- Home
- இந்தியா
- 26/11: பாகிஸ்தான் தொடர்புகளை பாதுகாக்கும் சஜித் மிர்- தாவூத்: 17 ஆண்டுகளுக்குப் பிறகும் விலகாத மர்மம்..!
26/11: பாகிஸ்தான் தொடர்புகளை பாதுகாக்கும் சஜித் மிர்- தாவூத்: 17 ஆண்டுகளுக்குப் பிறகும் விலகாத மர்மம்..!
இந்தத் தாக்குதலில் தொடர்புடைய பல மர்மங்களின் விசாரணை 17 ஆண்டுகளான பிறகே தீர்க்க முடிந்தது. ஆனாலும், இன்னும் மர்மம் விலகாத பல கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கவில்லை. அதில், இரண்டு மிக முக்கியமானவை. மும்பை மக்களின் தீர்க்கப்படாத சந்தேகம்.

160 க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற கொடூரமான மும்பை 26/11 தாக்குதலுக்கு 17 ஆண்டுகள் ஆகின்றன. இது வரலாற்றில் நம் நாடு கண்ட மிகவும் மோசமான தாக்குதல்களில் ஒன்று. லஷ்கர்-இ-தொய்பாவின் பத்து பயங்கரவாதிகள் பேரழிவையும், குழப்பத்தையும், நடுக்கத்தையும் ஏற்படுத்தி கிட்டத்தட்ட 48 மணி நேரங்களாக தூங்காத நகரமான மும்பையை நிலைகுலையச் செய்தனர்.
இந்தத் தாக்குதலில் தொடர்புடைய பல மர்மங்களின் விசாரணை 17 ஆண்டுகளான பிறகே தீர்க்க முடிந்தது. ஆனாலும், இன்னும் மர்மம் விலகாத பல கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கவில்லை. அதில், இரண்டு மிக முக்கியமானவை. மும்பை மக்களின் தீர்க்கப்படாத சந்தேகம். கண்டுபிடிக்க முடியாமல் தொடரும் சஜித் மிரின் அடையாளம். சஜித் மீரின் உண்மையான அடையாளத்தை வெளிக்கொண்டு வருவது எப்போதும் விசாரணை அமைப்புகளுக்கு ஒரு சவாலாகவே இருந்து வருகிறது.
மும்பை தாக்குதலில் சஜித் மிர் மிக முக்கியமானவர். தாக்குதல்களுக்கு முன்பு, அவர் முதலில் இந்தியாவுக்கு ஒரு கிரிக்கெட் ரசிகராக வந்திருந்தார். அந்த வருகையின் போதுதான் தாக்கப்பட வேண்டிய இலக்குகளை அவர் நோட்டமிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
தாஜ்மஹால் ஹோட்டல், ஓபராய், ட்ரைடென்ட், சத்ரபதி சிவாஜி விமான நிலையங்கள் அனைத்தும் எல்லோருக்கும் நன்றாக தெரிந்த அடையாளங்கள். ஆனாலும், பயங்கரவாதிகள் இப்போது சபாத் ஹவுஸ் என்று கூறப்படும் அதிகம் அறியப்படாத நாரிமன் ஹவுஸை அடையாளம் கண்டிருப்பது புலனாய்வாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. அந்த பகுதியில் உள்ள பலருக்கு இதுபோன்ற இடம் பற்றியே தெரியாது. மும்பை நகரத்தை நன்றாக அறிந்த ஒருவரால் இந்த இலக்கு அடையாளம் காணப்பட்டிருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் கருதினர்.
தாக்குதலில் தாவூத் இப்ராஹிமுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கேள்வியை இது எழுப்புகிறது. அவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். அவரது நடவடிக்கை நகரம் முழுவதும் பரவலாக இருந்தன. தாக்குதல் நடத்தும் இடங்களை குறி வைப்பதற்கு முன்பு மிர் தாவூத், அவரது ஆட்களுடன் ஆலோசனை நடத்தியதில் எந்த சந்தேகமும் இல்லை என்று ஒரு உளவுத்துறை அதிகாரி கூறியுள்ளார். 1993 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளின் போது இலக்குகளை அடையாளம் கண்டவர்கள் தாவூத், டைகர் மேமன் தான், எனவே, மும்பை 26/11 தாக்குதலுக்கு, அவரது ஆலோசனை கோட்கப்பட்டு இருக்கலாம்.
