- Home
- Tamil Nadu News
- தவெகவுக்கு ஆதரவாக பேசிய திமுக எம்.எல்.ஏ..! உண்மையை போட்டுடைத்த விஜய்..! யார் அவர் தெரியுமா?
தவெகவுக்கு ஆதரவாக பேசிய திமுக எம்.எல்.ஏ..! உண்மையை போட்டுடைத்த விஜய்..! யார் அவர் தெரியுமா?
தவெகவுக்கு ஆதரவாக பேசிய திமுக எம்.எல்.ஏ பேசியதாக தவெக தலைவர் விஜய் இன்று உண்மையை போட்டுடைத்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

தற்குறிகள் என சொன்னதை விமர்சித்த விஜய்
விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்களை தற்குறிகள், அரசியல் தெரியாதவர்கள் என திமுக, நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். இன்று காஞ்சிபுரத்தில் ஆவேசமாக பேசிய விஜய், தவெகவினர் தற்குறிகள் அல்ல ஆச்சரியக் குறிகள் என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய அவர், ''நம்மை தற்குறிகள் என சொல்கிறனர். நமது தவெகவினரின் லட்சக்கணக்கான தொண்டர்கள், நண்பா, நண்பிகள், ஜென் சி கிட்ஸ் ஆகியோரை தற்குறிகள் என சொன்ன திமுக இப்போது வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளது.
தவெகவுக்கு ஆதரவாக பேசிய திமுக எம்.எல்.ஏ
இப்போது தவெகவினரை தற்குறிகள் என கூப்பிடாதீர்கள். அவர்கள் அப்படி கிடையாது. அவர்கள் சங்கிகளும் கிடையாது என ஒரு குரல் எழுந்துள்ளது. அது யாரென்னு பார்த்தால் அறிவுத் திருவிழா என்னும் அவதூறுத் திருவிழாவில் திமுக தலைமையே குழப்பும் வகையில், அவர்களின் அறிவுக்கண்ணை திறக்கும் வகையில் திமுக எம்.எல்.ஏ ஒருவர் இப்படி பேசியுள்ளார். அந்த எம்.எல்.ஏ நம்ம கொள்ளைத் தலைவர்களில் ஒருவரான அஞ்சலை அம்மாளின் சொந்தக்காரர்.
தவெகவின் தமிழகத்தின் ஆச்சரியக்குறி
தவெகவுக்கு நம்ம கட்சியில் இருந்தே ஒருவர் பேசி விட்டார் என திமுக தலைமைக்கு ஒரே குழப்பம். திமுகவில் இருந்து வந்த அந்த ஆதரவுக்குரல் இன்னும் பலமாக ஒவ்வொரு வீட்டிலும், அனைத்து இடங்களிலும் எதிரொலிக்கும்.
மக்கள் எல்லோரும் தற்குறிகள் என்றால், அதே மக்களிடம் இருந்து ஓட்டு வாங்கப் போகும் நாங்கள் தற்குறிகள் என்றால், அதே மக்களிடம் தானே நீங்கள் ஓட்டு வாங்கினீர்கள். நீங்கள் சொல்லும் தவெக என்னும் தற்குறிகள் தான் உங்கள் அரசியலையே கேள்விக்குறியாக்கப் போகிறது. இவர்கள் தமிழக அரசியல் ஆச்சரியக்குறி, தமிழக அரசியல் மாற்றத்தின் அறிகுறி'' என்று தெரிவித்தார்.
திமுக எம்.எல்.ஏ எழிலன்
விஜய் கூறியபடி தவெகவுக்கு ஆதரவாக பேசிய அந்த திமுக எம்.எல்.ஏ சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ எழிலன் ஆவார். ‘தி.மு.க 75 அறிவுத் திருவிழா' நிகழ்ச்சியில் பேசிய எழிலன், ''தற்குறிகள் தற்குறிகள் என்று ஒரு பிற்படுத்தப்பட ஒடுக்கப்பட்ட பட்டியலின இளைஞர்களை நாம் விமர்சனம் செய்து வருகிறோம்.
இது மிகவும் தவறானது ஆகும். நாம் அவர்களிடம் பேசவில்லை. பேசாமல் போனது நம்முடைய தவறு. அவர்கள் தற்குறிகள் கிடையாது. சங்கிகளும் கிடையாது. நாம் அவர்களிடம் உரையாடலை தொடங்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
யார் இந்த எழிலன்?
இதை வைத்து தான் திமுக எம்.எல்.ஏ தவெகவுக்கு ஆதரவாக பேசியதாக விஜய் கூறியுள்ளார். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக எம்.எல்.ஏ எழிலன் முன்னாள் திட்ட குழு உறுப்பினரும், கருணாநிதியின் நெருங்கிய 'வாக்கிங்' தொடருமான பேராசிரியர் நாகநாதன் மகன் ஆவார். மேலும் இவரது தாத்த வழி பாட்டி தான் நாட்டின் விடுதலைப் போராளியும், சமூக சேவகியுமான அஞ்சலை அம்மாள் என்பது குறிப்பிடத்தக்கது.

