்டி கட்டியாக இல்லாமல் கலக்கிய பின்னர் மிதமான சூட்டில் கொதிக்க வையுங்கள். அதனுடன் ஏற்கனவே கரைத்து வைத்துள்ள வெல்லத்தை சேர்த்து இறக்கவும். வாசனைக்காக பொடித்த ஏலக்காயை தூவலாம்.
- இதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு, காய்ந்த திராட்சை, தேங்காய் ஆகியவற்றை தூவி கொள்ளவும். சத்தான உளுத்து கஞ்சி தயார்.
இதையும் படிங்க; Star anise: நலம் தரும் நட்சத்திர சோம்பு.. பாலியல் வாழ்க்கையின் ப்ளஸ்!