- Home
- இந்தியா
- பெண்கள் கணக்கில் ரூ.2500 பணம்.. மார்ச் முதல் வாரத்தில் சர்ப்ரைஸ்.. ரூ.20 ஆயிரம் கடனும் தராங்க
பெண்கள் கணக்கில் ரூ.2500 பணம்.. மார்ச் முதல் வாரத்தில் சர்ப்ரைஸ்.. ரூ.20 ஆயிரம் கடனும் தராங்க
பெண்களின் வங்கி கணக்கில் பெரிய தொகை வரப்போகிறது. மாதந்தோறும் வரும் ரூ.2,500 மட்டுமல்ல… இந்த முறை ரூ.20,000 வரை உத்தரவாதம் இல்லாத கடனும் வரவுள்ளது. இந்த திட்டம் பற்றி இங்கு முழுமையாக பார்க்கலாம்.

வங்கி கணக்கில் பணம்
ஹோலி பண்டிகையை முன்னிட்டு பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. பல லட்சம் பெண்கள் தங்களது வங்கி கணக்கில் நேரடி நிதி உதவியை பெற்றுள்ளனர். மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகையுடன் சேர்த்து, சிறு தொழில் தொடங்க உதவும் வட்டி இல்லாத கடனும் வழங்கப்பட உள்ளது.
பெண்களுக்கு பெரிய அதிர்ச்சி
பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் இந்த முயற்சி குடும்ப வாழ்விலும் உறுதியான மாற்றத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தன்னம்பிக்கையுடன் சிறு தொழில் தொடங்கும் பெண்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
மாதந்தோறும் ரூ.2,500
18 முதல் 50 வயதுக்குள் உள்ள தகுதியான பெண்கள் இந்த நிதி உதவியைப் பெறலாம். மாதந்தோறும் ரூ.2,500 நேரடியாக வங்கி கணக்கில் வரவு செய்யப்படும். அதே நேரத்தில், ரூ.20,000 வரை உத்தரவாதம் இல்லாத கடனையும் பெறலாம். இந்த கடனின் தவணை, மாதாந்திர நிதி உதவியிலிருந்து பிடித்தம் செய்யப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முந்தைய தவணை கிடைக்காத பெண்கள்
வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு மற்றும் e-KYC கட்டாயம் என்பதால், உடனடியாக நிறைவு செய்ய வேண்டும். கிராமப்பஞ்சாயத்து மட்டத்திலும் இதற்கான முகாம்கள் நடத்தப்படுகின்றன. முந்தைய தவணை கிடைக்காத பெண்களுக்கு இரு தவணைகளும் சேர்த்து ரூ.5,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி இல்லாதவர்கள் நீக்கம்
தகுதி இல்லாதவர்கள் பட்டியலில் சேர்ந்து இருந்தால், அவர்களை நீக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று சரிபார்க்கலாம். முழுப்பெயர், மாவட்டம், ஆதார் அல்லது மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து OTP மூலம் உறுதி செய்தால் நிலை தெரியும்.
மைய்யா சம்மான் யோஜனா
இந்த நலத்திட்டம் ஜார்கண்ட் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் முக்யமந்திரி மைய்யா சம்மான் யோஜனா (Maiya Samman Yojana) ஆகும். 2024 ஆம் ஆண்டு அறிமுகமான இந்த திட்டம், பெண்களின் பொருளாதார சுயநிறைவை அதிகரிக்க உருவாக்கப்பட்டது. பெண்களின் சமூக பங்குபற்றுதலையும் உயர்த்துவது இதன் முக்கிய நோக்கமாகும்.
பெண்களுக்கு சூப்பர் வாய்ப்பு
ஜார்கண்ட் மாநில அரசு மற்றும் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. வங்கி கணக்கு, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்கள் அவசியம். பெயர் பட்டியலில் இருந்தால், தொகை வரவு செய்யப்படாது mmmsy.jharkhand.gov.in இணையதளத்தில் சென்று சரிபார்ப்பது முக்கியம் ஆகும்.

