OTTக்கு வரும் வித் லவ் படம்... வாரிசுருட்டிய லைஃப்டைம் வசூல் இத்தனை கோடியா?
புதுமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் இளமை துள்ளலோடு ரிலீஸ் ஆன வித் லவ் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்படத்தின் லைஃப் டைம் வசூல் விவரத்தையும் பார்க்கலாம்.

With Love OTT Release Date
அபிஷன் ஜீவிந்த் என்று சொன்னதுமே அனைவருக்கும் அவர் இயக்கிய டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் தான் ஞாபகத்துக்கு வரும். அப்படத்தின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆகி இருந்தார் அபிஷன். டூரிஸ்ட் ஃபேமிலி படம் முடித்ததும் அவருக்கு சூர்யா, தனுஷ், நானி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை இயக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு, ஹீரோவாக அறிமுகமானார் அபிஷன். டூரிஸ்ட் ஃபேமிலி படத்திலேயே ஒரு சின்ன ரோலில் திறம்பட நடித்திருந்தார் அபிஷன் ஜீவிந்த், அவர் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கும் எதிர்பார்ப்பு இருந்தது.
வித் லவ் கதை
அபிஷன் நாயகனாக நடித்துள்ள படத்தின் பெயர் வித் லவ். இப்படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா தயாரித்திருந்தார். இப்படத்தில் அபிஷனுக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்திருந்தார். இப்படத்தை மதன் என்கிற அறிமுக இயக்குநர் இயக்கி இருந்தார். படத்தின் கதைப்படி நாயகன் காபி ஷாப்பில் பெண் பார்க்கப்போக.. வந்த பெண், ஸ்கூல்மேட். இருவரும் தங்கள் பள்ளிப்பருவக் காதல் குறித்துப் பகிர்ந்து கொள்கிறார்கள். இருவரும் தங்களின் பள்ளிப் பருவ காதலர்களை தேடிச் செல்கிறார்கள். அந்த பயணத்தின் போது என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
வித் லவ் வசூல்
வித் லவ் திரைப்படம் கடந்த பிப்ரவரி 6-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. அப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததால் திரையரங்குகளில் சக்கைப் போடு போட்டது. இதனால் இந்த ஆண்டு அதிக வசூல் அள்ளிய படங்கள் பட்டியலிலும் வித் லவ் இடம்பெற்றது. அப்படம் உலகளவில் ரூ.35 கோடி வசூலை வாரிக் குவித்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக பிப்ரவரி மாதத்தில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் அள்ளிய படம் வித் லவ் தான். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து இருந்தார். அவரின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருந்தது.
வித் லவ் ஓடிடி ரிலீஸ்
இந்த நிலையில் வித் லவ் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அப்படம் வருகிற மார்ச் 6ந் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றி உள்ளது. வித் லவ் திரைப்படம் தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மார்ச் 6ந் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகும் என நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் அறிவித்து உள்ளது. வித் லவ் திரைப்படம் திரையரங்குகளை போல் ஓடிடியிலும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

