- Home
- Politics
- விஜய் அமைக்கும் மெகா கூட்டணி... தவெகவுக்கு உறுதியளித்த கட்சிகள்..! கலக்கத்தில் திமுக- அதிமுக..!
விஜய் அமைக்கும் மெகா கூட்டணி... தவெகவுக்கு உறுதியளித்த கட்சிகள்..! கலக்கத்தில் திமுக- அதிமுக..!
தவெக தனித்து போட்டியிடும் என ஆரம்ப கட்டத்தில் பேசப்பட்டு வந்தநிலையில் இப்போது பலமான மூணாவது கூட்டணி அமைப்பதால் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கும் தவெக மிகப்பெரிய சவால் விடும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய் தலைமையிலான மூன்றாவது கூட்டணி கிட்டத்தட்ட இறுதி நிலையை எட்டி இருக்கிறது. தவெகவுடன் காங்கிரஸ் கட்சி, தேமுதிக, டிடிவி.தினகரன், ஓபிஎஸ், காளியம்மாள் போன்றோர் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இந்த கூட்டணி திரை மறைவில் இறுதி செய்யப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
தவெக தனித்து போட்டியிடும் என ஆரம்ப கட்டத்தில் பேசப்பட்டு வந்தநிலையில் இப்போது பலமான மூணாவது கூட்டணி அமைப்பதால் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கும் தவெக மிகப்பெரிய சவால் விடும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்சகட்ட நடிகராக வலம்வந்த நடிகர் விஜய் திடீரென சினிமாவுக்கு முழுக்க போட்ட நிலையில், புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். தவெக கட்சியை தொடங்கி நிறைய போராட்டங்கள், சர்ச்சைகள், பிரச்சனைகளுக்கு மத்தியில் தொடர்ந்து விடாப்பிடியாக களப்பணியாற்றி வருகின்றனர். ஆரம்பத்தில் தனியாவே போட்டியிடலாம் என முடிவு எடுத்திருந்தது தவெக. அக்கட்சியின் நிர்வாகி நிர்மல் குமார் செய்தியாளர்கிட்ட பேசும்போது, ‘‘திமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளைத் தவிர யார் வேண்டுமானாலும் தவெகவுடன் இணையலாம் என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் ஆகியோர் தவெகவில் இணைந்தது புதிய பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அதிமுகவின் பல முக்கிய விஐபிகளை தவெகவில் இணைப்பதற்கான பணிகளை செங்கோட்டையன் திரை மறைவில செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் ஏற்கனவே டிடிவி.தினகரனும், ஓ.பன்னீர் செல்வமும் செங்கோட்டையனுடன் தொடர்பில் இருக்கிறார்கள். இப்போது செங்கோட்டையன் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு டிடிவி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் தவெகவில் இணையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்கள் இருவருக்கும் சேர்த்து 30 தொகுதிகளை வழங்க தவெக பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு வருகிறது. இதற்கிடையில் திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் உச்ச கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.இதன் ஒரு கட்டமாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தொடர்பாக சில முடிவுகளை தெரிவித்து இருக்கிறார். அதன்படி திரை மறைவில் தவெகவுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. நடிகர் விஜயை பொருத்தவரை காங்கிரஸ் கட்சி தங்களுடன் கூட்டணி வைக்க வேண்டும் என பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இதனால் காங்கிரஸ் கட்சி எந்த நேரமும் திமுகவிலிருந்து கழன்று தவெக பக்கம் பல்டி அடிக்கலாம். இதற்கு இடையில் ஏற்கனவே பாஜகவுடன் இணைவதற்கான பணிகளை நாம் தமிழர் காளியம்மாள் முயன்று வண்ந்தார். முன்பு அவர் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது தோல்வியில் முடிந்தது.
அதனை தொடர்ந்து அவர் பாஜகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார். இப்போது நடிகர் விஜய் ஆலோசனையின் பெயரில் காளியம்மாள் தவெகவில் இணைய முடிவு செய்யப்பட்டதாக தெரியவந்திருக்கிறது. இதை தொடர்ந்து காளியம்மாளுக்கு நாகப்பட்டினம் தொகுதியை விட்டு தரவும் தவெக சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் நூற்றுக்கணக்கான பெண்களுடன் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பெண்களுடன் தவெகவில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. அதே போல் தேமுதிக ஒன்பதாம் தேதி தனது இறுதி முடிவை தெரிவிக்க இருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. தவெகவுடன் இணையலாம் என இறுதி முடிவை எட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.எல்.கே.சுதீஷும், பிரேமலதாவின் இரண்டு மகன்களும் தவெகவில் இணைவதையே விருப்பமாக தெரிவித்திருக்கிறார்கள்.
இதனால் இப்போதைய சூழ்நிலையில் தவெகவுடன் காங்கிரஸ் கட்சி, தேமுதிக, டிடிவி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம், காளியம்மாள் போன்றோர் இணைய உள்ளனர். இதன் மூலம் வரும் சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது மெகா கூட்டணி அமைந்து தேர்தல் களம் மிகப் பெரிய போர்க்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பகிறது.
