- Home
- Cinema
- டிரெய்லர்
- திரும்பிப் போற ஐடியாவே இல்ல... I am Coming - அரசியல் டயலாக்குகள் உடன் அனல்பறக்கும் ஜனநாயகன் ட்ரெய்லர்..!
திரும்பிப் போற ஐடியாவே இல்ல... I am Coming - அரசியல் டயலாக்குகள் உடன் அனல்பறக்கும் ஜனநாயகன் ட்ரெய்லர்..!
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் பட ட்ரெய்லர் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதில் ஏராளமான அரசியல் வசனங்கள் இடம்பெற்று உள்ளன. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Jana Nayagan Trailer Dialogues
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9-ந் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், அதன் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ட்ரெய்லரில் பக்கா மாஸ் ஆக்ஷன் காட்சிகளுடன், தளபதியின் அனல்பறக்கும் டயலாக்குகளும் இடம்பெற்று உள்ளன. விஜய் அரசியலுக்குள் நுழைந்திருப்பதால், அரசியல் டயலாக்குகளும் சற்று தூக்கலாகவே இந்த ட்ரெயலரில் உள்ளது. அது என்னென்ன டயலாக்குகள் என்பதை விரிவாக பார்க்கலாம்.
அனல்பறக்கும் வசனங்கள்
ட்ரெய்லர் தொடக்கத்திலேயே விஜய்யை பற்றிய பில்டப் காட்சி தான் இடம்பெற்று உள்ளது. அதில் ‘சம்பவம் பண்றவன கேள்வி பட்டிருப்ப, அதுலயே ரெக்கார்டு வைக்குறவன கேள்வி பட்டிருக்கியா என்கிற வசனம் ஒலிக்க கையில் தீப்பந்தத்துடன் எண்ட்ரி கொடுக்கிறார் விஜய். அதுதான் தளபதி தொட்றாத பீஸ் பீஸ் போட்ருவாப்ல என்கிற டயலாக் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் சூப்பரா இருக்கும்
பின்னர் விஜய்யிடம் ஒரு குழந்தை, அத்தனை பேரை போட்டு அடிச்சிருக்கியே நீ என்ன சூப்பர் மேனா என கேட்க, அதற்கு விஜய், நான் சாதா மேன் தான் பேபி, ஆனா செய்யுற சம்பவம் எல்லாம் சுப்பரா இருக்கும்னு சொல்வாங்க என கூறுகிறார்.
இதுக்குள்ள வராத ஓடிப்போயிடு
இதையடுத்து பாபி தியோல் பேசும் ஒரு வசனம் விஜய்யின் தற்போதைய அரசியல் சூழலுக்கு ஒத்துப்போகிறது. ‘மக்களுக்கு நல்லது பண்றேன்னு இதுக்குள்ள வராத, உயிர காப்பாத்திக்கிட்டு ஓடிப்போயிடு” என வில்லன் சொல்ல, தன்னுடைய நக்கலான சிரிப்பால் பதிலடி கொடுக்கும் விஜய், வில்லன்களை துவம்சம் செய்கிறார். பின்னணி ராவண மவன்டா ஒத்தையில் நிக்குறேன் எவன் டா என்கிற பாடல் வரிகள் ஒலிக்கிறது.
மொத்த அயோக்கியனுங்களும் ஒன்னா நிக்குறாங்க
மொத்த அயோக்கியனுங்களும் ஒன்னா நிக்குறானுங்க, அவங்க ஜெயிக்க கூடாது என விஜய், பாபா பாஸ்கரிடம் பேசுகிறார். அடுத்த சீனில் அரசியல்வாதியாக வரும் பிரகாஷ் ராஜ், உன்னால ஒன்னும் பண்ண முடியாது விலகி போ என சொல்கிறார். அடுத்த காட்சியில், மக்கள் அவனை கொண்டாடிக்கிட்டு இருக்காங்க. இப்போ அவனை கொன்றால் அவன் கடவுள் ஆகிடுவான் என வில்லன் சொல்லும் டயலாக் இடம்பெற்றுள்ளது.
திரும்பிப் போற ஐடியாவே இல்ல
இறுதியாக தன்னை எதிர்ப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் ஒரு டயலாக் பேசி இருக்கிறார். அதில், ‘உன்னை காலி பண்ணிடுவேன், அசிங்கப்படுத்திடுவேன்னு சொல்ற எவனா இருந்தாலும் சரி, திரும்பிப் போற ஐடியாவே இல்ல. I am Coming என மாஸாக சொல்லி இருக்கிறார் விஜய். இது அவரின் தற்போதைய அரசியல் சூழலுக்கும் பொறுத்தமான வசனமாக இருக்கிறது.

