- Home
- உடல்நலம்
- Pudina for Weight Loss : எடையை குறைக்கும் புதினா! இப்படி சாப்பிட்டால் சீக்கிரமே ரிசல்ட் கிடைக்கும்
Pudina for Weight Loss : எடையை குறைக்கும் புதினா! இப்படி சாப்பிட்டால் சீக்கிரமே ரிசல்ட் கிடைக்கும்
உடல் எடையை வேகமாக குறைக்க புதினா இலை எவ்வாறு உதவுகிறது? அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டுமென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Pudina for Weight Loss
உடல் பருமன் இன்றைய காலத்தில் பலரின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக மாறிவிட்டது. எடையை குறைக்க பலரும் பல விதமான டயட் உணவு முறைகள், மூலிகை பானங்கள் குடிக்கிறார்கள். நீங்களும் உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா? உடல் எடையை எப்படி வேகமாக குறைப்பது என்ற தேடல் உங்களுக்கு அதிகமாக இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு நிச்சயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Mint Leaves for Weight Loss
உடல் எடையை குறைக்க நீங்கள் உணவு கட்டுப்பாட்டை பின்பற்றினாலும், அது ஆரோக்கியமாக இருக்கிறதா? என்பதை அறிந்த பிறகு தான் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த வரிசையில் புதினா உடல் எடையை குறைக்க உதவுகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. இந்த பதிவில் உடல் எடையை வேகமாக குறைக்க புதினா இலை எவ்வாறு உதவுகிறது? அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டுமென்று தெரிந்துகொள்ளலாம்.
உடல் எடையை குறைக்க புதினா எவ்வாறு உதவுகிறது?
- புதினா செரிமானத்தை மேம்படுத்தி, உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.
- பசியை கட்டுப்படுத்தி அதிகப்படியான உணவு சாப்பிடுவதை தடுக்க இது உதவுகிறது என்று சொல்லப்படுகிறது.
- புதினா வளர்ச்சியை மாற்றத்தை அதிகரித்து, உடலில் இருக்கும் கொழுப்பை வேகமாக எரிக்க துரிதப்படுத்துகிறது.
- புதினா இலையில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாக உள்ளன எனவே இதை தினமும் உணவில் அல்லது பானமாக எடுத்துக் கொள்வதன் மூலம் கலோரிகளின் உட்கொள்ளலைக் குறைக்க உதவும்.
உடல் எடையை குறைக்க புதினா இலை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்?
1.புதினா பானம் :
முதலில் சிறிதளவு புதிய புதினா இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கழுவி வைத்த புதினா இலைகளை அதனுடன் சேர்த்து நன்கு கொதித்து வடிகட்டி பிறகு குடிக்கவும். இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வளர்ச்சிதை மாற்றம் அதிகரித்து உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.
2. பச்சையாக சாப்பிடலாம்:
புதிய புதினா இலைகளை கழுவி பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தால் செரிமானம் மேம்படுவது மட்டுமல்லாமல், வாய் துர்நாற்றமும் நீங்கும், எடையும் குறையும்.
3. புதினா டீ :
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். பிறகு 10 - 12 புதினா இலைகளை கழுவி அதனுடன் சேர்த்து லேசாக கொதிக்க வைத்து விட்டு பிறகு அடுப்பை அணைத்து விடவும். சில நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு வடிகட்டவும். சுவைக்கு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளுங்கள். விரும்பினால் எலுமிச்சை சாறு கூட சேர்க்கலாம்.
4. புதினா சட்னி :
இதற்கு புதினா இலைகளை நன்கு கழுவி மிக்ஸியில் ஜாரில் போட்டு அதனுடன் பூண்டு, இஞ்சி ,உப்பு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு அரைக்கவும். பிறகு கடுகு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். அவ்வளவுதான் புதினா சட்னி தயார்.

