MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • விஜய்க்கு 'செக்' வைக்கும் டெல்லி..? தவெக-வைச் சுற்றும் பாஜகவின் ரகசிய வலை..

விஜய்க்கு 'செக்' வைக்கும் டெல்லி..? தவெக-வைச் சுற்றும் பாஜகவின் ரகசிய வலை..

அரசியல் ரீதியான நெருக்கடிகள் ஒருபுறம் இருக்க, விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை, குறிப்பாக அவரது விவாகரத்து தொடர்பான விவகாரங்கள் பொதுவெளியில் கசிந்து வருவது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 Min read
Author : Thiraviya raj
Published : Mar 14 2026, 12:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பாஜகவின் வியூகம்
Image Credit : KVN Productions

பாஜகவின் வியூகம்

தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக உருவெடுத்துள்ளது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைச் சுற்றி பின்னப்படும் அரசியல் நகர்வுகள். சினிமா மற்றும் அரசியல் என இருமுனைகளிலும் அழுத்தங்களைச் சந்தித்து வரும் விஜய்யின் தற்போதைய நிலையை மையப்படுத்தி எழுந்துள்ள அரசியல் விவாதங்கள் அனலை கிளப்புகின்றன.

தவெக தலைவர் விஜய், தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியதில் இருந்தே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையப்போகிறார் என்ற பேச்சுக்கள் உலாவுகின்றன. ஆனால், விஜய் தரப்போ தனித்துப்போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில், விஜய்க்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் முன்னாள் பாஜக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல்குமார் மூலமாக விஜய்யின் அடுத்தகட்ட திட்டங்களை பாஜக மேலிடம் அறிந்து கொள்வதாகத் தகவல்கள் கசிகின்றன.

கூட்டணிக்கு விஜய்யை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிடுங்கள் என்று தவெகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களே நிர்மல்குமாரை வற்புறுத்துவதாகவும் சொல்லப்படுகிறது. ஒருபுறம் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், மறுபுறம் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் மத்திய அமைப்புகளின் நடவடிக்கைகள் இருப்பதாக தவெகவினர் சந்தேகிக்கின்றனர்.

24
சிபிஐ சம்மன் பின்னணி
Image Credit : X

சிபிஐ சம்மன் பின்னணி

விஜய்யின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் நேரங்களில் எல்லாம் சில தற்செயலான நிகழ்வுகள் நடப்பதாகக் கூறப்படுகிறது. உதாரணமாக வேட்பாளர் நேர்முகத் தேர்வுக்கான தேதியை விஜய் அறிவிக்கத் திட்டமிட்டிருந்த சூழலில், அவருக்கு சம்மன் அனுப்பப்படுவதாக கூரப்படுகிறது. 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கைக் குழு மறு ஆய்வுக் குழுவின் பார்வைக்குச் செல்லவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அதிகாரி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி அது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் விஜய்க்கு அழுத்தம் கொடுத்து, அவரைத் தங்கள் வழிக்குக் கொண்டு வருவதற்காகச் செய்யப்படும் திட்டமிட்ட நகர்வுகளோ என தவெக நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Related Articles

Related image1
சங்கீதாவை தூண்டிவிட்டதே ஸ்டாலின் தான்..! விஜய்க்கு முதல்வர் முதல்வர் பதவி..! அமித் ஷா ஆஃபர்..!
34
தனிப்பட்ட வாழ்க்கை மீதான தாக்குதல்கள்
Image Credit : Asianet News

தனிப்பட்ட வாழ்க்கை மீதான தாக்குதல்கள்

அரசியல் ரீதியான நெருக்கடிகள் ஒருபுறம் இருக்க, விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை, குறிப்பாக அவரது விவாகரத்து தொடர்பான விவகாரங்கள் பொதுவெளியில் கசிந்து வருவது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் திடுக்கிடும் தகவல் என்னவென்றால், விஜய்க்கு மிக நெருக்கமாக இருக்கும் ஒரு முக்கியத் தலைவரே இந்தத் தகவல்களைக் கசியவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த நபர், "விவாகரத்து வழக்கை உங்களுக்குச் சாதகமாக முடித்துத் தருகிறேன், யாரிடமும் கசியாமல் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறி விஜய்யின் நிதி ஆலோசகர்களிடம் மிகப்பெரிய தொகையை பேரம் பேசியதாகச் சொல்லப்படுகிறது.

அந்தத் தலைவரின் பேராசையைப் பார்த்த நிதி ஆலோசகர்கள், "நீங்க எதுவும் செய்ய வேண்டாம், நாங்களே பார்த்துக் கொள்கிறோம்" எனக் கூறிவிட்டார்களாம். இந்தத் தகவல் விஜய் வரை கூட கொண்டு செல்லப்படவில்லையாம். இதில் கடுப்பான அந்தத் தலைவர்தான், பழிவாங்கும் நோக்கில் விஜய்யின் தனிப்பட்ட தகவல்களைத் தொடர்ந்து கசியவிட்டு வருவதாகத் தெரிகிறது.

44
எப்படி சமாளிக்கப்போகிறார் விஜய்..?
Image Credit : Asianet News

எப்படி சமாளிக்கப்போகிறார் விஜய்..?

நிர்வாகிகளின் நெருக்கடி, தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அரசியல் வியூகங்கள் என விஜய் தற்போது ஒரு இக்கட்டான சூழலை எதிர்கொண்டு வருகிறார். சினிமாத் திரையில் பல வில்லன்களை வீழ்த்தும் விஜய், நிஜ வாழ்க்கையின் இந்தப் 'புள்ளிகளை' எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பதுதான் தற்போதைய தமிழக அரசியலின் மில்லியன் டாலர் கேள்வி.

About the Author

TR
Thiraviya raj
விஜய் (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
NDA கூட்டணிக்கு துண்டு போடும் தவெக..? அப்போ மாற்று சக்தினு சொன்னது..?
Recommended image2
தினமும் ஒரு நிர்பயா... சிதைக்கப்படும் பெண்கன்..! தமிழகத்திற்கு மகளிர் ஆணையத்தை அனுப்புங்கள்.! அதிமு அதிரடி மூவ்!
Recommended image3
ஈரான் போரில் சாம்பலாகும் 15 பில்லியன் டாலர்..! ரத்தத்தில் அரபு நாடுகள்.. லாபத்தில் அமெரிக்கா..! சவுதி, துபாய்க்கு நேர்ந்த சோகம்!
Related Stories
Recommended image1
சங்கீதாவை தூண்டிவிட்டதே ஸ்டாலின் தான்..! விஜய்க்கு முதல்வர் முதல்வர் பதவி..! அமித் ஷா ஆஃபர்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved