- Home
- Lifestyle
- Ghee for Babies : குழந்தைக்கு எப்ப நெய் கொடுத்தா நல்லது? பெற்றோர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு!
Ghee for Babies : குழந்தைக்கு எப்ப நெய் கொடுத்தா நல்லது? பெற்றோர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு!
குழந்தைகளுக்கு எந்த வயதிலிருந்து நெய் கொடுக்க ஆரம்பிக்கலாம்? எவ்வளவு கொடுக்க வேண்டும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

Ghee for Babies
பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் சரியான உணவுகளை கொடுக்கிறார்கள். அதிலும் சிலர் தங்கள் குழந்தை ஆரோக்கியமாக வளர அவர்கள் சாப்பிடும் உணவில் நெய் சேர்க்கிறார்கள். ஆனால் உண்மையில், நெய் குழந்தைகளுக்கு நல்லதா? எந்த வயதிலிருந்து குழந்தைகளுக்கு நெய் கொடுக்க ஆரம்பிக்கலாம்? அதுவும் எவ்வளவு கொடுக்க வேண்டும்? இதுகுறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆறு மாத வயதிலிருந்து...
நிபுணர்களின்படி, குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு நெய் கொடுக்கலாம். நேரடியாகக் கொடுக்காமல், அவர்களின் உணவில் கலந்து கொடுக்க வேண்டும். இதை அளவோடு கொடுப்பது மிகவும் முக்கியம்.
எவ்வளவு நெய் கொடுக்க வேண்டும்?
ஆரம்பத்தில் கால் முதல் அரை டீஸ்பூன் நெய் கொடுக்கலாம். 9-12 மாதக் குழந்தைகளுக்கு 1 டீஸ்பூன், 1-2 வயது குழந்தைகளுக்கு 1-2 டீஸ்பூன் வரை உணவில் கலந்து கொடுக்கலாம்.
நெய்யால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள்...
நெய் குழந்தைகளுக்கு ஆற்றலை அளிக்கிறது; ஆரோக்கியமான எடை அதிகரிப்புக்கு உதவுகிறது. இதில் உள்ள ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மூளை வளர்ச்சிக்கும், நினைவாற்றலுக்கும் அவசியமானவை.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

