- Home
- Lifestyle
- Jeera Water For Weight Loss : இப்படி 'சீரகத் தண்ணீர்' குடித்தால்தான் எடை குறையும்; சரியான முறை!
Jeera Water For Weight Loss : இப்படி 'சீரகத் தண்ணீர்' குடித்தால்தான் எடை குறையும்; சரியான முறை!
உடல் எடையை குறைக்க சீரகத் தண்ணீர் எவ்வாறு உதவுகிறது? அதை எப்படி குடிக்க வேண்டுமென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Jeera Water For Weight Loss
இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் ஒரு பொதுவான பிரச்சினை. இதைக் குறைக்க பலர் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இருந்தபோதிலும் சில சமயங்களில் உடல் எடை குறையவில்லை என்று பல புலம்புகிறார்கள். ஆனால் இனி இதுகுறித்து கவலை வேண்டாம். சீரகத் தண்ணீர் உங்களுக்கு உதவும். ஆம், சீரக தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் எடையை எளிதாக குறைத்து விடலாம். இந்த பதிவில் உடல் எடையை குறைக்க சீரகத் தண்ணீர் எவ்வாறு உதவுகிறது மற்றும் அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.
நச்சுக்களை நீக்கும், வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் :
சீரகத் தண்ணீர் உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டி நாள் முழுவதும் உடலில் இருக்கும் கொழுப்பை எரிக்க உதவுகிறது. இதன் காரணமாக உடல் எடையானது வேகமாக குறைய ஆரம்பிக்கும்.
செரிமானத்தை மேம்படுத்தும், பசியை கட்டுப்படுத்தும் :
சீரக தண்ணீர் செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது வாயு, அஜீரணம், வீக்கம் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. மேலும் உணவை எளிதில் ஜீரணிக்க உதவும். அதுபோல சீரகத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த உதவும். இதனால் அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்படும். எடை அதிகரிப்பதும் குறையும்.
வீக்கத்தை குறைக்கும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும் :
சீரக தண்ணீரானது உடலில் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்றி வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இதனால் எடை குறைய ஆரம்பிக்கும். அதுபோல இன்சுலின் திறனை மேம்படுத்தி உடலில் அதிகமாக கொழுப்பு சேருவதை தடுத்து, ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவும்.
எடையை குறைக்க சீரகத் தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும்?
ஒரு கப் தண்ணீரில் 1 ஸ்பூன் சீரகத்தை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்துவிட்டு மறுநாள் காலை 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறைய ஆரம்பிக்கும்.