- Home
- Cinema
- ரெக்கார்டு மேக்கராக மாறிய தளபதி... சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்..!
ரெக்கார்டு மேக்கராக மாறிய தளபதி... சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்..!
மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா, அதிகம் பேர் பங்கேற்ற நிகழ்வு என்கிற சாதனையை படைத்து மலேசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

Jana Nayagan Audio Launch Record
இந்திய சினிமாவில் அதிக ரசிகர்களைக் கொண்ட நட்சத்திரங்களில் ஒருவர் விஜய். தனது திரைப்பயணத்தின் உச்சத்தில் இருக்கும் போதே, சினிமாவில் இருந்து விலகுவதாக விஜய் அறிவித்துள்ளார். விஜய் கூறியபடி, அவரது திரைப்பயணத்தின் கடைசிப் படமான 'ஜனநாயகன்' வரும் பொங்கலுக்கு (ஜனவரி 9) திரையரங்குகளில் வெளியாகும். விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இசை வெளியீட்டு விழா, இம்முறை தமிழ்நாட்டில் அல்லாமல் வெளிநாட்டில் நடைபெற்றது. விஜய் ரசிகர்கள் அதிகம் உள்ள மலேசியாவில் 'ஜனநாயகன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் தேசிய மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளாமான ரசிகர்கள் கலந்துகொண்டனர்.
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா
75,000 முதல் 90,000 வரை பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மைதானம் முழுவதும் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. 'தளபதி திருவிழா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில், 30 பாடகர்கள் விஜய் படங்களின் ஹிட் பாடல்களைப் பாடினார்கள். எஸ்.பி.பி. சரண், விஜய் யேசுதாஸ், திப்பு, ஹரிசரண், ஹரிஷ் ராகவேந்திரா, க்ரிஷ், ஆண்ட்ரியா ஜெரமியா, ஸ்வேதா மோகன், சைந்தவி ஆகியோர் அந்தப் பட்டியலில் உள்ளனர். விஜய்யின் பெற்றோர், இயக்குநர்கள் அட்லீ, நெல்சன் திலீப்குமார், பூஜா ஹெக்டே ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நோ பாலிடிக்ஸ்
கோலாலம்பூரில் நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழா கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது. ஆடியோ வெளியீட்டு விழாவை அரசியல் நிகழ்ச்சியாக மாற்றக்கூடாது என்று மலேசியா காவல்துறை கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியது. அரசியல் பேச்சு, கோஷங்கள், பேனர்கள், சின்னங்கள், தவெக கொடி, டி-ஷர்ட், பேனர் போன்றவை மேடையிலோ அல்லது மைதானத்திலோ பயன்படுத்தக் கூடாது. மேலும், தவெக கொடியில் உள்ள சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களை ஒன்றாகக் காட்டும் எதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாதனை படைத்த ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்
தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல், உலகின் பல பகுதிகளில் இருந்தும் மலேசியாவிற்கு விஜய் ரசிகர்கள் படையெடுத்து வந்தனர். இதனால் மலேசியாவே தளபதியின் கோட்டையாக மாறியது. ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஒரு சாதனை புத்தகத்திலும் இடம்பெற்று உள்ளது. மலேசியாவில் அதிகம்பேர் பங்கேற்ற நிகழ்வாக ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச் மாறியுள்ளது. இந்த விழாவில் மொத்தம் 90 ஆயிரம் பேர் கலந்துகொண்டார்களாம். இதற்கு முன்னர் 81 ஆயிரம் பேர் பங்கேற்றதே சாதனையாக இருந்த நிலையில், அதை ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நிகழ்வு முறியடித்து மலேசியன் சாதனை புத்தகத்தில் (Malaysian Book of Records) இடம்பிடித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

