- Home
- Sports
- Sports Cricket
- 2026 டி20 உலகக்கோப்பையில் 'ஹிட்மேன்' ரோகித் சர்மா! ஐசிசி அளித்த கெளரவம்! சூப்பர் அறிவிப்பு!
2026 டி20 உலகக்கோப்பையில் 'ஹிட்மேன்' ரோகித் சர்மா! ஐசிசி அளித்த கெளரவம்! சூப்பர் அறிவிப்பு!
2026 T20 World Cup: 2026 டி20 உலகக்கோப்பை தொடரின் விளம்பர தூதுவராக ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசி அவருக்கு மிகப்பெரும் கெளரவம் அளித்துள்ளது

2026 டி20 உலகக்கோப்பை
2026 டி20 உலகக்கோப்பையை இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இந்த நிலையில், 2026 டி20 உலகக்கோப்பை அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து,
ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா, நேபாளம், இத்தாலி, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 20 அணிகள் 2026 டி20 உலகக்கோப்பையில் களமிறங்க உள்ளன.
இந்தியா, பாகிஸ்தான் மேட்ச் எப்போது?
இந்தப் உலகக்கோப்பை போட்டி பிப்ரவரி 7, 2026 அன்று தொடங்கும். இறுதிப்போட்டி டமார்ச் 8 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 15ம் தேதி கொழும்பில் உள்ள பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 டி20 உலகக் கோப்பையின் பிராண்ட் அம்பாசிடர் ரோகித் சர்மா
இந்த நிலையில், டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஹிட்மேன் ரோகித் சர்மாவை 2026 டி20 உலகக் கோப்பையின் விளம்பர தூதுவராக ஐசிசி நியமனம் செய்துள்ளது.
ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி கடந்த 2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்று அசத்திய நிலையில், அவருக்கு இந்த கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறாத நிலையில், ஒரு வீரர் தூதுவராக நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
ரோகித் சர்மா பெருமிதம்
இது குறித்து பெருமிதம் தெரிவித்த ரோகித் சர்மா, ''உலகின் பெரிய கிரிக்கெட் இந்த தூதராக இருப்பது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கெளரவம். விளையாடிக் கொண்டே யாரும் தூதராக இல்லை என்று என்னிடம் கூறப்பட்டது. வேறு ஒரு அணியினருடன், கடந்த ஆண்டைப் போல நாங்களும் மீண்டும் அதே மாயாஜாலத்தை உருவாக்குவோம் என்று நம்புகிறேன்.
இந்த உலகக் கோப்பையை வெல்வது என்பது ஒரு பெரிய பணி. நான் இந்தத் தொடரில் 18 ஆண்டுகள் விளையாடியுள்ளேன். முதல் கோப்பையை வென்ற பிறகு, ஒரு வறட்சி ஏற்பட்டது. பின்பு அதை நாங்கள் பூர்த்தி செய்தோம்'' என்றார்.

