காஞ்சிபுரத்தில் மக்களை சந்தித்து பேசி வரும் விஜய், ஒவ்வொருவருக்கும் வீடு, வண்டி, வேலை என்று வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்.
தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தமிழக வெற்றிக் கழக கட்சியை தொடங்கி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் தளபதி விஜய். கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து விஜய்க்கும், தவெக கட்சிக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவாகவும் அரசியல் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் தான் கரூர் சம்பவம் நடந்து 55 நாட்களுக்கு பிறகு விஜய் தற்போது காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இதில், எடுத்த உடனே அண்ணா ஆரம்பித்த கட்சியை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறார்கள். நமக்கு கொள்கை இல்லையா?
திமுக மக்களிடம் வாக்கு வாங்கி விட்டு மக்களை ஏமாற்றியதாக விஜய் குற்றம்சாட்டினார். தவெகவுக்கு என்ன கொள்கை உள்ளது? என்று கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின். தொடந்து உயிர் நாடி பாலாற்றில் அடித்த திமுக கொள்ளை ரூ 4730 கோடி என்று விஜய் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக பேசிய அவர், ''பாலாற்றில் அளவுக்கு அதிகமாக மணல் கொள்ளை நடக்கிறது. மணல் கொள்ளையால் ரூ.4730 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. இதை நான் சும்மா வாய்க்கு வந்தபடி சொல்லவில்லை. கையில் ஆதாரத்தை வைத்துக் கொண்டு சொல்கிறேன். 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட காஞ்சிபுரம் பேருந்து நிலையம் இன்னும் மாற்றப்படவில்லை'' என்று தெரிவித்தார்.
மேலும், அரசியல் வாக்குறுதி என்று நீட்டை எதிர்ப்போம் அப்படி இல்லை. ஒவ்வொருத்தருக்கும் நிரந்தரமாக ஒரு வீடு இருக்க வேண்டும். இரு சக்கர வாகனம் இருக்க வேண்டும். காரும் தான் லட்சியம். குறைந்தது டிகிரி முடித்திருக்க வேண்டும். நிரந்தரமான வேலை இருக்க வேண்டும். அரசு மருத்துவமனைக்கு மக்கள் எல்லோரும் பயமில்லாமல் செல்ல வேண்டும், கல்வியில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும். மக்களும், விவசாயமும் பாதிக்கபடாமல் இருக்க வேண்டும் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.
