- Home
- Sports
- Sports Cricket
- ODI Rank: 21 நாட்களில் முதலிடம் இழந்த ரோகித் சர்மா! 46 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து வீரர் நம்பர் 1
ODI Rank: 21 நாட்களில் முதலிடம் இழந்த ரோகித் சர்மா! 46 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து வீரர் நம்பர் 1
ஐசிசி ஓடிஐ தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ரோகித் சர்மா 21 நாட்களில் 2வது இடத்துக்கு சென்றுள்ளார். நியூசிலாந்து வீரர் டேரில் மிட்ச்செல் 46 ஆண்டுகளுக்கு பிறகு நம்பர் 1 சென்று சாதனை படைத்துள்ளார்.

21 நாட்களில் முதலிடத்தை பறிகொடுத்த ரோகித் சர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, கடந்த மாதம் அக்டோபர் 29ம் தேதி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம் பிடித்து வரலாறு படைத்தார். ஆனால் அவரது மகிழ்ச்சி 21 நாட்களுக்கு மேல் நீடிக்கவில்லை. இப்போது ஐசிஐ வெளியிட்ட ஓடிஐ தரவரிசையில் ரோகித் சர்மா 2வது இடத்துக்கு சென்றுள்ளார்.
டேரில் மிட்ச்செல் நம்பர் 1
நியூசிலாந்து வீரர் டேரில் மிட்ச்செல் 782 புள்ளிகள் பெற்று ஓடிஐ ஓடிஐ ரேங்கில் முதலிடம் பிடித்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றிலேயே அந்த நாட்டின் வீரர் ஐசிசி ரேங்கில் முதலிடம் பிடிப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 1979ஆம் ஆண்டில் கிளென் டர்னர் மட்டுமே இந்த சாதனையை படைத்திருந்தார். இப்போது 46 ஆண்டுகளுக்கு பிறகு டேரில் மிட்ச்செல் சாதனை படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவர் அடித்த சதம் உட்பட அசத்தலான ஆட்டத்தால் டேரில் மிட்ச்செல் 782 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு சென்றுள்ளார். ரோகித் சர்மா 781 புள்ளிகளை பெற்றுள்ள நிலையில், மிட்ச்செல் இவரை விட ஒரு புள்ளி தான் கூடுதலாக பெற்றுள்ளார். இந்தியா நவம்பர் 30ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரில் விளையாடுகிறது.
ஹிட்மேனுக்கு மீண்டும் வாய்ப்பு
இந்த தொடரில் ஓரளவு சிறப்பாக விளையாடினாலே ரோகித் சர்மா மீண்டும் நம்பர் இடத்தை பிடிக்க முடியும். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி இரண்டு ஓடிஐயில் மிட்ச்செல் காயம் காரணமாக விளையாடாததால் அவரின் புள்ளிகள் குறைய வாய்ப்பு உள்ளது.
இதனால் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஓடிஐ தரவரிசையில் ரோகித் சர்மா தவிர, இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் நான்காம் இடத்திலும், முன்னாள் கேப்டன் விராட் கோலி ஐந்தாம் இடத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் சத்ரான் 764 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறார்.
பாபர் அசாம் முன்னேற்றம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் (722 புள்ளிகள் ), அயர்லாந்தின் ஹாரி டெக்டர் (708) மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் (700) ஆகியோர் முறையே ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது இடங்களில் உள்ளனர். இலங்கையின் சரித் அசலங்கா மூன்று இடங்கள் சரிந்து 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாய் ஹோப் 689 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளார்.

