- Home
- Lifestyle
- Winter Weight Loss Tips : குளிர்கால ஸ்பெஷல் எடை குறைப்பு டீ-க்கள்!! இதுல ஒன்னு குடித்தாலும் எடை வேகமாக குறையும்!
Winter Weight Loss Tips : குளிர்கால ஸ்பெஷல் எடை குறைப்பு டீ-க்கள்!! இதுல ஒன்னு குடித்தாலும் எடை வேகமாக குறையும்!
குளிர்காலத்தில் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் சில மூலிகை டீக்களை பற்றி இந்த பதிவை பார்க்கலாம்.

Winter Weight Loss Tips
குளிர்காலம் ஆரம்பமாகிவிட்டது. இந்த சீசனில் உடல் எடையை ஆரோக்கியத்துடன் வைத்திருப்பது மிகவும் அவசியம். ஆனால் குளிருக்கு இதமாக வடை, பஜ்ஜி, போண்டா போன்றவற்றை நம்மை அறியாமலேயே அதிகமாக சாப்பிடுகிறோம். இதன் விளைவாக உடல் எடை தான் அதிகரிக்கும். எனவே அதிகரித்த உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில மூலிகை டீக்களை தினமும் குடியுங்கள். அவை என்னென்ன என்று இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கிரின் டீ :
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் குளிர்காலத்திலும் தயக்கமின்றி கிரீன் டீ குடிக்கலாம். இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை வேகமாக கரைத்து, எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.
இஞ்சி டீ :
பொதுவாக மழை, குளிர்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் சளி, இருமல், மூக்கடைப்பு, தொண்டை பிடிப்பு, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் வரும். இவற்றை சரி செய்வதற்கு இஞ்சி டீ குடிக்கலாம். அதுமட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்கவும். இஞ்சி டீ உதவுகிறது இஞ்சியில் இருக்கும் ஜிஞ்சரால் உடலில் இருக்கும் கலோரிகளை குறைக்க உதவும்.
மிளகு டீ :
மிளகு டீயானது மழை, குளிர்காலத்தில் ஏற்படும் தொண்டை கரகரப்பு, சளி, இருமல் போன்றவற்றை சரி செய்வதற்கு உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் பினாலிக் மற்றும் பிளாவனாய்டுகள் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது. மிளகு டீ கொஞ்சம் காட்டமாக இருக்கும். எனவே, அதில் சிறிதளவு நாட்டு சர்க்கரை அல்லது தேன் கலந்து குடிக்கலாம்.
சுக்கு மல்லி காபி :
மழை, குளிர் காலங்களில் ஏற்படும் சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு சுக்கு மல்லி காபி நல்லது. இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை வேகமாக குறைக்க உதவும்.