இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:06 PM (IST) Nov 25
பணியில் அவரது பிரிவில் ஒரு கோயில் ஒரு குருத்வாரா இருந்தது. அங்கு ஒவ்வொரு வாரமும் மத அணிவகுப்புகள் நடத்தப்பட்டன. அவர் தனது வீரர்களுடன் கோயிலுக்குச் சென்றார். ஆனால் பூஜை, சடங்குகள், ஆரத்தியின் போது கோயிலின் உட்புறப் பகுதிக்குள் நுழைய மறுத்துவிட்டார்.
10:38 PM (IST) Nov 25
ஜெகன் மோகன் ரெட்டி, முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் எதிர்க்கட்சி அந்தஸ்து கோரி கெஞ்சுவது போன்ற ஒரு போலியான AI வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அமைச்சர் நாரா லோகேஷ் கண்டனம் தெரிவித்து, கண்ணியமான அரசியலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
10:25 PM (IST) Nov 25
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுமோசமாக விளையாடிய நிலையில், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரை விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
10:14 PM (IST) Nov 25
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முகலாயர்கள் இந்தியாவை இஸ்லாமியமயமாக்க முயன்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஔரங்கசீப்பின் கொடுமைகளுக்கு எதிராக நின்ற சீக்கிய குரு தேக் பகதூரின் தியாகத்தை அவர் நினைவு கூர்ந்தார்.
09:57 PM (IST) Nov 25
iPhone Fold ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் (iPhone Fold) 2026 செப்டம்பரில் 2,000- 2,500 டாலர் விலையில் வெளியாகலாம் என லீக் தகவல். 7.8 இன்ச் டிஸ்ப்ளே, 5000mAh+ பேட்டரி, 24MP UDC கேமரா என அசத்தும் அம்சங்கள்! முழு விவரம் உள்ளே.
09:55 PM (IST) Nov 25
2026 டி20 உலகக்கோப்பை அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா மேட்ச் ஒன்று கூட நடைபெறாதது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. சேப்பாக்கத்தில் மற்ற எந்தெந்த அணிகள் மோதுகின்றன? என்பது குறித்து பார்க்கலாம்.
09:29 PM (IST) Nov 25
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த சமாதான ஒப்பந்தத்திற்கு உக்ரைன் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளதாக சிபிஎஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, உக்ரைன் சில பகுதிகளை ரஷ்யாவிடம் விட்டுக்கொடுப்பது போன்ற நிபந்தனைகள் உள்ளன.
08:48 PM (IST) Nov 25
2026 T20 WC Schedule: 2026 டி20 உலகக்கோப்பை அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. முழு அட்டவணை, இந்தியா போட்டிகள் நடைபெறும் தேதி, இந்தியா, பாகிஸ்தான் மோதும் தேதி உள்ளிட்ட விரிவான விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
08:03 PM (IST) Nov 25
மத்திய பாஜக அரசு ரயில்வே நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு அநீதி இழைப்பதாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். புதிய ரயில் பாதைகளுக்கு வெறும் 1% நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
07:53 PM (IST) Nov 25
2026 T20 World Cup: 2026 டி20 உலகக்கோப்பை தொடரின் பிராண்ட் அம்பாசிடராக ஹிட்மேன் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசி அவருக்கு மிகப்பெரும் கெளரவம் அளித்துள்ளது
07:24 PM (IST) Nov 25
மலேசிய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், மூட்டைப் பூச்சிகள் மனித ரத்தத்தில் உள்ள DNA-வை 45 நாட்கள் வரை சேமித்து வைப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம், குற்றச் சம்பவங்கள் நடந்த இடங்களில் இருந்து மூட்டைப் பூச்சிகளை சேகரித்து, குற்றவாளிகளை அடையாளம் காணலாம்.
07:19 PM (IST) Nov 25
திமுக ஆட்சியில் எவ்வளவு முதலீடுகள் ஈர்ப்பு? எத்தனை லட்சம் பேருக்கு வேலை? கிடைத்துள்ளது என்பது குறித்து கோவை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் விளக்கமாக கூறியுள்ளார்.
