- Home
- Politics
- யாருக்கு சீட்டு..? யாருக்கு வேட்டு..? அலறும் அமைச்சர்கள்..! மு.க.ஸ்டாலின் கையில் உளவுத்துறை ரிப்போர்ட்..!
யாருக்கு சீட்டு..? யாருக்கு வேட்டு..? அலறும் அமைச்சர்கள்..! மு.க.ஸ்டாலின் கையில் உளவுத்துறை ரிப்போர்ட்..!
திமுகவை பொருத்தவரை வேட்பாளர்கள் தேர்வு மிக கடுமையான பரிதோதனைக்கு பிறகு தொகுதி கொடுக்கப்படும் என்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போதைய திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருப்பவர்கள் தங்களது சொண்ட்த தொகுதியில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்களா? அவர்களுக்கு மீண்டும் தேர்தலில் சீட் ஒதுக்கலாமா என்பது குறித்து ஆய்வு செய்ய மு.க.ஸ்டாலின் உளவுத்துறையை கேட்டுக்கொண்டார். அதன்படி உளவுத்துறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வசம் ஒரு அருக்கையை கொடுத்திருக்கிறார்கள். அதில் எந்த அமைச்சர்களுக்கு வெற்றி கிடைக்கும்? எந்த அமைச்சர்கள் தோல்வியை தழுவுவார்கள்? போன்ற தகவல்கள் அடங்கி உள்ளன.
வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக உறுதியாக இருக்கிறார். தேர்தல் களத்தில் உண்மை நிலவரத்தை அறிவதற்காக மூன்று சிறப்பு குழுக்களை அவர் அமைத்திருக்கிறார். இந்த சிறப்பு குழுவினர் தமிழ்நாடு முழுவதும் மக்கள் மத்தியில் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்து வருகின்றனர். திமுகவில் வேட்பாளர்கள் தேர்வு மும்பரமாக நடைபெற்ற வருகிறது. இதில் தற்போது அமைச்சர்களாக இருப்பவர்களுக்கு மீண்டும் தொகுதியை ஒதுக்கலாமா? எந்த அமைச்சர்கள் மீண்டும் வெற்றி பெறுவார்கள்? என்பது குறித்து ஒரு ஆய்வு அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தரப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் தற்போதைய அமைச்சர்களில் சிலர் மட்டுமே வெற்றி பெறும் சூழல் இருப்பதாகவும், பலர் தோல்வியை சந்திக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பின் மகேஷ் பொய்யா மொழி, சேகர்பாபு, தங்கம் தென்னரசு, மூர்த்தி, கீதா ஜீவன் உள்ளிட்டோர் எளிதாக வெற்றி பெற்று வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பெரிய கருப்பன், ரகுபதி, எஸ்.எஸ்.சிவசங்கர், மஸ்தான் போன்றோர் தோல்வியடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இதன் அடிப்படையில் பெரும்பாலான அமைச்சர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது எனக் கூறப்படுகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் சிபாரிசு அடிப்படையில் தொகுதி ஒதுக்கப்படக்கூடாது என்பதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.
உளவுத்துறை தயாரித்து வரும் ரிப்போர்ட் அடிப்படையில் மட்டுமே வேட்பாளர்கள் தேர்வு செய்ய வேண்டும் என திட்டமிட்டு இருக்கிறார். எனவே வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவினர் யாரை தேர்வு செய்தாலும், அவர் குறித்து உளவுத்துறை தரும் தகவல் அடிப்படையில் மட்டுமே தொகுதி ஒதுக்க வேண்டும் என்பதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். எனவே பணம் செலவு செய்தோ, சிபாரிசின் பெயரிலோ இந்த முறை கட்சி பிரமுகர்கள் வேட்பாளர்களாக தகுதி பெற முடியாது.
அதே சமயம் உதயநிதி ஸ்டாலின் சிபாரிசு செய்யும் 40 வேட்பாளர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிபாரிசு செய்யும் 28 உறுப்பினர்களுக்கும் வாய்ப்புகள் தருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருக்கிறார். இதை தவறாக பல அமைச்சர்கள் தொகுதி மாறி நிறுத்தப்படவும், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வாரிசுகளுக்கு தொகுதி ஒதுக்கி தரப்படும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. எனவே திமுகவை பொருத்தவரை வேட்பாளர்கள் தேர்வு மிக கடுமையான பரிதோதனைக்கு பிறகு தொகுதி கொடுக்கப்படும் என்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
