- Home
- Politics
- 2026-ல் கதாநாயகனாக தவெகவின் தேர்தல் வாக்குறுதி இருக்க வேண்டும்..! விஜய் போட்ட அசத்தல் உத்தரவு..!
2026-ல் கதாநாயகனாக தவெகவின் தேர்தல் வாக்குறுதி இருக்க வேண்டும்..! விஜய் போட்ட அசத்தல் உத்தரவு..!
ஏழ்மையை ஒழிக்க வேண்டும், ஊழலைத் தடுக்க வேண்டும் என சமூக நீதியை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்கிற முடிவில் உள்ளனர்.

தவெகவின் பவர்ஃபுல்லான தேர்தல் அறிக்கை தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலின் கதாநாயகனாக தவெகவின் தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும் என நிர்வாகிகளிடம் உத்தரவிட்டுள்ளாராம் விஜய்.
விஜய் தலைமையிலான தவெக 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறது. திமுக,பாஜகவைத் தவிர விஜயின் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என முடிவு செய்துள்ளனர். காஞ்சிபுரம் கூட்டத்துக்கு பிறகு விஜயிடம் வேகம் அதிகரித்துள்ளதாக சொல்கிறார்கள். குறிப்பாக கட்சியில் பெண் நிர்வாகிகள் இல்லை என்பதை விஜயின் அனுதாபிகள் சிலர் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். நிர்வாகிகள் நியமிக்கப்படாமல் உள்ள 18 மாவட்டங்களில் பெண் நிர்வாகிகளை நியமிக்கும் முடிவில் இருக்கிறார் விஜய். இதுவரை பதவி பெற்ற நிர்வாகிகளின் செயல்பாடுகள் பற்றிய ரிப்போர்ட்டை கேட்டிருக்கிறாராம் விஜய்.
அவர்களில் செயல்படாமல் பெயரளவுக்கு இருக்கிற நிர்வாகிகளை மாற்றிவிட்டு அந்தப்பொறுப்புகளுக்கு பெண் நிர்வாகிகளை நியமிக்கவும் முடிவு செய்து இருக்கிறார். மற்றொருபுறம் திமுகவைவிட தேர்தல் அறிக்கை சிறப்பாக இருக்கவேண்டும் என்று சொல்லி இருக்கிறார் விஜய். இந்த டீம் தயார் செய்து கொடுத்த தேர்தல் அறிக்கையை வைத்தே காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பில் விஜய் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிரந்தர வீடு, வீட்டுக்கு ஒரு இருசக்கர வாகனம் நிச்சயம். கார் எதிர்கால லட்சியம். ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிரந்தர வருமானம், தனியார் மருத்துவமனை மாதிரியான அரசு மருத்துவமனை, ஒவ்வொருத்தருக்கும் உறுதி செய்கிற சட்டம் என அந்த அறிக்கையில் இருப்பதையே விஜய் முன்னோட்டமாக பேசியிருக்கிறார் என்கிறார்கள்.
ஏழை, இளைஞர், பெண்கள், விவசாயிகள், உழைப்பாளர்களை மையகாகக் கொண்டு வாக்குறுதிகளை தயார் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஏழ்மையை ஒழிக்க வேண்டும், ஊழலைத் தடுக்க வேண்டும் என சமூக நீதியை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்கிற முடிவில் உள்ளனர். பெண்கள், பெண் குழந்தைகள், முதியோர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, சட்டம்-ஒழுங்கை கடுமையாக்குவது.
இளைஞர்கள், விவசாயிகள், உழைப்பாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், ஏழைகள் முதியோர் நலன். திருநங்கைகளுக்கு சிறப்பு உதவிகள். வீடு, இரு சக்கர வாகனம், அடிப்படைத் தேவைகள் போன்றவற்றை உறுதி செய்வது. ஏழை குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதன் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, குடிநீர், மின்சாரம், சாலைகள் போன்ற அடிப்படை வசதிகளை அனைவருக்கும் உருவாக்குவது.
கல்வி, சுகாதாரம், நீட் தேர்வை ரத்து செய்வது, கல்வியை இணைப்பட்ட பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது. சாதி கணக்கெடுப்பு நடத்துவது. ஊழல், வாரிசு அரசியலை ஒழிப்பது, கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்று விஜய் சொல்லியுள்ளார். மக்களுடன் இரு, மக்களுடன் திட்டமிடு, மக்களுக்காக வாழ்" என்ற முழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மேலும் பல வாக்குறுதிகளை வழங்க தவெக திட்டமிட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.