06:35 PM (IST) Nov 25
அப்பாவி இந்து தமிழ் இளைஞர்கள் சினிமா மோகத்தில் ஜோசப் விஜய் பின்னால் செல்கிறார்கள். இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழகத்தை காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது
06:26 PM (IST) Nov 25
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு, தமிழர்களுக்கு எதிராக பேசுவதையே கொள்கையாக வைத்துள்ளதாக அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். ஆளுநர் கமலாலயத்தில் வேலைக்கு சேர வேண்டியவர் என்று கூறியுள்ளார்.
06:14 PM (IST) Nov 25
குளிர்காலத்தில் சருமத்தை அழகாகவும், பளபளப்பாக வைத்திருப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
05:55 PM (IST) Nov 25
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான (EWS) சான்றிதழ் பெற்ற மாணவர்கள், நீட் முதுநிலை தேர்வில் குறைந்த ரேங்க் பெற்றதால், கோடிக்கணக்கான ரூபாய் கட்டணம் செலுத்தி மருத்துவப் படிப்பில் சேருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
05:45 PM (IST) Nov 25
வங்கதேசப் பிரச்சினை இருந்தால், மத்தியப் பிரதேசத்திலும், உத்தரப் பிரதேசத்திலும் நீங்கள் ஏன் இதைச் செய்கிறீர்கள்? எனக்கு பாஜகவைப் பற்றி பயமில்லை. நான் இங்கே இருக்கும் வரை, யாரையும் திருப்பி அனுப்ப மாட்டார்கள்.
05:41 PM (IST) Nov 25
குழந்தைகளுக்கு எந்த வயதிலிருந்து நெய் கொடுக்க ஆரம்பிக்கலாம்? எவ்வளவு கொடுக்க வேண்டும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
05:22 PM (IST) Nov 25
ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஸ்மிருதிக்கு முன்பே திருமணத்தை ஒத்திவைக்க வேண்டும் என முதலில் சொன்னதே பலாஷ் முச்சல் தான் என்று அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
05:13 PM (IST) Nov 25
குளிர்காலத்தில் முடி ஆரோக்கியம் முதல் மூட்டு வலியை குறைப்பது வரை எந்த விதையை சாப்பிடு வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.
04:57 PM (IST) Nov 25
ஏழ்மையை ஒழிக்க வேண்டும், ஊழலைத் தடுக்க வேண்டும் என சமூக நீதியை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்கிற முடிவில் உள்ளனர்.
04:41 PM (IST) Nov 25
யமஹா MT-15, அதன் ஆக்ரோஷமான ஸ்டைல் மற்றும் சக்திவாய்ந்த 155cc VVA இன்ஜின் மூலம் நேக்கட் ஸ்போர்ட்ஸ் பைக் பிரிவில் தனித்து நிற்கிறது. இது ஸ்டைல் மற்றும் செயல்திறனை விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
04:30 PM (IST) Nov 25
கரூர் சம்பவம் தொடர்பாக புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனாவிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தினார்கள். அவர்கள் இருவரிடமும் பல்வேறு கிடுக்குப்பிடி கேள்விகளை கேட்டனர்.
04:29 PM (IST) Nov 25
Oppo தனது Reno 15 தொடரில் Reno 15C என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்த உள்ளது. 50MP டிரிபிள் கேமரா மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களுடன் குறைந்த விலையில் அதிக அம்சங்களை எதிர்பார்க்கும் பயனர்களைக் குறிவைக்கிறது.
04:25 PM (IST) Nov 25
உடல் எடையை வேகமாக குறைக்க புதினா இலை எவ்வாறு உதவுகிறது? அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டுமென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
04:22 PM (IST) Nov 25
தமிழகம் முழுவதும் 22 RTO சோதனைச் சாவடிகளில் ஊழலைக் கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் 110 ANPR கேமராக்கள் நிறுவப்படவுள்ளன. இவை வாகனங்களைக் கண்காணித்து, போக்குவரத்து விதிமீறல்களுக்குத் தானாகவே அபராதம் விதிக்கும்.
