- Home
- உடல்நலம்
- இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
'’மில்லியன் கணக்கான மாணவர்கள் மருத்துவர்களாக வேண்டும் என்று கனவு காண்கிறார்கள்... இப்போது நாம் சிறந்த வேலைகளில் ஒன்றை இழக்கப் போகிறோம்"

மனித மருத்துவர்களை விட சிறந்த மருத்துவ சேவை
‘‘அடுத்த மூன்று ஆண்டுகளில் பல விஷயங்கள் மாறும். மருத்துவக் கல்லூரிக்குச் சென்று படிப்பது வீணாகிவிடும்’’ என ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் கணித்துள்ளார். அவரது கணிப்பு மருத்துவக் கல்வி தொடர்பாக சமூக ஊடகங்களில் பெரும் விவாதங்களைத் தூண்டியுள்ளது.
சமீபத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘‘ஒரு சிறந்த மருத்துவராக மாறுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். ஆனால் வரும் ஆண்டுகளில் எல்லாம் மாறும். செயற்கை நுண்ணறிவு (AI) காரணமாக மருத்துவத் துறையில் ஏற்படும் விரைவான மாற்றங்களால் மருத்துவக் கல்லூரிக்குச் செல்வது பயனற்றது. வரும் ஆண்டுகளில், AI ரோபோக்களால் மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகளை வழங்க முடியும். மக்கள் மனித மருத்துவர்களை விட சிறந்த மருத்துவ சேவையைப் பெறுவார்கள்’’ எனத் தெரிவித்தார்.
மருத்துவ கல்லூரிக்கு செல்வது அர்த்தமற்றது.
"அப்படியானால், மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளுக்கு சென்று படிக்கக்கூடாதா..? என்று கேட்டபோது, மஸ்க், "ஆம், அது அர்த்தமற்றது. நீங்கள்... அது எந்த வகையான கல்விக்கும் பொருந்தும் என்று நான் கூறுவேன். ஒரு சிறந்த மருத்துவராக மாறுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். மருத்துவ அறிவு தொடர்ந்து உருவாகி மாறிக்கொண்டே இருக்கிறது. இதனால் எல்லாவற்றையும் தொடர்ந்து கையாள்வது கடினம்.
உலகில் உள்ள அனைத்து அறுவை சிகிச்சை நிபுணர்களையும் விட, ஆப்டிமஸ் ரோபோ மிகச் சிறந்த அறுவை சிகிச்சைகளைச் செய்யும். மனித ரோபோ வளர்ச்சியின் வேகத்தைப் புரிந்து கொள்ள, அதை மூன்று அதிவேக வளர்ச்சிகளால் பெருக்க வேண்டும்: ஏஐ மென்பொருளின் வளர்ச்சி, ஏஐ சிப் செயல்திறனின் அதிவேக வளர்ச்சி, மின் மற்றும் இயந்திர நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி. இவற்றால் அடுத்த மூன்று ஆண்டுகளில் எல்லாம் மாறும். தற்போது பெறும் பராமரிப்பை விட சிறந்த மருத்துவ சேவையை அனைவரும் பெறுவார்கள்.
ஒப்பிட முடியாத சிறந்த ரோபோ சிகிச்சை
இது அனைத்து அனுபவங்களும் பகிரப்படும் ஒரு சுழல்நிலை, பெருக்கக்கூடிய 'மூன்று குறியீட்டு வளர்ச்சி' ஆகும். இன்னும் மனிதர்களை விட மூன்று ஆண்டுகளில் சிறந்த சிகிச்சை அளிக்கும். கிட்டத்தட்ட எல்லா மனிதர்களையும் விட நான்கு ஆண்டுகளில் இன்னும் சிறப்பான சிகிச்சை அளிக்கும். ஐந்து ஆண்டுகள் ஒப்பிடமுடியாததாக அந்த சிகிச்சை இருக்கும். அடுத்து மொத்தமாக ரோபோக்கள் சிகிச்சை இருக்கும்’’ என எலான் மஸ்க் கணித்துள்ளார்.
ஏஐ பயன்பாடு, மருத்துவக் கல்லூரி வீண் என்ற எலான் மஸ்கின் கணிப்பு விவாதங்களை கிளப்பி உள்ளது. ‘‘யாரும் கேட்க விரும்பாத கடுமையான உண்மை’’ என்று ஒரு பயனர் தெரிவித்துள்ளார். ‘‘எலான் மஸ்க் சொல்வது முற்றிலும் சரி. ஏஐ விரைவில் உயர்மட்ட மருத்துவ சேவையை இலவசமாக்கி அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றும். இதனால் மருத்துவக் கல்லூரி இனி பயனற்றதாகத் தோன்றும்’’ என ஒருவர் கூறியுள்ளார்.
மாணவர்களின் மருத்துவர் கனவில் மண்..!
மற்றொரு பயனர், "ஏஐ உலகை பல வழிகளில் மாற்றப் போகிறது. சுகாதாரப் பராமரிப்பு விரைவில் ஒரு பெரிய மாற்றத்தைக் காணும். மருத்துவம் ஏஐ-க்கான ஒரு சோதனைக் களம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர், "மஸ்க்கின் கருத்துடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன். மில்லியன் கணக்கான மாணவர்கள் மருத்துவர்களாக வேண்டும் என்று கனவு காண்கிறார்கள்... இப்போது நாம் சிறந்த வேலைகளில் ஒன்றை இழக்கப் போகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
