- Home
- Sports
- Sports Cricket
- SA ஓடிஐ தொடர்.. இந்திய அணி அறிவிப்பு.. ரோகித் சர்மா ரசிகர்களுக்கு ஷாக்! சிஎஸ்கே கேப்டனுக்கு இடம்!
SA ஓடிஐ தொடர்.. இந்திய அணி அறிவிப்பு.. ரோகித் சர்மா ரசிகர்களுக்கு ஷாக்! சிஎஸ்கே கேப்டனுக்கு இடம்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஓடிஐ தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஓடிஐ தொடர்
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இரு அணிகளும் மோதுகின்றன. ஓடிஐ தொடர் நவம்பர் 30 முதல் டிசம்பர் 06 வரை ராஞ்சி, ராய்ப்பூர் மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெறும். டி20 போட்டிகள் டிசம்பர் 9 முதல் 19 வரை நடைபெற உள்ளது.
கே.எல்.ராகுல் கேப்டன்
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஓடிஐ தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை கே.எல். ராகுல் வழிநடத்துவார்.
கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக விலகியுள்ளதால் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகி வந்த நிலையில், ராகுலை கேப்டனாக்கி அவரது ரசிகர்களுக்கு பிசிசிஐ அதிர்ச்சி அளித்துள்ளது. ரிஷப் பண்ட் துணை கேப்டனாக செயல்படுவார்.
ருத்ராஜுக்கு இடம், சஞ்சு சாம்சன் நீக்கம்
தொடக்க ஆட்டக்காரராக சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்த துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக திலக் வர்மா அணியில் இடம்பிடித்துள்ளார். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அணியில் தங்கள் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டனர். சிஎஸ்கேவில் இணைந்த இந்திய வீரர் சஞ்சு சாம்சன் ஓடிஐ அணியில் சேர்க்கப்படவில்லை. துருவ் ஜுரெலுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
ஹர்திக் பாண்ட்யா நீக்கம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடாத ரவீந்திர ஜடேஜா அணிக்குத் திரும்பியுள்ளார், அக்சர் படேல் நீக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்படவில்லை.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி: கே.எல்.ராகுல் (கேப்டன்), ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, கே.எல். ராகுல், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் மற்றும் துருவ் ஜுரெல்.