04:15 PM (IST) Nov 25
Nov 26 Thulam Rasi Palan : நவம்பர் 26, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:05 PM (IST) Nov 25
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திமுகவினர் ஒட்டிய போஸ்டர் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினை 'நாளைய முதல்வரின் தாய்' என்று குறிப்பிடும் வாசகம் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது.
04:00 PM (IST) Nov 25
நடிகை கீர்த்தி சுரேஷ், பிக் பாஸ் வீட்டுக்கு சென்று அங்குள்ள போட்டியாளர்களுடன் ஜாலியாக பொழுதை கழித்திருக்கிறார். அவர் எதற்காக சென்றார் என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
03:36 PM (IST) Nov 25
IND vs SA 2nd Test: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 549 ரன்கள் சேஸ் செய்ய வேண்டும். 2வது இன்னிங்சிலும் இந்திய அணி 1 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.
03:33 PM (IST) Nov 25
2008 மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்தியர்கள் போல் பேச இந்தி கற்றுக்கொடுத்தவர் சையது சபிபுதீன் அன்சாரி என்கிற அபு ஜுண்டால். இவர் மீதான வழக்கு விசாரணை தற்போது மும்பை சிறையில் நடைபெற்று வருகிறது.
03:16 PM (IST) Nov 25
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இரண்டு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் வலுப்பெற்று வருகின்றன. இதன் காரணமாக, இன்று கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
02:58 PM (IST) Nov 25
ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை ஓர்மேக்ஸ் மீடியா வெளியிட்டுள்ளது. இதில் கோலிவுட் திரைப்படமான டியூட் இடம்பெற்று உள்ளது.
02:48 PM (IST) Nov 25
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் 17வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தேசிய பாதுகாப்புப் படை (NSG) கேட்வே ஆஃப் இந்தியாவில் ஒரு பிரம்மாண்டமான அஞ்சலி நிகழ்வை நடத்துகிறது. இதல் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்கின்றனர்.
02:42 PM (IST) Nov 25
இந்தத் தாக்குதலில் தொடர்புடைய பல மர்மங்களின் விசாரணை 17 ஆண்டுகளான பிறகே தீர்க்க முடிந்தது. ஆனாலும், இன்னும் மர்மம் விலகாத பல கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கவில்லை. அதில், இரண்டு மிக முக்கியமானவை. மும்பை மக்களின் தீர்க்கப்படாத சந்தேகம்.
02:37 PM (IST) Nov 25
மழை, குளிர் காலத்தில் வீட்டை கதகதப்பாக வைத்திருப்பது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
02:35 PM (IST) Nov 25
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் தென்னாப்பிரிகா அணி 530 ரன்களை கடந்தும் பேட்டிங் செய்து வருவது இந்திய அணிக்கு சவாலாக அமைந்துள்ளது.
02:34 PM (IST) Nov 25
மருத்துவ காப்பீடு எடுக்கும் போது, குறைந்த பிரீமியத்தை மட்டும் பார்க்காமல், பாலிசியின் கவரேஜ், இணை-கட்டணம், க்ளைம் செட்டில்மென்ட் விகிதம் ஆகியவற்றை நன்கு சரிபார்க்க வேண்டும். ரொக்கமில்லா சிகிச்சை வசதி உள்ளதா என்பதை பார்ப்பது அவசியம்.
02:30 PM (IST) Nov 25
தமிழக பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
02:13 PM (IST) Nov 25
அயோத்தி ராமர் கோயிலில் இன்று தர்மக் கொடி ஏற்றும் விழா நிறைவடைந்தது. பிரதமர் மோடி கோயில் கோபுரத்தில் தர்மக் கொடியை ஏற்றினார். ராமர் கோயில் கட்டுமானம் நிறைவடைந்ததை இந்தக் கொடி குறிக்கிறது.