மழை, குளிர் காலத்தில் வீட்டை கதகதப்பாக வைத்திருப்பது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக மழை, குளிர் காலத்தில் வானிலை ரொம்பவே குளிர்ச்சியாக இருக்கும். இதனால் வெளியில் மட்டுமல்ல, வீட்டிற்குள்ளேயும் எப்போதுமே குளிராக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், மழை, குளிர் காலத்தில் நீங்கள் உங்கள் வீட்டை கதகதப்பாக வைத்திருக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை மட்டும் பின்பற்றினால் போதும். அவை எதுவென்று இங்கு பார்க்கலாம்.

  1. கதவு, ஜன்னல்களில் அடர்த்தியான ஸ்கிரீன்கள் :

நீங்கள் உங்களது வீட்டில் கதவு, ஜன்னல்களுக்கு திரைச்சீலைகளை பயன்படுத்தினாலும் குளிர்காலத்திற்கு ஏற்ற வகையிலான அடர்த்தி அல்லது கனமான ஸ்கிரீன்களை போடவும். இதனால் வெளிப்புறத்தில் இருந்து வரும் குளிர்ந்த காற்று வீட்டிற்குள் வருவது தடுக்கப்படும். உங்கள் வீடும் கதகதப்பாக இருக்கும்.

2. தரை விரிப்புகள் :

மழை குளிர் காலத்தில் வீட்டின் தரையில் கால் வைக்க முடியாது. அந்த அளவுக்கு தரை சில்லுனு இருக்கும். ஜில் தரையில் அதிக நேரம் நின்றாலோ அல்லது நடந்தாலோ பலருக்கு கால் இழுக்கும், சளி ஏற்படும். இதை தவிர்க்க வீட்டின் தரையில் கனமான விரிப்புகளை விரிக்கவும். இதனால் கால்கள் குளிர்ச்சியில் இருந்து பாதுகாக்கப்படும்.

3. மெழுகுவர்த்தி ஏற்றவும் :

மழை, குளிர் காலத்தில் வீட்டை கதகதப்பாக வைக்க மெழுகுவர்த்தி ஏற்றலாம். அதுவும் வாசனை மிகுந்தே மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள். இது வீட்டிற்கு வெதுவெதுப்பை தருவது மட்டுமல்லாமல், நல்ல நறுமணமும் தரும்.

4. கதவு ஜன்னலை திற!

பொதுவாக மழை, குளிர் காலத்தில் வீட்டிற்குள் குளிர்ந்த காற்று வராமல் பெரும்பாலானோர் வீட்டின் கதவு, ஜன்னல்களை மூடியே வைப்பார்கள். ஆனால், சூரிய ஒளி படும் சமயத்தில் வீட்டின் கதவு ஜன்னல்களை திறந்து வைத்தால் வீட்டிற்குள் சூரிய ஒளி வரும். இதனால் வீடும் கதகதப்பாக இருக்கும்.

5. ரூம் ஹீட்டர் ;

பண வசதி உள்ளவர்கள் மழை, குளிர்காலத்தில் வீட்டை கதகதப்பாக வைக்க ரூம் ஹீட்டர் பயன்படுத்துவார்கள். ரூம் ஹீட்டர் உண்மையிலேயே அறையை வெப்பமாக வைத்துக் கொள்ளும்.

6. சூடான பானங்கள் :

மழை குளிர் காலத்தில் உடலை கத கதப்பாக வைக்க அடிக்கடி சூடான உணவுகள் மற்றும் பானங்களை குடியுங்கள்.

7. வீட்டை சுத்தம் செய்!

மழை, குளிர் காலத்தில் வீடு மற்றும் வீட்டின் சுற்றுப்புறத்தை சுத்தமாக வையுங்கள். ஏனெனில் குப்பையாக இருந்தால் அதில் இருக்கும் ஈரப்பதம் வீட்டிற்குள் குளிர்ச்சியை கொடுக்கும்.

மேலே குறிப்பிட்ட விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் மழை, குளிர்காலத்தில் வீடு கதகதப்பாக வைத்திருக்கலாம்.