குளிர்காலத்தில் நரம்புகளை பலப்படுத்த என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும்? எந்த மாதிரியான உணவுகள் நரம்புகளை பலவீனப்படுத்தும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நரம்பு வலி, நரம்பு இழுப்பு போன்ற நரம்பு பிரச்சனைகள் மற்ற சீசனை விட குளிர்க்காலத்தில் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். காரணம் குளிர்காலத்தில் ரத்த நாளங்கள் சுருங்கிவிடும். இதனால் இரத்த ஓட்டமும் மெதுவாகிவிடும். இதன் விளைவாக நரம்புகளில் வலி ஏற்படும். இது போன்ற பிரச்சனைகளை நீங்களும் இந்த குளிர்காலத்தில் அனுபவிக்கிறீர்கள் என்றால், நரம்புகளை பலப்படுத்த இந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும்? எந்த மாதிரியான உணவுகள் நரம்புகளை பலவீனப்படுத்தும் என்று இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
குளிர்காலத்தில் நரம்புகளை பலப்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகள் :
1. முழு தானியங்கள்
ஓட்ஸ், கோதுமை, பிரவுன் அரிசி மற்றும் முழு கோதுமையில் செய்யப்பட்ட ரொட்டி போன்றவற்றை சாப்பிடலாம் அவற்றில் குளூட்டோன் இல்லை. ஆனால் நார்ச்சத்து அதிகமாக உள்ளன.
2. நட்ஸ் மற்றும் விதைகள்
பாதாம், பிஸ்தா, முந்திரி, பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள் போன்றவற்றை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் மின்னரல்கள் உள்ளன. அவை நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்த பெரிதும் உதவும். இதுதவிர, குளிர்காலத்தில் நரம்புகளில் ஏற்படும் வலியையும் குறைக்கும்.
3. பழங்கள்
ஆப்பிள், பேரிக்காய், ஸ்ட்ராபெரி, ப்ளம் போன்ற பழங்களில் கலோரிகள் உள்ளன. இவை இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும். மேலும் நரம்பு கோளாறுகள், நரம்பு வலி போன்றவற்றை குறைக்க உதவிகிறது. எனவே தினமும் ஏதாவது பழத்தை சாப்பிடுங்கள்.
4. காய்கறிகள்
நார்ச்சத்து, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, மெக்னீசியம் நிறைந்த காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். இவை இரத்த ஓட்டத்தை சீராக்கும் மற்றும் நரம்பு சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க உதவும்.
5. அசைவ உணவுகள்
சால்மன், டூனா, மத்தி, கானாங்கொத்தி போன்ற ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த மீன் வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நரம்பு பிரச்சனைகளை சரி செய்ய உதவும். அதுபோல புரதம் அதிகமாக இருக்கும் பனீர், டோஃபு, சிக்கன் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவை நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும்.
குளிர்காலத்தில் நரம்புகளை பலவீனப்படுத்தும் உணவுகள் :
1. பதப்படுத்தப்பட்ட உணவுகள்
சிப்ஸ், பர்கர் ,பீட்சா போன்றவற்றை குளிர்காலத்தில் வாங்கி சாப்பிடுவதில் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் நரம்பு தளர்ச்சி, நரம்புகளில் வலி உள்ளிட்ட நரம்பு சார்ந்த பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளன. ஏனெனில் இவற்றில் ஊட்டச்சத்துக்கள் கம்மி. அதேசமயம் சோடியம் அதிகமாக உள்ளன. அவை இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும். இதனால் நரம்பு சார்ந்த பிரச்சினைகள் வரும்.
2. சர்க்கரை உணவுகள்
சபொதுவாக சர்க்கரையில் கலோரிகள் மற்றும் கிளைசெமிக் குறியீடு அதிகமாக உள்ளன. அவை சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதல்ல குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் இரவு நேரத்தில் சர்க்கரை உணவுகளை சாப்பிடும்போது நரம்பு பிடிப்புகள் அதிகமாகும். இது தவிர எடையையும் அதிகரிக்கும்.
3. பால் மற்றும் பால் பொருட்கள்
உங்களுக்கு ஏற்கனவே நரம்பு சார்ந்த பிரச்சினைகள் இருந்தால் நீங்கள் பால் மற்றும் பால் பொருட்களை குளிர்காலத்தில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இது தவிர லாக்டோ சகிப்புத்தன்மை உள்ளவர்களும் குளிர்காலத்தில் இவற்றை சாப்பிட வேண்டாம்.
4. ஆல்கஹால்
உங்களுக்கு மது அருந்து பழக்கம் அதிகமாக இருந்தால் குளிர்காலத்தில் நரம்பு சார்ந்த பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கும். சில சமயம் நரம்பு சிதைவுக்கு கூட வழிவகுக்கும்.
5. குளுட்டன்
குளிர்காலத்தில் மைதா, பாஸ்தா போன்ற குளூட்டன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். அவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
இந்த குளிர்காலத்தில் நரம்புகளை வலிமையாக்க மேலே சொல்லப்பட்டுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தை காத்துக் கொள்ளுங்கள்.