தாவூத்துடன் ஆலோசனை நடத்திய பிறகு, சஜித் மிர் ஒரு கிரிக்கெட் ரசிகராக இந்தியாவுக்கு வந்தார். அவரது வருகையின் போது, அவர் இந்த இடங்கள் ஒவ்வொன்றையும் பார்வையிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து டேவிட் ஹெட்லியுடன் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்தியுள்ளார்.தான் குறிவைத்த இலக்குகள் குறித்து மிர் ஹெட்லிக்கு விளக்கியுள்ளார். பின்னர் இந்த இலக்குகள் அனைத்தையும் விரிவாக உளவு பார்த்து, அதன் வரைபடத்தை கொடுக்கும் பணியை ஹெட்லி மேற்கொண்டுள்ளார்.
பல கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், பாகிஸ்தான் தொடர்ந்து மிர் இருப்பதை மறுத்து வருகிறது. பின்னர் மிர் தங்கள் நாட்டில் ஒரு மதகுருவாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள முயன்றது. ஆனாலும், தாக்குதல் நடந்த நேரத்தில் மிர் ஒரு ஐஎஸ்ஐ ஏஜெண்டாக இருந்துள்ளார் என்பதை இந்தியா தகவல் சேகரித்து வருவதற்கான ஆதாரம் தெளிவாகக் காட்டுகிறது.
இந்திய அதிகாரிகள், மிர் ஆரம்பத்தில் பாகிஸ்தான் இராணுவத்தில் பணியாற்றியவர் என்றும், பின்னர் ஐஎஸ்ஐயில் சேர்ந்துள்ளார் என்றும் உறுதிப்படுத்துகின்றனர். அவரது பங்கு குறிப்பாக மும்பை 26/11 தாக்குதலுடன் தொடர்புடையது. தாக்குதல் பற்றிய அனைத்து விவரங்களையும் அவர் மேற்பார்வையிட்டுள்ளார். அதில் ஆட்சேர்ப்பு, திட்டமிடல், கருவிகள் மற்றும் பயிற்சிகள் உள்ளிட்ட அத்தனையும் அடங்கும்.
பத்து பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்க மேஜர் இக்பால், மேஜர் சமீர் அலி ஆகியோரை மிர் ஒன்றிணைத்துள்ளார். தாக்குதலில் பாகிஸ்தான் அமைப்பின் பங்கை அறிய மூன்று ஐஎஸ்ஐ அதிகாரிகளின் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பது மிக முக்கியமானது.
ஏனென்றால், அவர்கள் அந்த நேரத்தில் பணியாற்றிய அதிகாரிகள். இது தாக்குதலுக்கு மேலும் துணிச்சலை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் வழக்கமாக இதுபோன்ற தாக்குதல்களைச் செய்ய ஓய்வு பெற்ற அதிகாரிகளை நியமிக்கிறது. ஆனால், பணியில் இருக்கும் அதிகாரிகளை இணைப்பது இந்த சதியில் எவ்வளவு ஆழமானது என்பதையும் உணர வேண்டியிருக்கிறது.
ஹெட்லி, எஃபிஐ அமைப்புடனான பேரம் காரணமாக பாகிஸ்தான் அமைப்பின் பங்கு குறித்து மிகக் குறைவாகவே பேசியிருந்தாலும், இப்போது தவஹூர் ராணா மீது நிறைய சண்ந்தேகங்கள் உள்ளது. அவரிடம் விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. ராணா இந்த புதிரை முடித்து வைக்க உதவுவார் என்று தேசிய புலனாய்வு நிறுவனமான என்.ஐ.ஏ நம்புகிறது. ராணாவிடம் இருந்து, தாக்குதலில் அவரது பங்கு, ஹெட்லியுடனான அவரது உறவு குறித்து நிறைய எதிர்பார்க்கப்படுகிறது.
தான் ஒரு முன்னாள் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி என்று ஒப்புக்கொண்ட ராணா, அந்த அமைப்பின் பங்கு பற்றிய முழுமையான விவரங்களை வழங்க முடியும். மிக முக்கியமாக, மீரைச் சுற்றியுள்ள மர்மத்தை அவரால் ஒரு முறை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.
சஜித் மீர் மிகவும் ஆபத்தான நபர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். பாகிஸ்தான் மீண்டும் அவரது சேவைகளைப் பயன்படுத்த முடியாதபடி சஜித் மீர் தொடர்பான விரிவான ஆவணத்தைத் தயாரிக்க வேண்டும். சஜித் மீர் போன்ற திறமை வாய்ந்த ஒருவரைப் பயன்படுத்துவது இந்தியாவிற்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமைகிறது. ஏனென்றால்னில் அவர் கொண்டிருக்கும் திறமை மும்பை 26/11 தாக்குதலில் தெளிவாகத் தெரிந்தது.
