உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளம், ஆனாலும் வறுமை! வெனிசுலாவின் மறுபக்கம்
அமெரிக்க அதிபர் டிரம்ப், நிகோலஸ் மதுரோவைப் பிடிப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து வெனிசுலா விவாதப் பொருளாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளம் கொண்ட இந்த நாட்டின் 7 அதிர்ச்சியூட்டும் உண்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள், இவை பலருக்கும் தெரியாதவை...

இயற்கை வளம் கொழிக்கும் வெனிசுலா
சிஐஏ தரவுகளின்படி, வெனிசுலா கனிம வளம் நிறைந்த நாடு. இங்கு பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, தங்கம், வைரம் போன்ற வளங்கள் உள்ளன. இருப்பினும், வெள்ளம், நிலச்சரிவு, வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களையும் அடிக்கடி சந்திப்பதுண்டு.
அமெரிக்காவின் கவனத்தை ஈர்த்த எண்ணெய் வளம்
வெனிசுலாவிடம் உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளம் உள்ளது (303 பில்லியன் பேரல்கள்). சவுதி அரேபியா, ஈரான் அடுத்த இடங்களில் உள்ளன. இதனால் அமெரிக்காவின் கவனம் இதன் மீது உள்ளது.
முக்கிய ஏற்றுமதி பொருட்கள்
2023ல் வெனிசுலாவின் மிகப்பெரிய ஏற்றுமதி பங்குதாரர் அமெரிக்கா. சீனா, ஸ்பெயின், பிரேசில், துருக்கி அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கச்சா எண்ணெய், பெட்ரோலியம் கோக் முக்கிய ஏற்றுமதி பொருட்கள்.
இராணுவத்தில் பணியாற்றுவது கட்டாயம்
வெனிசுலாவில் 18-50 வயதுக்குட்பட்ட குடிமக்கள் இராணுவப் பயிற்சி பெறுவது கட்டாயம். பெண்களுக்கு 18-30 மாதங்களும், ஆண்களுக்கு 24-30 மாதங்களும் இந்த சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல்
அமெரிக்காவின் கூற்று படி, வெனிசுலா போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் மையமாக உள்ளது. கோகோயின், மரிஜுவானா போன்றவை இங்கு உற்பத்தி செய்யப்பட்டு, கொலம்பியா, ஈக்வடார் வழியாக அமெரிக்காவுக்கு கடத்தப்படுகிறது.
பணவீக்கம்
IMF-ன் அறிக்கை படி, 2026ல் வெனிசுலாவின் சராசரி நுகர்வோர் விலை 682.1% அதிகரித்தது. பணவீக்க விகிதம் 2021ல் 1,588.5% ஆகவும், 2020ல் 2,355.1% ஆகவும் இருந்தது.
கொத்து கொத்தாக பறிக்கப்பட்ட மனித உயிர்கள்
மதுரோ அரசு, அரசியல் எதிர்ப்பை ஒடுக்க சித்திரவதை, கொலைகள் மற்றும் சட்டவிரோத படுகொலைகளைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. 2018-19ல் சுமார் 7,000 பேர் கொல்லப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.