- Home
- Cinema
- எனக்காக எல்லாத்தையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன் - விஜய் பேச்சு
எனக்காக எல்லாத்தையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன் - விஜய் பேச்சு
ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் உள்ள புக்கட் ஜலீல் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், அதில் தளபதி விஜய் என்ன பேசினார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Thalapathy Vijay Speech
நடிகர் விஜய் தன்னுடைய பாணியிலேயே, ரசிகர்களை பார்த்து அய்யா, ராசா... யார்ரா நீங்கல்லாம்... என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பிகளுக்கு வணக்கம் சொல்லி தன்னுடைய உரையை தொடங்கினார். சில படங்கள் பெயரை கேட்டாலே மலேசியா தான் ஞாபகத்துக்கு வரும் என சொல்லிவிட்டு முதலில் நம்ம நண்பர் நடிச்ச பில்லா என சொன்னதும் அரங்கம் அதிர விசில் பறந்தது. பின்னர் என் படங்கள் என காவலன், குருவி ஆகியவற்றை குறிப்பிட்டு பேசினார் விஜய்.
ரசிகர்களுக்காக சினிமாவை விட்டு போறேன்
தொடர்ந்து பேசிய விஜய், இலங்கைக்கு பிறகு மலேசியாவில் தான் அதிகப்படியான தமிழ் மக்கள் இருக்கிறார்கள். எனக்கு ஒன்னுன்னா தியேட்டர்ல வந்து நிக்குறாங்க. அதுக்காக அடுத்த 30-33 வருஷம் அவங்களுக்ககா வந்து நிக்க போறேன். இந்த விஜய், ரசிகர்களுக்காக சினிமாவை விட்டு போறேன். நான் ஒரு சின்ன மணல் வீடு கட்ட ஆசைப்பட்டு தான் சினிமாவுக்குள் வந்தேன். ஆனால் நீங்க என்னை அரண்மனையில் அமர வைத்துவிட்டீர்கள். வெள்ளத்துல மிதக்குறவனுக்கு நீங்க படக குடுத்திங்கனா பாலை வனத்துல நீங்க தவிக்குறப்போ அது ஒட்டகமா உங்களுக்கு உதவி பண்ணும். அதை தான் நான் செய்யப்போறேன் என கூறினார்.
மமிதா வெறும் டியூட் மட்டுமல்ல
தொடர்ந்து படத்தில் தன்னுடன் பணியாற்றியவர்கள் பற்றி பேசிய விஜய், மமிதா வெறும் டியூட் மட்டுமல்ல, இந்த படத்துக்கு அப்புறம் ஒரு தங்கையாக எல்லோர் குடும்பத்திலும் கொண்டாடப்படுவார். இயக்குனர் எச்.வினோத் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட இயக்குநர். நாங்கள் முன்பே இணைந்து பணியாற்ற வேண்டியது. அதற்காக கலந்துரையாடலும் நடந்தது. அப்போது நடக்கவில்லை. நல்ல வேளை ஒருவழியாக இப்படத்தில் சேர்ந்துவிட்டோம்.
அனிருத் ஒரு மியூசிக்கல் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
எப்பவும் ஹீரோ - ஹீரோயின் இடையே தான் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கும். ஆனால் எனக்கும் பிரகாஷ் ராஜ் சாருக்கும் தான் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது. கில்லியில் தொடங்கி இப்போவரை அது தொடர்கிறது. அனிருத் ஒரு மியூசிக்கல் டிபார்ட்மெண்டல் ஸ்டோர். அங்க அன்லிமிடடா மியூசிக் கிடைக்கும். அவர் ஒருபோதும் நம்மை ஏமாற்ற மாட்டார். என்படங்களுக்கு மட்டுமல்ல எந்த நடிகரின் படங்களுக்கு போட்டாலும் ஹிட்டுதான்.
பலமான எதிரி தேவை
வாழ்க்கையில் ஜெயிக்க நல்ல நண்பர்கள் தேவையில்லை. பலமான எதிரி தேவை. பலமான எதிரி தான் உங்களை பலமாக்குவார்கள். நான் முதல் நாளில் இருந்தே விமர்சனங்களை சந்தித்து வருகிறேன். ஆனால் என்னுடன் என்னுடைய ரசிகர்கள் 33 ஆண்டுகளாக நிற்கிறார்கள். எனக்காக நின்றவர்களுக்காக இப்போ நான் நிற்கப்போகிறேன் என கூறினார்.
விஜய் இடத்தில் அடுத்து யார்?
இதையடுத்து விஜய்யிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது, சினிமாவில் நீங்க விட்டுட்டு போற இடத்தை யாராலையும் நிரப்ப முடியாதுனு நாங்க நினைக்கிறோம். நீங்க என்ன நினைக்குறீங்கனு தொகுப்பாளர்கள் கேட்க, அதற்கு பதிலளித்த விஜய், யார் யாரை எந்த இடத்துல வைக்கணும்னு மக்களுக்கு தெரியும் அவங்க பார்த்துப்பாங்க என கூறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

