யூரிக் அமில பிரச்சனையால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் இந்த சட்னியை செய்து சாப்பிடுங்கள். அற்புத பலன்கள் கிடைக்கும்.

இன்றைய காலகட்டத்தில் பலரும் பல விதமான நோய்களால் அவதிப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் யூரிக் அமில பிரச்சினை. மக்கள் மத்தியில் இது ஒரு பொதுவான பிரச்சினையாகி விட்டது. உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமானால் மூட்டு வலி, கீல்வாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். வாழ்க்கை முறை மற்றும் சீரான உணவுகளில் சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் யூரிக் அமில பிரச்சனையிலிருந்து விடுபடலாம். இத்தகைய சூழ்நிலையில், யூரிக் அமிமலப் பிரச்சனையில் இருந்து நிவாரண பெற விரும்பினால் நெல்லிக்காயில் சட்னி செய்து சாப்பிடுங்கள். அதை செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நெல்லிக்காய் சட்னி செய்முறை :

நெல்லிக்காயில் சட்னி செய்வதற்கு முதலில் 2-3 புதிய பெரிய நெல்லிக்காய்களை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு அவற்றை மிக்ஸியில் சேர்த்து அதனுடன் கொத்தமல்லி இலைகள் பச்சை மிளகாய், சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். விரும்பினால் இதனுடன் ஒரு ஸ்பூன் வெள்ளை எள்ளையும் சேர்த்துக் கொள்ளலாம். பிறகு எப்போதும் போல கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அவ்வளவுதான் சூப்பரான நெல்லிக்காய் சட்னி தயார் .இந்த சட்னியை நீங்கள் இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.

நெல்லிக்காய் சட்னி சாப்பிடுவதன் நன்மைகள் :

நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் இது யூரிக் அமிலத்தை குறைக்கும். மேலும் இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

நெல்லிக்காயை எப்படியும் சாப்பிடலாம்?

நெல்லிக்காயை சட்னி தவிர ஜாம் அல்லது சூடான நீரில் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி சேர்த்து இரவு தூங்கும் முன் குடிக்கலாம் அல்லது தேனுடன் நெல்லிக்காய் கலந்து சாப்பிடலாம்.

யூரிக் அமில பிரச்சனை அதிகமாவதற்கு காரணங்கள் :

யூரிக் அமில பிரச்சனை அதிகமாவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை வறுத்த மற்றும் அசைவ உணவுகளை அதிகமாக சாப்பிடுதல், சிவப்பு இறைச்சி அதிகமாக சாப்பிடுதல், கடல் உணவுகளை அதிகமாக சாப்பிடுதல், மது அருந்துதல், இனிப்பு பானங்கள் மற்றும் குளிர்பானங்களை அதிகமாக குடித்தல் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக செயலிழப்பு போன்றவை ஆகும்.