- Home
- Cinema
- ஜனநாயகன் ஆடியோ லாஞ்சில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி... அடடே இதைவச்சு ஒரு ஃபீல் குட் படமே எடுக்கலாமே..!
ஜனநாயகன் ஆடியோ லாஞ்சில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி... அடடே இதைவச்சு ஒரு ஃபீல் குட் படமே எடுக்கலாமே..!
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கட் ஜலீல் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரியை பார்க்கலாம்.

Vijay Kutty Story in Jana Nayagan Audio Launch
நடிகர் விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா என்றால் எப்பவுமே ஸ்பெஷல் தான், அதிலும் அவரின் கடைசி பட இசை வெளியீட்டு விழா என்றால் சொல்லவா வேண்டும், அதில் நிறைய அழகிய தருணங்கள் இடம்பெற்று இருந்தன. அதில் ஒன்று தான் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி. மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன?
ஒரு ஆட்டோக்காரர் கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்கிறார். அப்போது வெளியே நல்லா மழை பேஞ்சுகிட்டு இருக்கு. உடனே அந்த ஆட்டோக்காரர் தன்னிடம் இருந்த குடையை எடுத்து கொடுத்து, இதை எடுத்துட்டு போமா என சொல்கிறார். அப்போ அந்த பெண், அண்ணா இதை எப்படி நான் உங்ககிட்ட திருப்பி கொடுக்குறது என கேட்கிறார். அதற்கு அந்த ஆட்டோக்காரர், யாராவது தேவைப்படுபவர்களுக்கு கொடுத்திருமா என சொல்லிவிட்டு செல்கிறார்.
அந்த கர்ப்பிணிப் பெண் குடையை பிடித்துக் கொண்டு ஆஸ்பத்திக்கு சென்றபோது, அந்த ஆஸ்பத்திரி வாசலில் ஒரு பெரியவர், மழையில் நனைந்தபடி நின்றுகொண்டிருக்கிறார். அப்போது அந்த பெண் அவரிடம் குடையை கொடுத்து, ஐயா இதை எடுத்துட்டு போங்க என சொல்கிறார். அதற்கு அந்த பெரியவர், நீ யாருன்னே எனக்கு தெரியாது, எப்படிமா இந்த குடையை உன்கிட்ட திருப்பி கொடுக்குறது என கேட்கிறார். அதற்கு அந்த பெண், யாருக்காவது தேவைப்படுபவர்களுக்கு கொடுத்திருங்க ஐயா என சிரிச்சுக்கிட்டே சொல்கிறார்.
தளபதியின் கடைசி குட்டி ஸ்டோரி
இதையடுத்து அந்த பெரியவர் அந்த குடையை பிடித்துக் கொண்டு பஸ் ஸ்டாண்டுக்கு சென்று பஸ் ஏறுகிறார். அப்போது அங்கு ஒரு பூக்கார அம்மா, மழையில் நனையாமல் இருக்க தலைமீது அட்டை ஒன்றை வைத்துக் கொண்டு பூ வியாபாரம் செய்து வருவதை பார்க்கிறார். உடனே அந்த பெரியவர் தன்னிடம் உள்ள குடையை கொடுத்துவிட்டு பஸ் ஏறி சென்றுவிடுகிறார். பின்னர் அந்த பூக்கார அம்மா அந்த குடையை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வரும்போது ஒரு ஸ்கூல் படிக்கும் பெண் மழையில் நனைந்தபடி ஓடி வருவதை பார்க்கிறார்.
விஜய் சொன்ன நல்ல மெசேஜ்
உடனே தன்னிடம் உள்ள குடையை அந்த ஸ்கூல் படிக்கும் பெண்ணிடம் கொடுக்கும் பூக்கார பெண், மழையில நனையாதம்மா, இதை எடுத்துட்டு வீட்டுக்கு போ என சொல்கிறார். குடை பிடித்தபடி அந்த பெண் வீட்டுக்கு வரும்போது, அந்த பொண்ணோட அப்பா, அய்யோ பொண்ணு மழையில நனைச்சுகிட்டே வருமேனு பதற்றத்தோடு வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறார். அந்த பெண்ணோட அப்பா வேறயாருமில்லை, கர்ப்பிணிக்கு குடை கொடுத்து உதவிய ஆட்டோக்காரர் தான்.
அவர் கொடுத்த குடை மீண்டும் அவரிடமே வந்துவிட்டது. இந்த கதையின் மூலம் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால், முடிந்தவரைக்கும் நல்லது பண்ணுங்க, சின்ன சின்னதா உதவி பண்ணுங்க. அதைமட்டும் செஞ்சு பாருங்க வாழ்க்கை ஜாலியா இருக்கும்” என்கிற தத்துவத்தோடு விஜய் தன்னுடைய குட்டி ஸ்டோரியை முடித்துக் கொண்டார். விஜய் சொன்ன இந்த குட்டி ஸ்டோரியை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

