- Home
- Tamil Nadu News
- சிபிஐ இடம் வசமாக சிக்க போகும் விஜய் கோஷ்டி..!10 மணி நேர கேள்வியால் ஆடிப்போன புஸ்ஸி, ஆதவ்
சிபிஐ இடம் வசமாக சிக்க போகும் விஜய் கோஷ்டி..!10 மணி நேர கேள்வியால் ஆடிப்போன புஸ்ஸி, ஆதவ்
கரூர் சம்பவம் தொடர்பாக புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனாவிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தினார்கள். அவர்கள் இருவரிடமும் பல்வேறு கிடுக்குப்பிடி கேள்விகளை கேட்டனர்.

சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. முதலில் சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள், அந்த பகுதியில் சிசிடிவி கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்தனர்.
புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் விசாரணை
மேலும் கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினர்கள், உறவினர்கள், காயமடைந்தவர்கள், அப்பகுதியில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் என பலரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில், கரூர் விவகாரம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக விசாரணை நடத்தினார்கள்.
10 மணி நேரம் அடுக்கடுக்கான கேள்விகள்
கரூர் சிபிஐ அலுவலகத்தில் சுமார் 10 மணி நேரம் இவர்களிடம் விசாரணை நடந்துள்ளது. அப்போது இருவரிடம் பல்வேறு கிடுக்குப்பிடி கேள்விகளை அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதாவது கரூர் சம்பவம் நடந்த அன்று விஜய் முன்கூட்டியே பேசத் திட்டமிட்டுருந்த நிலையில், நண்பகல் 12 மணிக்கு பேசுவார் என அறிவிக்கச் சொன்னது யார்?
அப்படியே நண்பகல் 12 மணிக்கு பேச வேண்டிய விஜய் பல மணி நேரம் தாமதமாக இரவு வர காரணம் என்ன? அதிக கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதற்காக விஜய் தாமதமாக வந்தாரா?
விஜய்யின் பயணத் திட்டத்தை திட்டமிட்டது யார்?
நாமக்கலில் இருந்து கரூருக்கு விஜய்யின் பயணத் திட்டத்தை திட்டமிட்டது யார்? கூட்டம் அதிகமாக கூடியதால் ஏற்கெனவே திட்டமிட்ட இடத்துக்கு பதிலாக வேறு இடத்தில் விஜய் பேசும்படி தவெக நிர்வாகிகளிடம் காவல்துறை அறிவுறுத்தியதா? அப்படி காவல்துறை அறிவுறுத்தியபோதிலும் கட்டுக்கடங்காத கூட்டத்துக்கு உள்ளே விஜய் பேருந்தை கொண்டு செல்ல உத்தரவிட்டது யார்?
ஆம்புலன்ஸ் வந்த பிறகும் பேசியது ஏன்?
விஜய் பேசிக் கொண்டிருந்த போதே ஆம்புலன்ஸ் குறித்தும், அப்போதைய உண்மை நிலவரம் விஜய்க்கு யாரும் எடுத்துச் சொல்லவில்லையா? கூட்டத்தில் பலர் மயங்கி விழுந்தபோதிலும் தண்ணீர் பாட்டில்களை தூக்கி எறிந்தபோதிலும் விஜய் தொடர்ந்து பேசியது ஏன்? கரூருக்கு எந்தெந்த மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் வந்திருந்தனர்?
ஏற்பாடுகளை செய்தவர்கள் யார்? யார்?
கரூரில் தவெக தொண்டர்களின் வருகைக்கான ஏற்பாடுகளை செய்தவர்கள் யார்? யார்? என்ற கேள்விகளை புஸ்ஸி ஆனந்திடமும், ஆதவ் அர்ஜூனாவிடமும் சிபிஐ அதிகாரிகள் கேள்வி எழுப்பினார்கள்.
இந்த அதிரடியாக கேள்விகளை சற்றும் எதிர்பார்க்காத இருவரும் ஏற்கெனவே செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய பதில்களையே சிபிஐயிடம் தெரிவித்துள்ளனர் என தகவல்கள் கூறுகின்றன.

