- Home
- Lifestyle
- Parenting Tips : குழந்தைக்கு காய்ச்சல் வந்தா இந்த உணவுகளை கொடுக்காதீங்க! கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய பதிவு!
Parenting Tips : குழந்தைக்கு காய்ச்சல் வந்தா இந்த உணவுகளை கொடுக்காதீங்க! கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய பதிவு!
குழந்தைகளுக்கு காய்ச்சல் இருக்கும்போது என்ன மாதிரியான உணவுகளை கொடுக்கலாம் கொடுக்கக் கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Foods For Children With Fever
பொதுவாக குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் சரியாக சாப்பிட மாட்டார்கள். இதனால் அவர்களின் உடலில் இருக்கும் ஆற்றலானது இழக்கப்பட்டு, அவர்கள் குணமாவது தாமதமாகப்படும். இந்த சமயத்தில் பெற்றோர்களும் குழந்தைக்கு என்ன மாதிரியான உணவை உணவுகளை கொடுத்தால் சாப்பிடுவார்கள். மேலும் என்னென்ன உணவுகளை கொடுக்கக் கூடாது என்பதில் குழப்பமாக இருப்பார்கள்.
ஆனால், உண்மையில் காய்ச்சலின் போது குழந்தைகள் உடலானது நோயை எதிர்த்து போராடும். இதனால் அவர்களது உடலிலிருந்து ஆற்றல், நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறையும். எனவே, எளிதில் ஜீரணமாகும் மற்றும் உடலை நீரேற்றமாக வைக்கும் உணவுகளைக் கொடுக்க வேண்டும். பசி குறைவாக இருந்தாலும், கூட சிறிய அளவில் ஆரோக்கியமான உணவை கொடுங்கள்.
நீரேற்றம் அவசியம்
காய்ச்சலின் போது வியர்வை மூலம் உடல் அதிக நீரை இழக்கிறது. இதை ஈடுசெய்ய தண்ணீர், ORS, இளநீர், ராகி கஞ்சி போன்றவற்றை கொடுப்பது நல்லது. ஒரே நேரத்தில் அதிகம் கொடுத்தால் வாந்தி வரலாம் என்பதால், கொஞ்சமாக அடிக்கடி கொடுங்கள்.
எளிதில் ஜீரணமாகும் உணவுகள்
காய்கறி சூப், பருப்பு ரசம், கிச்சடி, தோசை, இட்லி, வாழைப்பழம் போன்ற எளிதில் ஜீரணமாகும் உணவுகளைக் கொடுக்கலாம். புரதச்சத்து ஆற்றலை அளித்து, நோய்த்தொற்றை எதிர்த்துப் போராட உதவும். பாசிப்பருப்பு, உளுந்து போன்றவற்றில் செய்த உணவுகள் சிறந்தவை.
எந்த மாதிரியான உணவுகளை கொடுக்கக் கூடாது?
வறுத்த உணவுகள், எண்ணெய் அதிகம் உள்ள பஜ்ஜி, பக்கோடா, சிப்ஸ் போன்றவற்றைத் தவிர்க்கவும். இவை ஜீரணிக்க கடினமாக இருந்து, வயிற்று வலி, அஜீரணத்தை உண்டாக்கும். ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் தொண்டைப் புண்ணை அதிகப்படுத்தலாம். மசாலா உணவுகளும் வேண்டாம்.
இனிப்புப் பொருட்கள்
சாக்லேட், கேக், ஜூஸ் போன்ற அதிக சர்க்கரை உள்ள இனிப்புப் பொருட்களைக் குறைக்கவும். சர்க்கரை உடலில் அழற்சியை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும். பதப்படுத்தப்பட்ட நூடுல்ஸ், சூப் போன்றவை மலச்சிக்கலை ஏற்படுத்தலாம்.