MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அதிமுகவில் இணைந்த தர்மர், கிருஷ்ணமூர்த்திக்கு முக்கிய பொறுப்பு.. யோசிக்காமல் தூக்கிக் கொடுத்த எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் இணைந்த தர்மர், கிருஷ்ணமூர்த்திக்கு முக்கிய பொறுப்பு.. யோசிக்காமல் தூக்கிக் கொடுத்த எடப்பாடி பழனிசாமி

AIADMK: முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களாக இருந்து அதிமுகவில் இணைந்த தர்மர், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 14 2026, 12:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஓபிஎஸ் இபிஎஸ் மோதல்
Image Credit : Google

ஓபிஎஸ் இபிஎஸ் மோதல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், வெல்லமண்டி நடராஜன், குன்னம் ராமசந்திரன், கு.ப. கிருஷ்ணன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, தர்மர், மனோஜ் பாண்டியன், ஐயப்பன் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டதை அடுத்து தனி அணியாக செயல்பட்டு வந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திமுக, தவெகவில் ஐக்கியம்
Image Credit : Asianet News

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திமுக, தவெகவில் ஐக்கியம்

இந்நிலையில் ஓபிஎஸ் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ஜேசிடி பிரபாகர், கு.ப. கிருஷ்ணன் ஆகியோர் தவெகவில் இணைந்தனர். பின்னர் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அதேபோல் குன்னம் ராமசந்திரன் திமுக இணைவதாக கூறப்பட்டு வந்த நிலையில் அரசியலில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

34
தர்மர் அதிமுகவில் ஐக்கியம்
Image Credit : Asianet News

தர்மர் அதிமுகவில் ஐக்கியம்

அதேபோல் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளரும் ஓபிஎஸ் தயவால் மாநிலங்களவை உறுப்பினராக்கிய தர்மர், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களாக இருந்து அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்றுக்கொண்டு அதிமுகவில் இணைந்த தர்மர், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

44
எடப்பாடி பழனிசாமி
Image Credit : Asianet News

எடப்பாடி பழனிசாமி

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக தர்மர் மாநிலங்களவை உறுப்பினர் (இராமநாதபுரம் மாவட்டம்), கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ( சென்னை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Temple Mystery : சாமிக்கு செருப்பைக் காணிக்கையாகப் படைக்கும் பக்தர்கள்! செருப்புகளை அணிந்து இரவில் நடமாடும் தெய்வம்!
Recommended image2
Chennai Special Buses : சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள்! எந்த ஊருக்கு எங்கிருந்து பஸ்? முழு விவரம்!
Recommended image3
Scholarship: மாணவர்களுக்கு குட் நியூஸ்.! கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு.! யாரெல்லாம் தகுதி? விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?
Related Stories
Recommended image1
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு! வெங்காயம், தக்காளி விலை உயர்ந்ததா? குறைந்ததா? காய்கறிகளின் நிலவரம் என்ன?
Recommended image2
இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு.. குஷியில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved